வேதாகமத் தியானம் - எண்:- 1,531
'ஆதவன்' 💚ஏப்ரல் 16, 2025. 💚புதன்கிழமை
"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." ( சங்கீதம் 27: 5)
தேவனுக்குள் உண்மையாக வாழும் மனிதன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். இந்த வார்த்தைகளை தாவீது ராஜா தான் அனுபவித்த அனுபவத்தால் கூறுகின்றார். பலவேளைகளில் தேவன் தாவீதை அவரது பகைவர்களுக்குத் தப்புவித்ததை நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கண்டுகொள்ளலாம்.
அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நம்மையும் இதுபோலத் தப்புவிப்பார். தேவன் எவ்வாறு தன்னை தப்புவித்தார் என்பதை தாவீது, "அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து" என்று கூறுகின்றார். அதாவது எதிரிகள் அவரை நெருக்கும்போது தேவனே அவரைத் தனது கூடாரத்தில் ஒளித்துவைத்து தப்புவித்தார் என்கின்றார்.
மட்டுமல்ல, அவரை நெருக்கிய எதிரிகளை தேவன் அழித்து ஒழித்தார். இதனையே அவர் இன்றைய தியான வசனத்துக்கு முன்பாக இரண்டாம் வசனத்தில் கூறுகின்றார், "என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருங்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்." ( சங்கீதம் 27: 2) என்று. மட்டுமல்ல, தொடர்ந்து தேவன், "என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." என்று தாவீது தனது விசுவாசத்தை அறிக்கையிடுகின்றார்.
யோசேப்பின் வாழ்கையினைப் பாருங்கள், அவரது சொந்தக் சகோதரர்களே அவரைக் கொலை செய்ய முயன்றார்கள். பின்னர் அவரை இருபது வெள்ளிக்காசுக்கு விற்பனைசெய்தார்கள். எகிப்தில் போத்திபாரின் மனைவி அவருக்கு எதிரியாக இருந்து அவரைச் சிறைச்சாலைக் கைதியாக்கினாள். ஆனால் அவரைத் தேவன் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்தினார்.
நாமும் தாவீதைப்போல, யோசேப்பைபோல உறுதியான விசுவாசத்துடனும் தேவனுக்குமுன் உண்மையுடனும் இருப்போமானால் நமக்கும் அவர் இதுபோலச் செய்ய இன்றும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். உலக வாழ்வில் நமக்குப் பல்வேறுவித தீங்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. தீராத நோய்கள், பிரச்சனைகள், துன்பங்கள், கடன்பாரங்கள் இவை நம்மை நெருக்கும் சூழ்நிலையில் நாமும் இன்றைய தியான வசனத்தில் அறிக்கையிட்டத் தாவீதைப்போல நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு ஜெபிக்கவேண்டியது அவசியம்.
"நான் தேவனின் கரத்தில் இருக்கிறேன், அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, இந்தக் கொடியத் துன்பச்சூழ்நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றுவார். என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய இந்தப் பொல்லாத காரியங்கள் என்னை விழுங்கப்பார்க்கையில் அவற்றை அவர் மாற்றுவார். மட்டுமல்ல, மற்றவர்களுக்குமுன் அற்பமாகக் காணப்படும் என்னை அவர் கன்மலையின்மேல் உயர்த்துவார்." என்று விசுவாசத்துடன் கூறுவோம்.
ஆம் அன்பானவர்களே, அவரது கூடாரத்தின் மறைவில் அடைக்கலமாகச் சேர்ந்துகொள்வோம். தாவீதை அரசனாக உயர்த்திய தேவன், யோசேப்பை எகிப்தின் பிரதமராக உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்த வல்லவராகவே இருக்கிறார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,531
AATHAVAN 💚 April
16, 2025 💚
Wednesday
“For in the time of
trouble he shall hide me in his pavilion: in the secret of his tabernacle shall
he hide me; he shall set me up upon a rock.” (Psalm 27:5, KJV)
Today’s meditation verse is a
confession of faith by a man who walks faithfully with God. King David speaks
these words from his own experience. As we read through the Bible, we find many
instances where God delivered David from his enemies.
Beloved, when we live a life
that pleases God, He too will deliver us in the same way. David testifies about
how God delivered him, saying, “He shall hide me in his pavilion: in the
secret of his tabernacle shall he hide me.” That is, when his enemies
closed in on him, God Himself sheltered and delivered him by hiding him in His
tabernacle.
Not only that, God also
destroyed the enemies who pursued David. Just a verse earlier, David says, “When
the wicked, even mine enemies and my foes, came upon me to eat up my flesh,
they stumbled and fell.” (Psalm 27:2, KJV)
And he continues to affirm his
faith by declaring, “He shall set me up upon a rock.”
Consider the life of Joseph.
His own brothers conspired to kill him and eventually sold him for twenty
pieces of silver. Later, in Egypt, Potiphar’s wife falsely accused him and had
him imprisoned. But God hid him in His pavilion, covered him in His secret
place, and in time lifted him up to be the Prime Minister of Egypt.
If we too, like David and
Joseph, remain steadfast in our faith and true before God, He is faithful even
today to do the same for us. In our earthly lives, we may face many kinds of
troubles—chronic illnesses, problems, sorrows, and burdens of debt. In such
times of distress, it is essential that we, like David in today’s verse,
proclaim our faith and pray boldly:
“I am in the hand of God. He
will hide me in His pavilion, He will shelter me in the secret of His
tabernacle, and He will deliver me from this dire situation. When wicked
things—my enemies and foes—attempt to devour me, He will turn them away. Not
only that, He will exalt me before others, even if they see me now as
insignificant. He will set me upon a rock.”
Yes, dear ones, let us take
refuge in the secret place of His tabernacle. The God who exalted David as king
and Joseph as the ruler of Egypt is still able to lift us up in His time.
Gospel Message by:
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment