'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,147 💚 மார்ச் 31, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 )
கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய மீட்பினை ஏற்படுத்தின. கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேரே கிறிஸ்துவின் உயிர்ப்புத்தான். அதுவே அவர் மெய்யான தேவ குமாரன் என்பதற்குச் சாட்சி. உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் அவர் சாதாரண உலக மகான்களில் ஒருவரைப்போல நீதிபோதனைச் செய்து அழிந்துபோனவராகவே இருப்பார். மட்டுமல்ல, அவர் அப்படி உயிர்த்தெழவில்லையானால் நாம் மீட்பு அனுபவத்தை வாழ்வில் பெற்றிருக்கமாட்டோம்.
கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் நம்மில் செயல்புரிவதே அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்குச் சாட்சி. இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." என்று கூறுகின்றார். ஆம், அவர் உயிர்த்தெழவில்லையானால் அவரை நாம் விசுவாசிப்பது வீண். இதனையே, "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." ( 1 கொரிந்தியர் 15 : 14 ) என்கின்றார் பவுல்.
மட்டுமல்ல, "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே." ( 1 கொரிந்தியர் 15 : 15 ) என்கின்றார்.
கிறிஸ்துவுக்குள் மரணமடைந்த மக்கள் அனைவரும் கிறிஸ்து உயிர்த்ததுபோல மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. ஆதாம் செய்த பாவத்தின் விளைவால் உலகில் மரணம் உண்டானது. அந்த ஒரே மனிதனின் பாவம் அனைத்து மக்களையும் பாவத்துக்கும் மரணத்துக்கும் நேராக இழுத்துச் சென்றது.
அதுபோல போல கிறிஸ்து எனும் இரண்டாம் ஆதாமின் மரணமும் உயிர்ப்பும் நமக்கு மீட்பும் உயிர்ப்பும் அளிக்கின்றது. "மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 21, 22 )
அன்பானவர்களே, உயிர்ப்புப் பெருவிழா நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். நாம் உலகில் வாழ்ந்து மடிவதோடு நமது வாழ்க்கை முடிவடைவதில்லை. மாறாக, அழிவில்லாத நமது ஆத்துமா கிறிஸ்துவால் எழுப்பப்படும். நமது உடலும் கிறிஸ்துவால் மறுரூபமாக்கப்பட்டு என்றும் அழியாமையை அடையும். எனவே நாம் நம்மை உயிர்தெழுதலுக்குத் தகுதியுள்ளவர்களாக நமது ஆத்துமாவையும் உடலையும் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
காரணம், கர்த்தரது நியாயாசனத்துக்கு முன்பாக நாம் நிற்கவேண்டும். நாம் செய்த நன்மை தீமைக்கேற்ற பலனை அடையவேண்டும். மட்டுமல்ல, "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்." ( 1 கொரிந்தியர் 15 : 53, 54 )
கிறிஸ்து மரணத்தை ஜெயமாக விழுங்கியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாமும் மரணத்தை ஜெயிக்கின்றவர்களாக இருக்கின்றோம். ஆம், கிறிஸ்தவன் இறந்து புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகின்றான். விதைக்கப்படும் நல் விதைகளாக வாழ்வோம். வளர்ந்து கனிதந்து நம்மூலம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிப்போம். மரணத்தை ஜெயித்து எழுந்த கிறிஸ்துவைப்போல உயிர்ப்படையத் தகுதியுள்ளவர்களாக வாழ்வோம். அதற்கான பலத்தை கிறிஸ்துவே நமக்குத் தந்து நடத்துவாராக.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
SECOND ADAM
'AATHAVAN' 📖✝ BIBLE MEDITATION No:- 1,147 💚 March 31, 2024 💚 Sunday 💚
"And if Christ is not raised, your faith is vain;
you are yet in your sins." (1 Corinthians 15:17)
Christ's
suffering, death, and resurrection brought us eternal redemption. The
foundation of the Christian faith is the resurrection of Christ. That is the
testimony that He is a true Son of God. Without the resurrection, he would have
perished, preaching righteousness like one of the ordinary saints of the world.
Moreover, if he had not risen like that, we would not have had the experience
of redemption in life.
Christ's
redemptive experience in us is the witness that He is risen. This is what the
apostle Paul said: "And if Christ be not raised, your faith is vain; ye
are yet in your sins." Yes, if he is not risen, then our faith in him is
in vain. Further, "And if Christ be not risen, then is our preaching vain,
and your faith is also vain." (1 Corinthians 15:14), says Paul.
Not
only that, "Yeah, and we are found false witnesses of God, because we have
testified of God that he raised up Christ, whom he raised not up, if so be that
the dead rise not." (1 Corinthians 15:15)
The
Christian belief is that all people who died in Christ will be raised again as
Christ. As a result of Adam's sin, death came into the world. The sin of Adam
led all people straight into sin and death.
Likewise,
the death and resurrection of Christ, the second Adam, give us redemption and
life." For since by man came death, by man also came the resurrection of
the dead. For as in Adam all die, even so in Christ shall all be made alive. (1
Corinthians 15:21–22)
Beloved,
this is the message of the Resurrection. Our lives do not end when we live and
die in the world. Our imperishable souls will be resurrected, and our bodies
will be regenerated by Christ and attain immortality. Therefore, it is
necessary for us to keep our soul and body holy so that we are worthy of
resurrection.
The
reason is that we must stand before the Lord's judgement seat. The good we have
done must be rewarded. Not only that, "for this corruptible must put on
corruption, and this mortal must put on immortality. So, when this corruptible
shall have put on corruption and this mortal shall have put on immortality,
then shall be brought to pass the saying that is written, Death is swallowed up
in victory." (1 Corinthians 15:53, 54)
As
Christ conquered death, so we Christians conquered death. Yes, the Christian is
not dead and buried; instead, he is sown. Let us live like the good seeds that
are sown. Let us grow, bear fruit, and proclaim Christ to the world through us.
Let us live like Christ, who conquered death and rose to life. May Christ give
us the strength for that.
God’s Message : Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment