வேதாகமத் தியானம் - எண்:- 1,530
'ஆதவன்' 💚ஏப்ரல் 15, 2025. 💚செவ்வாய்க்கிழமை
"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1: 10)
மனிதர்களைப் பிரியப்படுத்தும் ஊழியம், தேவனைப் பிரியப்படுத்தும் ஊழியம் என இருவகை ஊழியங்களை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். தேவனைப் பிரியப்படுத்தும் ஊழியம் செய்பவர்கள் தங்களை நாடிவரும் மக்கள் கூட்டத்தைப் பெரிதாகப் பார்க்கமாட்டார்கள். சத்தியத்தைமட்டும் எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்துவார்கள். ஆனால் மனிதரைப் பிரியப்படுத்தும் ஊழியம் செய்பவர்கள் தங்களை நாடிவரும் மக்கள் கூட்டத்தைத் திருப்திப்படுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்க முயன்று தேவனைவிட்டுத் தொலைந்துபோய்விடுகின்றனர்.
தேவன் கூறும் வேத சத்தியங்களை வேதம் கூறும் அடிப்படையில் மக்களுக்கு விளக்கவேண்டியதே ஊழியர்கள் செய்யவேண்டிய பணி. இதற்கு மாறாக மனிதர்களைத் திருப்திப்படுத்தவேண்டி வேதம் கூறாத தவறான காரியங்களை கூறிக்கொண்டிருப்போமானால் நாம் மனிதர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கின்றோம் என்று பொருள். அத்தகைய மனிதர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அல்ல என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
எனவேதான் அபோஸ்தரான பவுல், இன்றைய தியான வசனத்தில், "மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." என்று கூறுகின்றார். அன்பானவர்களே, இந்த வசனம் ஊழியர்களுக்கு மட்டுமானதல்ல என்று எண்ணுகின்றேன். சாதாரண விசுவாசிகளாக நாம் இருந்தாலும் இதுவே பொருந்தும்.
நாம் நமது நண்பர்களையும், குடும்பத்தினரையும் பிரியப்படுத்திட வேண்டி கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு முரணாக நடப்போமானால் நாம் மனிதர்களைப் பிரியப்படுத்துபவர்களாக மாறிவிடுகின்றோம். ஏவாளைத் திருப்திப்படுத்தவேண்டி ஆதாம் விலக்கபட்டக் கனியை உண்டு பாவம் செய்தது இப்படித்தான். மாறாக, நாம் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக இருந்து கிறிஸ்துவை முன்னிலைப்படுத்திச் செயல்படுவோமானால் தற்காலத்தில் மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் பிற்பாடு நாம் சொல்வதையும் செய்தவைகளையும் ஏற்றுக்கொண்டு நம்மை அங்கீகரிப்பார்கள்.
தனக்கு உண்மையாக ஊழியம் செய்பவர்களை தேவன் புறக்கணிப்பதில்லை. இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்." ( ரோமர் 14: 18) என்று கூறுகின்றார். தேவனுக்கேற்ற நமது ஊழியத்தையும் போதனைகளையும் அதிக அளவில் மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தேவன் அவற்றை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதே மகிமையான காரியமாக இருக்கும்.
இன்றைய தியான வசனம் கூறும் இருவித ஊழியர்களை அடையாளம்கண்டு சரியானவர்களை தேர்வுசெய்து வாழும்போதே நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெறமுடியும். உலகமே ஒருவர்பின் சென்றாலும் பரவாயில்லை, நாம் கிறிஸ்துவின் பின்னால் செல்லவே அழைக்கப்பட்டுள்ளோம். அப்படி கிறிஸ்துவை முன்னிலைப்படுத்தும் மனிதர்கள்பின் வெறும் ஐந்து நபர்கள் மட்டுமே இருந்தாலும் ஆறாவது நபராக நாம் சேர்ந்துகொள்வோம்.
வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு தேவனை அறியும் ஆர்வமுடன் வாசிப்போம். "தேவனே உமது ஆவியானவரே என்னை சரியான பாதையில் நடத்தட்டும்" என நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். அப்போது தேவனைப் பிரியப்படுத்த ஊழியம் செய்யும் நபர்களை நாம் கண்டுகொள்ள அவர் உதவுவார். இதற்கு மாறாக உலக அறிவோடு யாருக்கு கூட்டம் சேர்கின்றது என்று கூட்டத்தைப்பார்த்து ஓடிக்கொண்டிருப்போமானால் நாம் பரிதபிக்கத்தக்கவர்களாக மாறிவிடுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,530
AATHAVAN 💚 April
15, 2025 💚
Tuesday
“For do I now persuade men, or God? or do I
seek to please men? for if I yet pleased men, I should not be the servant of
Christ.” (Galatians 1:10, KJV)
In today’s meditation verse,
the Apostle Paul highlights two kinds of ministries: one that seeks to please
men, and another that seeks to please God. Those who minister to please God do
not give undue importance to the size of the crowd that comes to hear them.
They simply proclaim the truth and guide people in the right path. But those
who minister to please men aim to satisfy the crowd and, in the process, often
drift away from God, seeking financial gain.
The duty of a servant of God
is to explain biblical truths based solely on the foundation of the Word. If we
begin to declare unbiblical ideas just to satisfy people, it means we are
expecting something in return from them. Today’s verse clearly states that such
people are not the servants of Christ.
That is why the Apostle Paul
boldly declares: “If I yet pleased men, I should not be the servant of
Christ.” Dear ones, I believe this verse does not apply only to ministers
or preachers. Even as ordinary believers, this verse is relevant to us.
If we go against the
commandments of Christ just to please our friends or family, we become
people-pleasers. This is exactly how Adam sinned—he sought to satisfy his wife Eve
and ate the forbidden fruit, thus disobeying God. On the contrary, if we are
zealous for Christ and act in ways that glorify Him, even if people do not
understand us at present, later on they will accept and acknowledge our words
and actions.
God never forsakes those who
serve Him faithfully. That’s why Apostle Paul says,
“For he that in these things
serveth Christ is acceptable to God, and approved of men.” (Romans 14:18, KJV)
Even if our teachings and
service are not widely accepted by people, the fact that they are accepted by
God is far more glorious.
We must identify the two types
of ministers mentioned in today’s verse and choose to follow the right kind.
Only then can we be victorious in our spiritual life. Even if the whole world
follows someone else, it doesn’t matter—we are called to follow Christ. Even if
there are only five others following Christ, let us be the sixth!
Let us read the Bible with a
desire to know God, guided by the Holy Spirit. Let us surrender ourselves to
God and pray, “Let Thy good Spirit lead me into the land of uprightness.”
When we do so, God will help us recognize those who truly serve to please Him.
But if we chase after popularity and run toward where the crowd is, relying on
worldly wisdom, we will become pitiable.
Gospel Message by:
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment