வேதாகமத் தியானம் - எண்:- 1,526
'ஆதவன்' 💚ஏப்ரல் 11, 2025. 💚வெள்ளிக்கிழமை
"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2: 13)
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவம்செய்தவர்கள் மனம்திரும்புதல் வேண்டித் தங்கள் உடலில் சாம்பலைப் பூசிக்கொள்வதும் தங்களது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு சாக்கு உடை அணிந்துகொள்வதும் வழக்கமாக இருந்தது. பலர் உண்மையான உணர்வுடன் இப்படிச் செய்தாலும் மிகப்பலர் இதனை ஒரு சடங்காகவே செய்தனர். மெய்யான மனம்திரும்புதல் இருக்கிறதோ இல்லையோ, தாங்கள் இப்படிச் செய்வதன்மூலம் மற்றவர்கள் தங்களை மேன்மையாகக் கருதவேண்டும் எனும் எண்ணத்துடனும் பலர் இப்படிச் செய்தனர்.
எனவேதான் யோவேல் தீர்க்கத்தரிசி மூலம் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். வெளி அடையாளச் சடங்குகள் மூலமல்ல, மெய்யான இருதய உணர்வோடு பாவத்தை நாம் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டவேண்டும் என்கின்றார். இதனையே அவர், "இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்" என்கின்றார்.
புலம்பல் நூலிலும் இதனையே நாம் வாசிக்கின்றோம், "நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்." ( புலம்பல் 3: 40, 41) என்று. கைகளை மட்டும் உயர்த்தி ஜெபித்தால் போதாது, மாறாக நமது இருதயமும் தேவனை நோக்கி உயர்த்தப்படவேண்டும்.
தேவன் கிருபையும் இரக்கமும் நிறைந்தவராக இருப்பதால், "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." (சங்கீதம் 103: 10) நமது பாவத்துக்கு அவர் தண்டனையைத் தந்தாலும் தனக்குள் அதுகுறித்து மனம் வருந்துபவராக இருக்கின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." என்று வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, எல்லோரும் ஜெபிக்கிறார்கள் என்று கூட்டத்தோடு கூட்டமாக நாமும் கூப்பாடுபோட்டு ஜெபிப்பதால் பலனில்லை. பாவம் மன்னிக்கப்பட பரிகாரமாக ஒறுத்தல்கள் செய்வதில் பலனில்லை. சகோதர மதத்தவர்கள் குறிப்பிட்ட காலங்களில் ஆறுகளிலும் கடலிலும் மூழ்கியெழுந்து பாவங்கள் மன்னிக்கப்பட்டது என எண்ணிக்கொள்வதுபோல நாமும் எண்ணிக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. பாவமன்னிப்பு பெறும்போது நமது இருதயம் அதனை உணர்ந்துகொள்ளும். மெய்யான சமாதானம் நம்மை நிரப்பும். கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது இரத்தத்தால் கழுவப்படும்போது மட்டுமே இந்த மீட்பு அனுபவம் கிடைக்கும்.
ஆம் அன்பானவர்களே, நமது தேவன் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை நேசிக்கின்றார். நமது அக்கிரமங்களை அவர் எண்ணியிருந்தால் நாம் அவர்முன் நிற்கமுடியாது. "கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே." ( சங்கீதம் 130: 3) அவர் நம்மை நேசிப்பதால் அவரிடம் மெய்யான இருதய உணர்வோடு மன்னிப்பை வேண்டும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, பாவத்தையே நம்மைவிட்டு அகற்றுவார். "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்." ( சங்கீதம் 103: 12) என்று கூறப்பட்டதுபோல, பாவம் நம்மைவிட்டு அகற்றப்படும்.
நமது இருதயங்களைக்கிழித்து, தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புவோம். அவரது பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட வேண்டுவோம். அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவராக இருப்பதால் நம்மைப் புறம்பேத் தள்ளமாட்டார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation – No: 1,526
AATHAVAN 💚 April
11, 2025, 💚
Friday
"And rend your heart, and
not your garments, and turn unto the Lord your God: for he is gracious and
merciful, slow to anger, and of great kindness, and repenteth him of the
evil." (Joel 2:13, KJV)
In Old Testament times, when
people sinned and wanted to repent, it was customary for them to put ashes on
their bodies, tear their clothes, and wear sackcloth. While some did this with
genuine conviction, many followed these rituals merely as a tradition. Whether
they had true repentance or not, they performed these acts to appear righteous
before others.
That is why God, through the
prophet Joel, speaks the verse we meditate on today. He instructs us not to
rely on outward rituals but to confess our sins to Him with a sincere heart and
seek forgiveness. Hence, the call is to “rend your heart, and not your garments”
and return to the Lord your God.
We read a similar thought in
the book of Lamentations: "Let us search and try our ways, and turn again
to the Lord. Let us lift up our heart with our hands unto God in the
heavens." (Lamentations 3:40-41, KJV) Lifting up our hands alone in
prayer is not enough—we must lift up our hearts toward God as well.
Because our God is full of
mercy and compassion, "He hath not dealt with us after our sins; nor
rewarded us according to our iniquities." (Psalm 103:10, KJV)
Though He punishes sin, He grieves over doing so. As today’s verse says, “He
repenteth him of the evil.”
Yes, beloved, it is not enough
to join a crowd in loud prayers. Performing rituals or penances cannot earn us
forgiveness. Just as some from other faiths believe their sins are washed away
by immersing in rivers or seas at certain times, we too can fall into
meaningless traditions. But true forgiveness is felt deep within the heart.
Genuine peace will fill us when we surrender ourselves to Christ and are washed
by His precious blood. Only then can we experience true redemption.
Yes, dearly beloved, although
God hates sin, He loves the sinner. If He were to mark our iniquities, we could
not stand before Him: "If thou, Lord, shouldest mark iniquities, O Lord,
who shall stand?" (Psalm 130:3, KJV) But because He loves us, when
we approach Him with a sincere and contrite heart, our sins are forgiven. Not
only that—He removes our sins far from us. "As far as the east is from the
west, so far hath he removed our transgressions from us." (Psalm
103:12, KJV)
Let us rend our hearts and
return to the Lord our God. Let us be cleansed by His holy blood. Because He is
full of mercy, compassion, long-suffering, and abundant grace, He will not cast
us away.
Gospel Message by: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment