Saturday, January 04, 2025

Meditation Verse - வெளி. விசேஷம் 22: 14 / Revelation 22:14

 வேதாகமத் தியானம் - எண்:- 1,432

'ஆதவன்' 💚ஜனவரி 09, 2025. 💚வியாழக்கிழமை


"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22: 14)

ஆதியில் ஏதேனில் தேவன் ஜீவ விருட்சத்தையும் நன்மைதீமை அறியும் விருட்சத்தையும் வைத்து நன்மைதீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் உண்பதற்கு ஆதாம் ஏவாளுக்குத் தடை விதித்திருந்தார். ஆனால் அவர்களோ தடை செய்யப்பட்ட  நன்மைதீமை அறியும் விருட்சத்தின் கனியை உண்பதற்கே ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். அதனை  உண்டு தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்தனர். எனவே பாவிகளான அவர்கள் ஜீவ விருட்சத்தின் கனியை உண்பதற்குத் தேவன் தடை செய்தார். "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3: 24) என்று வாசிக்கின்றோம்.

ஆதாம் ஏவாள் புறக்கணித்த ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தகுதியுள்ளவர்களாக அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

இங்கு "வாசல் வழியாய்"  எனும் வார்த்தைகள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. அது எந்த வாசல்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாசல். அவர் வழியாக உள்ளே நுழைபவர்களுக்கே ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரம் உண்டு. "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10: 9) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

ஆடுகளாகிய நமக்கு பரலோகம் செல்ல வாசல் அவரே. "ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 10: 7) என்று அழுத்திக் கூறுவதை நாம் காணலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் புறக்கணித்து வேறு வழியாக நுழைபவர்கள் விண்ணரசில் பிரவேசிக்கமுடியாது. காரணம் அத்தகையவர்கள் கள்ளரும் கொள்ளைக்காரருமாய் இருக்கின்றார்கள். "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10: 1)

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் நாம் கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். அவரது கற்பனைகளை நாம் வாழ்வாக்கி வாழும்போதுதான் அந்த அதிகாரம் நமக்குக் கிடைக்கும். ஏனோதானோ என்று வாழும்போது நாம் புறக்கணிக்கப்பட்டவர்களாக பரலோக நகருக்குள் நுழைய அனுமதியின்றி வெளியே நிற்க நேரிடும். "நாய்களும், சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22: 15) என்று வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவாகிய வாசல் வழியே நுழைய முற்படுவோம்; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாக அதன் கனியை ருசிப்பவர்களாக நித்திய ஜீவனைக் கண்டடைவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Scripture Meditation - No. 1,432 

AATHAVAN💚 January 9, 2025, 💚 Thursday 

"Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city." (Revelation 22:14, KJV)  

In the beginning, God placed the tree of life and the tree of knowledge of good and evil in Eden and commanded Adam and Eve not to eat the fruit of the tree of knowledge of good and evil. However, their desire was fixed on the forbidden fruit, and they ate it, sinning against God. As a result, God barred sinners from eating the fruit of the tree of life: "So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life." (Genesis 3:24, KJV)

Today’s meditation verse declares that those who follow God’s commandments are blessed, as they have the right to the tree of life and may enter through the gates into the city.

The phrase “through the gates” is significant. What are these gates? Jesus Christ Himself is the gate. Only those who enter through Him gain the right to the tree of life. Jesus said: "I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture." (John 10:9, KJV)

For us, as His sheep, Jesus is the gate to heaven. He emphasized: "Verily, verily, I say unto you, I am the door of the sheep." (John 10:7, KJV) Without Christ, no one can enter the Kingdom of Heaven. Those who attempt to enter by another way are thieves and robbers: "Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber." (John 10:1, KJV)

To have the right to the tree of life and to enter the holy city through the gates, we must cling firmly to Christ and live according to His commandments. Only then will we be granted this right. If we live negligently, we will find ourselves excluded from the heavenly city: "For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie." (Revelation 22:15, KJV)

Dearly beloved, let us resolve to enter through Christ, the gate. Let us become those who have the right to the tree of life, taste its fruit, and inherit eternal life.

God’s Message: Bro. M. Geo Prakash

Meditation Verse - ஆபகூக் 3: 19 / Habakkuk 3:19

 வேதாகமத் தியானம் - எண்:- 1,431

'ஆதவன்' 💚ஜனவரி 08, 2025. 💚புதன்கிழமை


"ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." ( ஆபகூக் 3: 19)

கர்த்தரோடு நடக்கப்பழகியவர்கள் எந்த எதிர்மறையான சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பார்கள். தங்களுக்கு இருக்கும் அனைத்தையும் இழந்தாலும் விசுவாசத்தை இழக்கமாட்டார்கள். இதற்கு யோபு நமக்கு மிகப்பெரிய உதாரணமாக இருக்கின்றார். யோபு தனக்கு இருந்தவை அனைத்தையும்  இழந்தார்; ஆனால் விசுவாசத்தை இழக்கவில்லை. 

இன்றைய தியான வசனத்தில்  ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவது யோபு கூறுவதற்கு இணையானது. ஏனெனில் இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனங்களில் அவர் கூறுகின்றார், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3: 17, 18) 

யோபு கூறுவதற்கும் ஆபகூக் கூறுவதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. யோபு இருந்தவை அனைத்தையும் இழந்தும் விசுவாசத்துடன் இருந்தார். ஆனால் ஆபகூக், தனக்கு எல்லாம் இருந்தும்  தனக்குரியவைகள் எந்த பலனையும் தராமல் போனாலும் தேவன்மேலுள்ள நம்பிக்கையை இழக்காமல் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கின்றார். தான்  செல்வங்கள், சொத்துக்கள் என்று கருதும் அத்திமரம், திராட்சைச்செடி, ஒலிவமரம், வயல்கள், ஆட்டுமந்தைகள், மாடுகள் இவை எதுவும்  பலன்தராமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கின்றார் அவர்.     

மட்டுமல்ல, "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." என்கின்றார். அதாவது எனக்கு உரிய சொத்து சுகங்களை நான் பெலனாகக் கருதவில்லை, தேவனையே பெலனாகக் கருதுகின்றேன், எனவே அவர் என்னைக் கைவிடமாட்டார்  என்கின்றார். தாவீது ராஜாவும்"கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 40: 4) என்று கூறுவதை நாம் வாசித்திருக்கலாம். 

கர்த்தர்மேல் நம்பிக்கைகொள்ளும்போது அவர் நமக்கு உறுதி தருகின்றார். மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணி நடத்திட அவர் அனுமதிக்கமாட்டார். இதனையே இன்றைய தியான வசனத்தில்,  "அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." என்று கூறுகின்றார். 

சுருக்கமாக இன்றைய தியான வசனம் கூறும் கருத்து இதுதான்:- கர்த்தரை நம்பி அவர் ஒருவரையே நாம் பற்றிக்கொள்ளும்போது உலக செல்வங்கள் நமக்கு இரண்டாம்பட்சமாகவே தெரியும். அவைகளை நாம் இழந்துவிட்டாலும் நாம் கவலையடையாமல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்போம். மட்டுமல்ல, அப்போதும் அவர் பிறர் நம்மை அவமானப்படுத்திட அனுமதிக்காமல் நமது பெலனாக இருந்து நம்மை மற்றவர்களைவிட உயர்வாக நடத்துவார்.  

ஆம், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்."

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

Scripture Meditation - No: 1,431

AATHAVAN💚 January 08, 2025 💚 Wednesday

"The Lord God is my strength, and he will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places." (Habakkuk 3:19)

Those who have learned to walk with the Lord will not lose hope in any adverse situation. Even if they lose everything, they will not lose their faith. Job serves as an outstanding example for us. Despite losing everything he had; Job did not lose his faith.

In today's meditation verse, the prophet Habakkuk conveys a message similar to Job's. In the preceding verses of today's meditation, Habakkuk says:

"Although the fig tree shall not blossom, neither shall fruit be in the vines; the labour of the olive shall fail, and the fields shall yield no meat; the flock shall be cut off from the fold, and there shall be no herd in the stalls: yet I will rejoice in the Lord, I will joy in the God of my salvation." (Habakkuk 3:17-18)

There is a slight difference between what Job says and what Habakkuk declares. Job maintained his faith even after losing everything he had. In contrast, Habakkuk declares that even if all he possesses yields no fruit or benefit, he will not lose his trust in God but will continue to rejoice in Him. He speaks of the fig tree, vine, olive, fields, flocks, and herds—symbols of wealth and resources—yielding nothing, yet he chooses to find joy in the Lord.

Moreover, Habakkuk affirms: "The Lord God is my strength; he will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places." This indicates that he does not rely on material wealth or possessions as his strength but considers the Lord himself to be his strength. Therefore, he is confident that God will not abandon him. Similarly, King David says: "Blessed is that man that maketh the Lord his trust." (Psalm 40:4)

When we place our trust in the Lord, He gives us assurance. He will not allow others to treat us with contempt. This is reflected in today's meditation verse: "He will make my feet like hinds' feet, and he will make me to walk upon mine high places."

In summary, today's meditation verse teaches us that when we trust in the Lord and cling to Him alone, worldly possessions will seem secondary to us. Even if we lose them, we will not be troubled but will continue to rejoice in the Lord. Moreover, He will not allow others to shame us but will be our strength and raise us above others.

Yes, "Blessed is that man that maketh the Lord his trust."


Message by: Bro. M. Geo Prakash                           

Friday, January 03, 2025

Meditation Verse - எரேமியா 14: 7 / Jeremiah 14:7

 வேதாகமத் தியானம் - எண்:- 1,430

'ஆதவன்' ஜனவரி 07, 2025. 💚செவ்வாய்க்கிழமை


"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." ( எரேமியா 14: 7)

இந்த உலகத்தில் பிறந்துள்ள யாரும் முற்றிலும் தன்னைப் பரிசுத்தன் என்று கூறிக்கொள்ள முடியாது. மனிதர்கள் நாம் மனித பலவீனத்தால் பல்வேறு பாவ காரியங்களில் விழுந்து விடுகின்றோம். ஆனால் பாவத்தில் நாம் விழுந்துவிட்டாலும் பாவத்திலேயே மூழ்கி கிடப்பதுதான் தேவன் அருவெறுக்கும் காரியம். பாவத்தில் விழுந்துவிடும்போது அப்படியே கிடைக்காமல் நாம் மீண்டு எழுந்து வருவதையே தேவன் விரும்புகின்றார். 

அப்போஸ்தலரான பேதுரு இயேசு கிறிஸ்துவிடம் ஆண்டவரே என் சகோதரன் எனக்கு எதிராக குற்றம் செய்தால் நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? எழுதரமா ? என்று கேள்வி கேட்டபோது அவருக்கு மறுமொழியாக இயேசு, "ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18: 22) என்றார். மனிதர்களாகிய நம்மையே இப்படி மன்னிக்கும்படி அறிவுறுத்திய தேவன் நம்மை மன்னியாதிருப்பதெப்படி? எனவே பாவத்தில் விழும்போதெல்லாம் அவரிடம் நாம் மன்னிப்பை வேண்டிடவேண்டும்.

தேவனிடம் நாம் கடமைக்காக அல்ல; மாறாக, உள்ளன மனத்துடன்  மன்னிப்புக் கேட்கவேண்டியது அவசியம். அப்படியே இன்றைய தியான வசனத்தில் எரேமியா தேவனிடம் மன்றாடுகின்றார். "எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." என்கின்றார் அவர். இதுபோலவே தாவீது ராஜாவும் விண்ணப்பம் செய்வதை நாம் வேதாகமத்தில் வாசிக்கலாம். "தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்." ( சங்கீதம் 51: 1) என மன்றாடுகின்றார் அவர். "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51: 3) என அறிக்கையிட்டார். 

நாம் வாழ்வடைந்து சிறக்கவேண்டுமானால் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவது அவசியமாய் இருக்கின்றது. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28: 13) என்று வேதம் கூறவில்லையா? 

அப்போஸ்தலரான பவுல், "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்." (1 தீமோத்தேயு 1: 15) என்று தன்னைப் பாவிகளில் பிரதான பாவி என்று அறிக்கையிடுவதை நாம் வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, இப்படியிருக்க நாம் நம்மை நீதிமான்கள் என்று எப்படிக் கூறிக்கொண்டிருக்கமுடியும்?  

நமது வாழ்வில் சிறு வயதுமுதல் நாம் தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவ காரியங்களை எண்ணிப்பார்ப்போம். அவற்றை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிடுவோம். "உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." என்று தேவனது கிருபைக்காக விண்ணப்பம் செய்வோம். அவரே நம்மைக் கழுவி இரட்சிப்பின் சந்தோஷத்தினால் மகிழச்செய்வார். "குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான்  1 : 7)  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Scripture Meditation - No: 1,430 

AATHAVAN 💚 January 07, 2025 💚 Tuesday 

"O LORD, though our iniquities testify against us, do thou 
it for thy name's sake: for our backslidings are many; we 
have sinned against thee." (Jeremiah 14:7) 

No one born into this world can claim to be completely holy. As humans, we often fall into various sins due to our weaknesses. However, remaining immersed in sin after falling is what God despises. When we stumble into sin, God desires that we rise again and turn back to Him, rather than staying fallen.

The apostle Peter once asked Jesus, “Lord, how oft shall my brother sin against me, and I forgive him? till seven times?” Jesus answered, "I say not unto thee, Until seven times: but, Until seventy times seven." (Matthew 18:22) If God instructs us to forgive others so generously, how much more will He forgive us when we turn to Him with a repentant heart? Therefore, every time we fall into sin, we must seek His forgiveness.

When we approach God for forgiveness, it must not be out of mere obligation but with true repentance. In today’s verse, Jeremiah pleads with God, saying, "Our backslidings are many; we have sinned against thee." Similarly, King David also prayed in earnest repentance, as we read in the Bible: "Have mercy upon me, O God, according to thy lovingkindness: according unto the multitude of thy tender mercies blot out my transgressions." (Psalm 51:1) He further confesses, "For I acknowledge my transgressions: and my sin is ever before me." (Psalm 51:3)

To truly live and prosper, it is essential that we confess our sins before God and seek His forgiveness. The Bible declares, "He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy." (Proverbs 28:13)

The apostle Paul also humbly admitted, "This is a faithful saying, and worthy of all acceptation, that Christ Jesus came into the world to save sinners; of whom I am chief." (1 Timothy 1:15) If Paul, a great apostle, could call himself the chief of sinners, how can we consider ourselves righteous?

Let us reflect on the sins we have committed against God from our childhood until now. Let us confess them to the Lord Jesus Christ and plead for His mercy. As Jeremiah prayed, let us also say, "Do thou it for thy name's sake: for our backslidings are many; we have sinned against thee." God will wash us clean and restore us with the joy of salvation.

"The blood of Jesus Christ his Son cleanseth us from all sin." (1 John 1:7)

Message by: Bro. M. Geo Prakash   

Thursday, January 02, 2025

Meditation Verse - எரேமியா 9: 6 / Jeremiah 9:6

 வேதாகமத் தியானம் - எண்:- 1,429

'ஆதவன்' 💚ஜனவரி 06, 2025. 💚திங்கள்கிழமை

"கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9: 6)

பலரும் தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் ஆலய காரியங்களில் முனைப்புடன் செயல்பட்டாலும் தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருக்கின்றனர்.  ஆனால் அவர்களோ ஆலய காரியங்களில் தாங்கள் முனைப்புடன் ஈடுபடுவதால் தங்களைத் தேவனை அறிந்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். 

தேவனை வாழ்க்கையில் அறிந்து அவரது அன்பை ருசித்தவர்கள் மற்ற மனிதர்கள் எல்லோரும் தங்களைப்போல தேவனை  அறிந்தவர்களாக மாறவேண்டுமென்று ஜெபிக்கின்றனர்; நற்செய்தியை அறிவிக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான மக்கள் சுவிசேஷ சத்தியங்களுக்குச் செவிகொடுப்பதில்லை. உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனை நோக்கி ஜெபித்து பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்து கொண்டிருக்கின்றனர்; தங்களது வாழ்வில் மெய்யான தேவனை அறியாதிருக்கின்றனர். 

இதற்குக் காரணம் என்ன என்பதனை தேவன்  இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள்" என்கின்றார் தேவன்.  கபடம் என்பது உள்ளொன்று வைத்து வெளியொன்றை பேசும் செயலைக் குறிக்கின்றது. கபடம் என்றால் என்ன என்பதனை இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தேவன் கூறுகின்றார்:- "அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்." ( எரேமியா 9: 8)

அதாவது நேரில் ஒருவரைப் பார்க்கும்போது அவர்களுக்கு நல்லவர்கள்போலவும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துசென்றபின் அவர்களைக்குறித்து அவதூறாகப் பேசுவதும்தான் கபடம். இப்படிக் கபட குணம் இருப்பதால் தேவன் அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தவில்லை என்கின்றார். ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்கள்  சுத்த எண்ணம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். 

வேத வசனங்களை வாசிக்கும்போதோ மற்றவர்கள் அவைகளைப் பேசும்போதோ நமது இருதயத்தில் அது நமது தவறை உணர்த்துமானால் நாம் அவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். ஒரு முறை எனக்குத் தெரிந்த, என்னிடம் நன்கு பேசக்கூடிய  ஒருவர் எனது நண்பரொருவரிடம், "ஜியோ தனது "ஆதவன்" தினசரி தியானங்களில் மறைமுகமாக என்னைக் குறித்து எழுதுகின்றார். அது எனக்கு கஷ்டமாக இருக்கின்றது" என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நான் அப்படி எழுதுவதில்லை. தேவனது வார்த்தைகள் அவரது உள்ளத்தில் அவரது தவறை உணர்த்தியுள்ளன, அவரோ தவறாகவே புரிந்துகொண்டு என்னைக் குற்றப்படுத்துகின்றார்.  ஆனாலும் என்னிடம் பேசும்போது அதனை மறைத்து நான் எழுதும் தியானங்களைப் பாராட்டுகின்றார். 

தேவன் நேரடியாக வந்து மனிதர்களிடம் உன்னைத் திருத்திக்கொள் என்று கூறமாட்டார். வசனங்கள் வழியாக ஏதோ முறையில் மனிதர்களுடன் இடைப்படுவார். அதனை உணர்ந்து நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும்.  இன்றைய தியான வசனம் அறிவுறுத்துவதன்படி கபட குணம் நம்மிடம் இருக்குமானால் நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்து கூறினார், "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.' ( மத்தேயு 5: 37) என்று. கபடமில்லாத மனிதன் உள்ளதை உள்ளபடி பேசுபவனாக இருப்பான். 

இத்தகைய இருதய சுத்தமுள்ளவர்களே தேவனை வாழ்வில் அறிய முடியும். அவர்களுக்குத் தேவன் தன்னை வெளிப்படுத்துவார். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5: 8) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Scripture Meditation - No: 1,429 
AATHAVAN 💚 January 06, 2025, Monday 

"Thine habitation is in the midst of deceit; through deceit they refuse to know me, saith the Lord." (Jeremiah 9:6)

Many people faithfully attend church services and enthusiastically participate in church activities. However, they fail to know God personally. Yet, they assume that their active involvement in church work means they know God.

Those who have known God in their lives and tasted His love pray that others may also come to know God as they do; they proclaim the Good News. However, the majority of people do not heed the truths of the Gospel. They seek God only for worldly blessings, visiting various places of worship and offering prayers, yet they fail to truly know the living God in their lives.

In today's meditation verse, God explains the reason for this: "Through deceit they refuse to know me." Deceit refers to actions where one harbors one thing internally but speaks or acts differently externally. God further elaborates on what deceit means in the following verse: "Their tongue is as an arrow shot out; it speaketh deceit: one speaketh peaceably to his neighbour with his mouth, but in heart he layeth his wait." (Jeremiah 9:8)

This means that someone might speak kindly to a person in their presence but speak ill of them behind their back. God says He does not reveal Himself to such deceitful people. Yes, dear ones, God desires that humans possess pure hearts.

When reading Scripture or hearing it from others, if it convicts us of our wrongs, we must correct ourselves. I recall an incident where someone I knew, who always spoke kindly to me, told one of my friends: "Geo is indirectly writing about me in his 'Aathavan' daily meditations, it troubles me." In reality, I never wrote anything about him. The Word of God had convicted him of his wrongdoing, but he misunderstood and blamed me. However, when speaking to me, he hides it and appreciate the meditations I write.

God will not directly appear and tell people to correct themselves. Instead, He uses His Word to speak to them in various ways. We must understand this and amend our lives. Today's meditation verse advises us to eliminate deceitful tendencies. Jesus Christ said: "But let your communication be, Yea, yea; Nay, nay: for whatsoever is more than these cometh of evil." (Matthew 5:37). A person without deceit speaks truthfully and straightforwardly.

Only those with pure hearts can truly know God in their lives. God reveals Himself to them. "Blessed are the pure in heart: for they shall see God." (Matthew 5:8)

Message by: Bro. M. Geo Prakash

Meditation Verse - 1 யோவான் 5 : 5 / 1 John 5:5

 வேதாகமத் தியானம் - எண்:- 1,428

'ஆதவன்' 💚ஜனவரி 05, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை


"இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" (1 யோவான்  5 : 5)
 
உலகத்தை ஜெயித்தல் என்பதற்கு பலரும் பல்வேறு பொருள் கொள்ளலாம். அரசர்கள் பலர் மொத்த உலகத்தையும் தங்கள் ஆட்சிக்கு உட்படுத்துவதையே  உலகத்தை  ஜெயிப்பதாக எண்ணிக்கொண்டனர்.  மகா அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றவர்கள் இப்படி எண்ணி வாழ்ந்தவர்களே. இதுபோல, விளையாட்டுகளில் ஈடுபாடுகொண்டவர்கள் உலக சாம்பியன் ஆவதையே உலகினை ஜெயிப்பதாக எண்ணுகின்றனர்.  திரைப்பட வல்லுநர்கள் ஆஸ்கர் விருது பெறுவதையும் அழகிகள் பிரபஞ்ச அழகி விருது பெறுவதையும் உலகினை வெல்வதாகக்  கருதுகின்றனர். 

ஆனால் வேதாகம அடிப்படையில் உலகினை ஜெயித்தல் என்பது உலகில் நாம் பாவங்களை வென்று வாழ்வதைக் குறிக்கின்றது. பாவங்களை மேற்கொண்டு வாழ்வது மற்ற எந்த உலக சாதனைகளையும்விடக் கடினமானது. ஆனால் கிறிஸ்து இயேசுவை நாம் பற்றிக்கொள்ளும்போது  அதுவே எளிதாகின்றது. இதனையே இயேசு கிறிஸ்து, "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்". (மத்தேயு 11:30)

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வோமானால் அவர் உலகினை ஜெயித்ததுபோல நம்மையும் ஜெயிக்கவைப்பார். பாவம் மட்டுமல்ல, இந்த உலகத்தின் உபத்திரவங்கள், பிரச்சனைகள் இவைகளையும் இயேசு வெற்றிகொண்டார். அதுபோல அவரை விசுவாசிக்கும்போது நாமும் அவற்றின்மேல் வெற்றிகொண்டவர்களாக வாழ முடியும். எனவேதான் அவர் கூறினார்,   "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16: 33)

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்வது என்பது வெறுமனே அவரை ஆராதிப்பதல்ல; மாறாக நமக்காக அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உண்டாக்கிய மீட்பினை நாம் விசுவாசித்து அதனை நமது வாழ்வில் பெற்று அனுபவிப்பது.  அப்போதுதான் நாம் இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவர்களாவோம். ஏனெனில் பிதாவாகிய தேவன் அதற்காகவே அவரை பூமியில் அனுப்பினார். அந்தப் பெரியவராம் கிறிஸ்துவையும் அவரது மீட்பினையும்  ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான்  நாம் அவரது மெய்யான விசுவாசிகள் ஆகின்றோம்.  

எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்." (1 யோவான்  4 : 4) ஆம், நம்மில் இருக்கிறவர் பெரியவர். அவர்மேல் விசுவாசம் கொண்டவர்களாக நாம் வாழும்போது நாம் உலகினை வெற்றிகொண்டவர்களாக மாறமுடியும். "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?." 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Scripture Meditation - No. 1,428 
AATHAVAN 💚 January 05, 2025 💚 Sunday 

"Who is he that overcometh the world, but he that believeth that Jesus is the Son of God?" (1 John 5:5)

The concept of "overcoming the world" holds different meanings for different people. Historically, rulers like Alexander the Great and Napoleon believed that conquering the world meant bringing it under their dominion. Similarly, athletes consider becoming world champions as their ultimate victory. Artists equate winning Oscars, and beauty queens see earning titles like "Miss Universe" as their crowning achievements.

However, according to the Bible, overcoming the world refers to living victoriously over sin. This is far more challenging than any worldly accomplishment. Yet, through Christ Jesus, what seems difficult becomes possible, as He Himself assures:

"For my yoke is easy, and my burden is light." (Matthew 11:30)

When we place our faith in Jesus Christ, just as He overcame the world, He enables us to overcome as well. Not only does He give us victory over sin, but He also triumphs over the troubles and challenges of this world. Jesus reassures us with these words: "These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world." (John 16:33)

Believing in Jesus Christ is not just about worshipping Him but trusting in the redemption He achieved for us through His shed blood on the cross. By accepting this redemption and living it out, we truly believe in Him as the Son of God. God the Father sent His Son to the world for this purpose, and when we receive Christ and His salvation, we become His true followers.

The Apostle John declares: "Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world." (1 John 4:4)

Indeed, He who is in us is greater than the world. By living in faith in Him, we can live victoriously over the world. "Who is he that overcometh the world, but he that believeth that Jesus is the Son of God?"

God's Message: Brother M. Geo Prakash                               

Wednesday, January 01, 2025

Meditation Verse - ஏசாயா 55: 3 / Isaiah 55:3

 வேதாகமத் தியானம் - எண்:- 1,427

'ஆதவன்' 💚ஜனவரி 04, 2025. 💚சனிக்கிழமை


"உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55: 3 )

தேவனது வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவேண்டுமென்றும் அப்படி தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதால் வரும் நன்மைகளைப்பற்றியும் இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

இன்று மனிதர்கள் கடவுளுக்கென்று பல்வேறு காரியங்களைச்  செய்கின்றனர். ஆலயங்களுக்கு அதிக காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். சிலர் தங்களது கோரிக்கைகள் நிறைவேறினால் கடவுளுக்கு பல்வேறு பொருட்களையும் பணத்தையும் காணிக்கை தருவதாக பொருத்தனை செய்கின்றனர். ஆனால் இன்றைய தியான வசனம் இவைகளைவிட முதலில் நாம் நமது செவிகளை அவர் வார்த்தைகளைக் கேட்பதற்குத் திருப்பவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. 

"கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." (1 சாமுவேல் 15: 22) என்று சவுல் ராஜாவுக்கு சாமுவேல்  அறிவுறுத்தியதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். 

இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி கர்த்தருக்குச் செவிகொடுப்பதால் ஏற்படும் நன்மை என்ன என்பதனை விளக்குகின்றது. அதாவது, அப்படி தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்போது "உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.  

கர்த்தரது  வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது நமது ஆத்துமா மரணத்துக்குத் தப்பித் பிழைக்கும். மட்டுமல்ல, தேவனது கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். அதுவும் தாவீதுக்கு தேவன் அருளிய நிலையான நித்திய கிருபையைப்போல தேவ கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. தாவீது பல்வேறு சமயங்களில் தேவனுக்கு ஏற்பில்லாத காரியங்களைச் செய்திருந்தாலும் தேவன் அவரைத் தள்ளிவிடவில்லை. காரணம் தாவீதோடு தேவன் செய்த உடன்படிக்கை நித்தியமானது; நிலையானது. மட்டுமல்ல தாவீதின் சந்ததியே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது. தேவ குமாரனான கிறிஸ்து அவரது வழிமரபில் வந்து பிறந்தார். 

அதுபோல நாம் தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்போது தேவன் நம்மேலும் நமது குடும்பத்தின்மேலும் அவரது கிருபை நிழலிடும்படிச் செய்வேன் என்கின்றார். செவிகொடுத்தல் என்பது வெறுமனே தேவ வசனத்தைக் கேட்பதை மட்டும் குறிக்கவில்லை; மாறாக, கேட்ட வசனத்தின்படி நமது வாழ்க்கையினை மாற்றி அமைத்துகொள்வதைக் குறிக்கின்றது. "அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்." ( யாக்கோபு 1: 22) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுத்துக் கேட்டு அதனை வாழ்வாக்குவோம். அப்போது கர்த்தர் நித்திய கிருபையினால் நம்மையும் நமது சந்ததிகளையும் ஆசீர்வாதமாக வாழவைப்பார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Scripture Meditation - No: 1,427  

AATHAVAN 💚 January 04, 2025 💚 Saturday  

"Incline your ear, and come unto me: hear, and your soul shall live; and I will  make an everlasting covenant with you, even the sure mercies of David." (Isaiah 55:3) 

Today's meditation verse emphasizes the importance of listening to God's words and explains the blessings that follow when we heed them.

In today's world, many engage in various activities for God. People donate generously to temples and churches. Some even promise to offer significant gifts and money to God if their requests are fulfilled. However, today's meditation verse underscores that before anything else, we must incline our ears to listen to His words.

As Samuel said to King Saul: "Hath the LORD as great delight in burnt offerings and sacrifices, as in obeying the voice of the LORD? Behold, to obey is better than sacrifice, and to hearken than the fat of rams." (1 Samuel 15:22)

The latter part of the meditation verse highlights the blessing of listening to God's words: "Hear, and your soul shall live; and I will make an everlasting covenant with you, even the sure mercies of David."

When we listen to God’s words, our souls are saved from death and granted eternal life. Moreover, God's grace will surround us, just as He extended His sure mercies to David.

Although David failed at times and committed acts displeasing to God, the Lord never abandoned him. This was because the covenant God made with David was eternal and unchanging. Furthermore, David's lineage was blessed, culminating in the birth of Christ, the Son of God, through his lineage.

Similarly, when we listen to God’s words, His grace will rest upon us and our families. Listening, however, goes beyond merely hearing; it involves aligning our lives with the truths we hear. As Apostle James exhorts: "But be ye doers of the word, and not hearers only, deceiving your own selves." (James 1:22)

Let us make it our goal to hear God's words, obey them, and live accordingly. When we do so, the Lord will bless us and our descendants with His everlasting grace and make us a blessing to others.

Message by: Brother M. Geo Prakash                               

Meditation Verse - கலாத்தியர் 5: 16 / Galatians 5:16

வேதாகமத் தியானம் - எண்:- 1,426

'ஆதவன்' 💚ஜனவரி 03, 2025. 💚வெள்ளிக்கிழமை

"பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்." ( கலாத்தியர் 5: 16)

இன்று கிறிஸ்தவர்களில் பலர்கூட பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அதிகம் அறியாமலும் தவறான எண்ணம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். காரணம் ஆவியானவரைக்குறித்து சரியான போதனை அவர்களுக்குக் கொடுக்கப்படாததும் அவரைக்குறித்து அறிய மனமில்லாமையும்தான் . முதலில் நமக்கு ஆவியானவரை அறியவேண்டும் எனும் எண்ணமும் அவரை நம்மில் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியம். 

இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம் கூறினார், "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14: 17)

இன்றைய தியான வசனம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. ஆவியானவரை நாம் அறிந்து பெற்றுக்கொண்டால் மட்டுமே அவரது விருப்பப்படி நாம் நடக்கமுடியும். அப்படி அவர் நம்மை நடத்தும்போது மட்டுமே நாம் பாவ காரியங்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அப்போஸ்தலரான பவுல், "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8: 5) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் ஆவியின்படி நடக்கும்போதுதான் நமது சிந்தனைகள் ஆவிக்குரியதாக மாறும்.

அதாவது, மாம்சத்துக்குரிய எண்ணம் (ஊனியல்புக்கு உட்பட்ட எண்ணங்கள்) நம்மில் இருக்குமானால் நாம் அவற்றின்படியே நடப்போம். அது பாவத்துக்கு நேராக நம்மை நடத்தும். ஆனால் ஆவிக்குரியவர்களாக நாம் இருப்போமானால் நமது எண்ணங்களும் செயல்களும் ஆவிக்குரியதாக இருக்கும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களா யிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.

"கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." என்று வேத வசனம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. இதன் பொருள் என்னவென்றால்  கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்களல்ல; மாறாக தேவனுடைய ஆவியைப் பெற்றவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள். 

இன்று சில கிறிஸ்தவ சபைகளில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள சில சடங்கு முறைகளைக் கைக்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறுவதுபோல திடப்படுத்தும் அருட்சாதனம் என்று ஆயர்கள் நம்மீது கைவைத்து ஜெபிப்பதால் நாம் ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆவியின் அபிஷேகம் ஒரு உன்னதமான அனுபவம். அது தேவனே அருளும் ஒரு கொடை. 

இந்த ஆவியானவரை அனுபவபூர்வமாக நாம் நம்மில் பெற்றுக்கொள்ளும்போதுதான் நாம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ள முடியும். அப்போதுதான் நாம் மாம்ச இச்சையை நிறைவேற்றாமலிருப்போம்.  ஆம் அன்பானவர்களே, "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." எனும் வார்த்தைகளை மறந்துவிடவேண்டாம். இதுவரை ஆவியானவரைக்குறித்து தவறான எண்ணங்கள் இருக்குமானால் அதனை மாற்றி ஆவியானவரை வாழ்வில் பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம். 

"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்". (ஏசாயா 44:3) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

Scripture Meditation - No. 1,426

AATHAVAN💚 January 3, 2025 💚 Friday

"This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh." (Galatians 5:16)

Today, many Christians lack a deep understanding of the Holy Spirit or hold misconceptions about Him. This often stems from inadequate teaching or a lack of willingness to seek the truth about the Spirit. It is essential for us to have a desire to know the Holy Spirit and to receive Him into our lives.

Jesus Christ told His disciples: "Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you." (John 14:17)

The meditation verse today instructs us to walk in the Spirit. Only when we know and receive the Holy Spirit can we walk according to His will. It is only through His guidance that we can be completely freed from sinful deeds. The Apostle Paul says:

"For they that are after the flesh do mind the things of the flesh; but they that are after the Spirit the things of the Spirit." (Romans 8:5)

Dear beloved, when we walk in the Spirit, our thoughts will align with spiritual matters.

If we are controlled by carnal thoughts, we will live according to them, leading us directly into sin. However, if we are spiritually minded, both our thoughts and actions will align with the Spirit. As Paul further explains: "But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his." (Romans 8:9)

The Scripture is clear: "If any man have not the Spirit of Christ, he is none of his." This means not all who call themselves Christians are truly Christ's. Only those who have received the Spirit of God can be considered His.

Some churches today advocate rituals to receive the Holy Spirit, such as the laying on of hands by priests. However, receiving the Holy Spirit is not about rituals but about experiencing a profound gift from God. The anointing of the Spirit is a divine blessing that God bestows.

It is only when we receive the Holy Spirit experientially that we can walk in the Spirit and refrain from fulfilling the lust of the flesh. Dear believers, let us not forget the solemn words: "If any man have not the Spirit of Christ, he is none of his."

If you have held misconceptions about the Holy Spirit until now, let us correct them and earnestly seek to receive Him in our lives.

The Lord declares: "For I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I will pour my spirit upon thy seed, and my blessing upon thine offspring." (Isaiah 44:3)

Message by: Bro. M. Geo Prakash