வேதாகமத் தியானம் - எண்:- 1,542
'ஆதவன்' 💚ஏப்ரல் 27, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?" (ஏசாயா 48: 14)
தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இஸ்ரவேலர் பிற தெய்வங்களை வழிபட்டபோது தேவன் அவர்களை பாபிலோனிய ராஜாவுக்கு அடிமைகளாக்கினார். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக இருந்தனர். ஆனால், அந்த அடிமைகளான மக்களுக்குள்ளேயும் கர்த்தருக்கு உண்மையாக வாழ்ந்தவர்கள் பலர் இருந்தனர். இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்று. ஆம், தானியேலும் அவரது நண்பர்களும் இதற்கு உதாரணம்.
அன்பானவர்களே, நாம் கர்த்தருக்கேற்றபடி உண்மையான வாழ்வு வாழ்ந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை கர்த்தருக்குச் சித்தமில்லாத இடங்களில் வாழும்படியான நிர்ப்பந்தமான சூழ்நிலையினை சிலவேளைகளில் நமது வாழ்வில் கொண்டுவந்துவிடும். சில உலக வேலைகள் கர்த்தருகேற்றபடி வாழ்வதற்கு மிகவும் இக்கட்டானவை. அத்தகைய வேலைகளில் இருந்துகொண்டு நாம் உத்தமமாக வாழ்வது கடினம். உதாரணமாக, வழக்கறிஞர் தொழில், காவல்துறையில் வேலைபார்ப்பது போன்றவை இரட்சிப்பு அனுபவம் பெற்ற மக்களுக்கு கடினமான காரியம். அதாவது அவர்களுக்கு இந்தத் தொழில்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்வதைப் போன்று சிரமமான வேலைகள்.
ஆனால் இன்றைய தியான வசனம், கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான் என்று கூறுகின்றது. அதாவது, நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக இருந்தால், இத்தகைய இக்கட்டான தொழில்களில் இருந்தாலும் நாம் கர்த்தருக்குச் சித்தமானத்தைச் செய்யமுடியும்; அவர் அதற்கான பலத்தை அவர் நமக்குத் தருவார்.
மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்று. கல்தேயர்கள் என்பது தெற்குத் மெசொப்பொத்தேமியாவில் முக்கிய இடம் பெற்ற ஒரு மக்கள்குழுவாகும். ஆபிரகாமின் பூர்வீகம் கல்த்தேய தேசம்தான். கல்தேயர்கள் நியோ-பாபிலோனிய பேரரசின் ஆட்சியாளர்களாக உயர்ந்தவர்கள். வேதாகமத்தில் பாபிலோன், கல்தேயர் எனும் வார்த்தைகள் பொதுவாக பாபிலோனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கலாம். இன்றைய தியான வசனம் கூறுகின்றது, கர்த்தருக்குச் சித்தமானவனின் கரம் கல்த்தேயர்கள்மேல் இருக்கும் என்று.
அதாவது, நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக வாழும்போது நாம் இருக்கும் சூழ்நிலைகள் நமது ஆவிக்குரிய வாழ்கையினைப் பாதிக்காது. பாபிலோன் போன்ற அந்தச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தருக்குப் பிரியமானத்தைச் செய்து வெற்றி வாழ்க்கை வாழமுடியும். மட்டுமல்ல, அத்தகைய அடிமைச் சூழ்நிலையினை நாம் வெற்றிகொள்ளவும் முடியும்.
ஆம் அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக, கர்த்தருக்கு முன்னுரிமைகொடுத்து வாழ முயலவேண்டும். அப்படி வாழும்போது பாபிலோன் போன்ற எந்த முரண்பாடான, அடிமைச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தருக்குச் சித்தமானத்தைச் செய்வது மட்டுமல்ல, எதிர்மறைச் சூழ்நிலைகளையும் வெற்றிகொண்டவர்களாகவும் வாழமுடியும். கிறிஸ்துவின் நறுமணத்தை நாம் அந்த மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வாழமுடியும்.
இதனால்தான் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." (2 கொரிந்தியர் 2: 14) என்று நமக்குத் தனது அனுபவம் மூலம் திடன்தருகின்றார் அப்போஸ்தலரான பவுல். கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ முயலுவோம். சூழ்நிலைகளை வெற்றியுடன் மேற்கொள்ளும் பலத்தை அவர் நமக்குத் தருவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation – No. 1,542
AATHAVAN 💚 April 27, 2025. 💚
Sunday
"All ye, assemble
yourselves, and hear; which among them hath declared these things? The LORD
hath loved him: he will do his pleasure on Babylon, and his arm shall be on the
Chaldeans." (Isaiah 48:14, KJV)
When the Israelites disobeyed
God and worshiped other gods, the Lord delivered them into the hands of the
Babylonian king. Thus, the people of Israel became slaves under the
Babylonians. However, even among those enslaved, there were many who lived
faithfully for the Lord. Today’s meditation verse says, "The LORD hath
loved him: he will do his pleasure on Babylon." Yes, Daniel and his
friends stand as examples of this truth.
Beloved ones, even when we
strive to live faithfully and pleasing unto the Lord, certain situations in
life may pressure us to dwell in environments that are not aligned with God's
will. Some secular occupations make it extremely challenging to live a godly
life. For instance, professions like that of a lawyer or working in the police
force can be quite difficult for those who have had a genuine salvation
experience. These occupations can feel similar to living as captives in
Babylon.
However, today's meditation
verse assures us that "the LORD hath loved him: he will do his pleasure
on Babylon." That is, even if we are in challenging workplaces or
difficult environments, if we are beloved of the Lord, He will enable us to do
His pleasure there. He will grant us the strength needed to stand firm.
Moreover, the verse continues,
saying, "his arm shall be on the Chaldeans." The Chaldeans
were a prominent people group in southern Mesopotamia. Abraham himself was from
the land of the Chaldeans. Historically, the Chaldeans rose to power as rulers
of the Neo-Babylonian empire. In Scripture, the terms "Babylon"
and "Chaldeans" are often used interchangeably. Today’s verse
indicates that the hand of the one who does the Lord’s pleasure shall be strong
over the Chaldeans.
In other words, when we live
as those beloved by God, our surroundings — no matter how oppressive — cannot
destroy our spiritual life. Even in a "Babylonian" environment, we
can live victoriously by doing what pleases the Lord. Not only that, but we can
also overcome the bondage of those situations.
Yes, dear ones, in all
circumstances, we must strive to live as those pleasing unto the Lord, giving
Him the first place in our lives. When we do so, even in the most conflicting
and enslaving situations like Babylon, we will not only do His pleasure but
also live as overcomers of negative circumstances. We will reveal the fragrance
of Christ among the people around us.
Thus, Apostle Paul confidently
shares his experience saying,
"Now thanks be unto God,
which always causeth us to triumph in Christ, and maketh manifest the savour of
his knowledge by us in every place." (2 Corinthians 2:14,
KJV)
Let us strive to live a life
pleasing to the Lord. He will grant us the strength to overcome all
circumstances victoriously.
✝️ Gospel
Message: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment