வேதாகமத் தியானம் - எண்:- 1,532
'ஆதவன்' 💚ஏப்ரல் 17, 2025. 💚வியாழக்கிழமை
"தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக் கடவோம்." (1 தெசலோனிக்கேயர் 5: 7, 8)
நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து எழுதும்போது அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நாம் எப்போது அவர் வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
"தூங்குகின்றவர்கள்" என்று அவர் கூறும் வார்த்தை, கிறிஸ்துவின் வருகையினைக்குறித்து அலட்சியமாக இருபவர்களைக் குறிக்கின்றது. அதாவது அவரது வருகையினைக் குறித்து எந்த ஆர்வமுமில்லாமல் இருபதைக் குறிக்கின்றது. "வெறிகொள்ளுகிறவர்கள்" என்பது குடிவெறி கொண்டிருப்பதை மட்டுமல்ல; மாறாக, பாவச் சேற்றில் சிக்குண்டு, பாவத்தின்மீது நாட்டம்கொண்டு வாழ்வதைக் குறிக்கின்றது.
இதனையே அவர், "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்" என்று குறிப்பிடுகின்றார். அதாவது இத்தகைய மனிதர்கள் இருளின் பிள்ளைகள். அவர்களில் ஒளி இல்லாததால் அவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் இரவாகவே இருக்கின்றது.
தேவன் நம்மை இப்படி வாழ அழைக்கவில்லை. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள்; அந்த வியத்தகு ஒளியின் பிள்ளைகள். இதனையே அவர், "நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே." (1 தெசலோனிக்கேயர் 5: 5) என்கின்றார். இந்தப் "பகலுக்குரியவர்களாகிய நாமோ
தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக் கடவோம்" என்கின்றார்.
அதாவது, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட ஒளியின் பிள்ளைகளாகிய நாம் அவரது வருகையினைக்குறித்து அலட்சியமில்லாமல், பாவத்தில் விழுந்துவிடாமல் தெளிவுள்ளவர்களாக கிறிஸ்துவின் ஒளியில் வாழவேண்டும் என்கின்றார்; மட்டுமல்ல, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல், சகோதர அன்புடன் நமது இரட்சிப்பை இழந்துபோகாமல் வாழவேண்டும்.
மேலும், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மீட்படையவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். இருளின் மனநிலையோடு தூங்குபவர்களாக இருந்தாலும் விழித்திருப்பவர்களாக இருந்தாலும் நாம் அவரோடுகூட பிழைத்திருக்கவே அவர் விரும்புகின்றார். "நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே." (1 தெசலோனிக்கேயர் 5: 10)
எனவே விழித்திருக்கும் நாம் விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டு எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக இருப்பது மட்டுமல்ல, தூங்கிக்கொண்டிருக்கும் சக மனிதர்களை எழுப்பிவிட முயல்பவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம்.
கிறிஸ்துவை நாம் உண்மையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அந்த அன்பை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டுமெனும் ஆர்வம் நமக்குள் இயல்பாகவே ஏற்படும். அந்த ஆர்வத்துடன் அன்போடு கிறிஸ்துவை நாம் அறிவிக்கும்போது தூங்குபவர்கள் விழிப்படைவார்கள். அப்படி மற்றவர்களை உணர்வூட்டும் பலத்தையும் ஞானத்தையும் நமக்கு அருளும்படி தேவனிடம் வேண்டுதல் செய்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation – No. 1,532
AATHAVAN 💚 April
17, 2025 – Thursday
“For they that sleep
sleep in the night; and they that be drunken are drunken in the night. But let
us, who are of the day, be sober, putting on the breastplate of faith and love;
and for a helmet, the hope of salvation.” — 1
Thessalonians 5:7,8 (KJV)
While writing about the second
coming of our Lord and Saviour Jesus Christ, the Apostle Paul presents today’s
meditation verse. No one knows the exact time of Christ’s return. But Paul
emphasizes that we must always be prepared to meet Him whenever He comes.
The term “they that sleep”
refers to those who are indifferent about the return of Christ—those who live
with no interest or awareness of His coming. The phrase “they that be
drunken” doesn’t merely imply drunkenness with alcohol; rather, it speaks
of those who are entangled in the mire of sin and live with a love for it.
This is what Paul means when
he says,
“For they that sleep, sleep in
the night; and they that be drunken are drunken in the night.” Such
people are children of darkness. Since they do not have the light, their life
is perpetually shrouded in night.
But God has not called us to
live in such a way. We have been redeemed by the blood of Jesus Christ our
Lord, and we are the children of that marvellous light. As Paul says: “Ye
are all the children of light, and the children of the day: we are not of the
night, nor of darkness.” — 1 Thessalonians 5:5 (KJV)
He continues, “But let us,
who are of the day, be sober, putting on the breastplate of faith and love; and
for an helmet, the hope of salvation.” — 1 Thessalonians 5:8 (KJV)
In other words, as redeemed
children of light, we must not be indifferent about the return of Christ or
fall into sin. Instead, we should live in clarity and sobriety, walking in His
light. We must remain steadfast in our faith in Christ, be filled with brotherly
love, and live in such a way that we never lose the joy of our salvation.
Furthermore, it is God’s
desire that none should perish but that all should be saved. Whether we are
awake or asleep, He wants us to live together with Him. “Who died for us,
that, whether we wake or sleep, we should live together with him.”— 1 Thessalonians 5:10 (KJV)
Therefore, those of us who are
awake must not only remain clothed with the breastplate of faith and love and
the helmet of salvation, being ever ready for His return, but we must also
strive to awaken those who are still sleeping in darkness.
If we are truly experiencing
Christ, it is only natural that we will have a genuine desire to share that
love with others. When we proclaim Christ with that loving passion, the
sleeping ones will awaken. Let us earnestly ask God to grant us the wisdom and
power to stir up others to this awareness.
Divine Message by:
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment