🍒Meditation verse - எரேமியா 13: 23 / Jeremiah 13:23

 வேதாகமத் தியானம் - எண்:- 1,528

'ஆதவன்' 💚ஏப்ரல் 13, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை 


"எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13: 23)

மனிதன் இயல்பிலேயே துர்க்குணம் உள்ளவனாகவே இருக்கின்றான். "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." ( சங்கீதம் 51: 5) என்று வேத வசனம் கூறுகின்றது. இப்படி இருப்பதால் மனிதனால் நேர்மையாக வாழ முடிவதில்லை. இதனை அறிந்ததால் தேவன் கூறுகின்றார்:- "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன்  சிறுவயதுதொடங்கி பொல்லாததாயிருக்கிறது" (ஆதியாகமம் 8:21) என்று. 

ஒரு வயது குழந்தைகள் இரண்டை சேர்ந்து விளையாடவிட்டு ஒரேயொரு பொம்மையை அவர்களிடம் கொடுத்துப்பாருங்கள். அவை ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் சண்டைபண்ணுவதுபோல போராடும். ஒரு குழந்தை பொம்மையைக் கைப்பற்றிவிட்டால் மற்றகுழந்தை அதனைப் பொறுக்கமுடியாமல் அழுது  கூப்பாடுபோடும். ஆம், போட்டி, பொறாமை போன்ற குணங்கள் இயல்பிலேயே அவற்றுக்குள் இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். இந்த குணம் வளர வளர மனிதனுக்குள் அதிகரிக்கின்றது. 

இதனையே தேவன் "எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." என்று எரேமியா மூலம் கூறுகின்றார். எப்படி ஒரு எத்தியோப்பிய நீக்ரோ தனது தோலின் நிறத்தையும் சிவிங்கி தனது உடலிலுள்ள புள்ளிகளையும் மாற்றமுடியாதோ அதுபோல மனிதன் தனது  சுய முயற்சியால் இந்தத்  துர்க்குணத்தை மாற்றமுடியாது என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

நாம் மனதளவில் நன்மைசெய்து நல்லவர்களாக இருக்கவேண்டுமென்று எண்ணினாலும் நமக்குள்ளிருக்கும் பாவ குணம் நம்மை நன்மைசெய்ய விடுவதில்லை. இதனையே அப்போஸ்தலரான பவுல், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7: 18, 19) என்கின்றார். 

ஆனால், தேவனது கரம் நம்மில் செயல்பட அனுமதிப்போமானால் நம்மால் இதனை மாற்றமுடியும். ஆம், கர்த்தராகிய இயேசுவை நமது வாழ்வில் ஏற்றுக்கொள்வோமானால் அவரது வல்லமையால் நமது துர்குணத்தை மாற்றிட முடியும் என்கிறார் இயேசு கிறிஸ்து. "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால்   ஒன்றும்    செய்யக்  கூடாது." (யோவான் 15:5) என்று அவர் கூறவில்லையா? திராட்சைச் செடியோடு இணைந்திருக்கும் கொடிகள் கணிதருவதுபோல அவரோடு நாம் இணைந்திருந்தோமானால் நம்மால் துர்க்குணத்தை மாற்றி கனிதரமுடியும். 

ஆம் அன்பானவர்களே எத்தியோப்பியனும் சிவிங்கியும் தங்கள் தோலை மாற்றிடமுடியாது. ஆனால் அவைகளைப் படைத்த தேவனால் அது கூடாததல்ல. அவர் நினைத்தால் அதுவும் முடியும்.  அதாவது, தேவ கிருபை இருந்தால் அது முடியும். அதுபோலவே,  தீமைசெய்யப்பழகின மனிதர்களையும் நன்மை செய்பவர்களாக அவரால் மாற்ற முடியும். நாம் கிறிஸ்துவின் ஆவியின் பிரமானத்துக்குள் வரும்போது பாவம் அதன் விளைவான ஆத்தும மரணம் இவைகளிலிருந்து விடுதலையாக முடியும்.  "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2)

எனவே கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அப்போது நமது எத்தியோப்பிய தோலையும் சிவிங்கியின் புள்ளியையும் தேவன் மாற்றி அதிசயம் செய்வார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Scripture Meditation – No: 1,528

AATHAVAN 💚 April 13, 2025 💚 Sunday

“Can the Ethiopian change his skin, or the leopard his spots? then may ye also do good, that are accustomed to do evil.” (Jeremiah 13:23, KJV)

By nature, man is inherently sinful. As the Scripture says, “Behold, I was shapen in iniquity; and in sin did my mother conceive me.” (Psalm 51:5, KJV)

Because of this sinful nature, it is impossible for man to live righteously on his own. God, knowing this, declared: “The imagination of man's heart is evil from his youth.” (Genesis 8:21, KJV)

Let two one-year-old children play together and then offer them a single toy. You will see them fighting over it, refusing to share. If one gets the toy, the other cries uncontrollably. From such a young age, we can observe qualities like selfishness and envy. As a person grows, these traits only become more deeply ingrained.

God illustrates this truth through the words of the prophet Jeremiah: “Can the Ethiopian change his skin, or the leopard his spots? then may ye also do good, that are accustomed to do evil.” (Jeremiah 13:23, KJV)

Just as the Ethiopian cannot change the colour of his skin and the leopard cannot change its spots, so too, man cannot rid himself of his sinful nature through his own effort. This is the declaration of the Lord God.

Even though we may desire in our minds to do good and live uprightly, the sinful nature within us does not allow us to do so. The apostle Paul expresses this struggle:

“For I know that in me (that is, in my flesh,) dwelleth no good thing: for to will is present with me; but how to perform that which is good I find not. For the good that I would I do not: but the evil which I would not, that I do.” (Romans 7:18-19, KJV)

However, if we allow the hand of God to work within us, this sinful nature can be transformed. When we receive the Lord Jesus into our lives, His power can change our nature. Jesus said:

“I am the vine, ye are the branches: He that abideth in me, and I in him, the same bringeth forth much fruit: for without me ye can do nothing.” (John 15:5, KJV)

Just as branches that remain connected to the vine bear fruit, we too, by remaining in Christ, can overcome our sinful nature and bear the fruit of righteousness.

Yes, beloved, the Ethiopian and the leopard cannot change their skin or spots. But the Creator who made them can do so if He wills. With God’s grace, it is not impossible. In the same way, even those accustomed to doing evil can be transformed by Him into doers of good.

When we come under the law of the Spirit of Christ, we are delivered from the law of sin and death: “For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death.” (Romans 8:2, KJV)

Therefore, let us surrender ourselves completely to Christ. Then, the Lord will perform a miracle by changing our Ethiopian skin and leopard’s spots.

Gospel Message by: Bro. M. Geo Prakash

                                         

No comments: