இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, March 08, 2024

அவரை உத்தம இருதயத்தோடு சேவி / SERVE HIM WITH A PERFECT HEART

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,126      💚 மார்ச் 10, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." ( 1 நாளாகமம் 28 : 9 )

நமது மூதாதையர்களின் தேவனாகிய கர்த்தரை அறிந்து அவருக்காக வாழ்வதைக் குறித்துத் தாவீது தனது மகன் சாலமோனுக்கு கூறிய அறிவுரைதான் இன்றைய தியான வசனம். இந்த வசனத்தில் தாவீது கூறும் முதலாவது காரியம், "கர்த்தரை அறிந்து அவரை நாம் சேவிக்கவேண்டும்" என்பது. கர்த்தரைப் பற்றி அறிவதல்ல; மாறாக கர்த்தரை முதலில் அறியவேண்டும். 

இறையியல் கல்லூரியில் படிப்பதாலும், பிரசங்கங்களைக் கேட்பதாலும் மறைக்கல்வி வகுப்புகளில் படிப்பதாலும்  தேவனைப் பற்றி மட்டுமே நாம் அறிய முடியும். ஆனால் அவரோடு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே அவரை அறிய முடியும். அப்படி கர்த்தரை அறிந்து சேவிக்கத் தனது மகன் சாலமோனுக்குத் தாவீது அறிவுரை கூறுகின்றார். 

ஏன் அவரை அறியவேண்டும் என்பதனை அடுத்ததாகக் கூறுகின்றார். அதாவது அவர், "எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்" ஆம் அன்பானவர்களே, கர்த்தரை நாம் ஏமாற்ற முடியாது. அவர் நமது உள்ளத்தின் நினைவுகள் அனைத்தையும் அறிகின்றார். நமது இருதயத்தை ஆராய்ந்து அறிகின்றார். நாம் எதற்காக அவரைத் தேடுகின்றோம் என்பதனை அவர் அறிவார். 

ஒரு பெண்ணை உண்மையாகக் காதலிக்கும் ஒருவன் அந்தப் பெண்ணைத்தான் விரும்புவானேத் தவிர அவள் கொண்டுவரும் வரதட்சணைகளைக் கணக்குப்போட்டுப் பார்த்துக் காதலிக்கமாட்டான். அதுபோலவே, தேவனை உண்மையாக நேசிக்கும் ஒருவன் அவரையும் அவர் தன்னோடு இருக்கவேண்டுமென்றும் தான் விரும்புவான். மனிதனின் அந்த எண்ணத்தை தேவன் அறிகின்றார். மேலும், அந்த எண்ணத்தோடு தேவனைத் தேடுகின்றவன் மட்டுமே ஆவிக்குரிய மேலான காரியங்களை அறிந்துகொள்கின்றான்.  

மூன்றாவதாகத் தாவீது கூறுவதுதான் முக்கியமான கருத்து. அவர் கூறுகின்றார், "நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." 

இந்தக் காரியம் சாலமோனின் வாழ்வில் அப்படியே நிறைவேறியது. அவன் தேவனைத் தேடி வாழ்ந்தபோது தேவன் அவனுக்குத் தென்பட்டார். இரண்டுமுறை சாலமோனுக்கு அவர் தரிசனமானார். அப்படி இருந்தும் சிற்றின்ப ஆசையில் மூழ்கிய சாலமோன் மனைவிகளும் மறு  மனைவிகளுமாக 1000 பெண்களை விரும்பி ஏற்றுக்கொண்டான். பிற இனத்துப் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது என்று தேவன் தடைவிதித்திருந்தபோதிலும் அதனை மீறி பல பிற இனத்துப் பெண்களை மணந்தான். 

"சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை." ( 1 இராஜாக்கள் 11 : 4 )

"சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்." ( 1 இராஜாக்கள் 11 : 6 ) எனவே, "நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." என்று தாவீது கூறியதுபோல தேவன் சாலமோனைக் கைவிட்டார். 

எனவே அன்பானவர்களே, நாம் அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவிக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அவர்  எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் என்று கூறப்பட்டுள்ளது உண்மையான காரியமாக இருக்கின்றது. நம்மைக்குறித்து அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் எல்லாம் அறிவார். "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

நினைவுகளாலும், செயல்களாலும் கத்தரைவிட்டுப் பின்வாங்கிடாமல் எச்சரிக்கையாக இருப்போம். நாம் அவரைத் தேடினால் நமக்குத்  தென்படுவார்; நாம்  அவரை விட்டுவிட்டால் அவர் நம்மை என்றைக்கும் கைவிடுவார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

       SERVE HIM WITH A PERFECT HEART  

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,126   💚 March 10, 2024 💚 Sunday 💚

"Know thou the God of thy father, and serve him with a perfect heart and with a willing mind, for the LORD searcheth all hearts and understandeth all the imaginations of the thoughts; if thou seek him, he will be found of thee; but if thou forsake him, he will cast thee off for ever." (1 Chronicles 28:9)

Today's meditation verse is David's advice to his son Solomon about knowing the Lord, the God of our ancestors, and living for Him. The first thing David says in this verse is, "We must know the Lord and serve him." Not knowledge of God; rather, we should know God first.

We can only learn about God by studying in theological colleges, listening to sermons, and studying in Sunday classes. But one can know Him only by developing a personal relationship with Him. David advises his son Solomon to develop a relationship with God and serve Him.

Next, he tells us why we should know him. That is, He “searcheth all hearts and understands all the imaginations of the thoughts." Yes, beloved, we cannot deceive the Lord. He knows all the memories in our hearts. He searches our hearts and knows. He knows why we seek Him.

A man who truly loves a woman loves only that woman and does not count the dowries she brings. Similarly, a person who truly loves God wants Him to be with him. God knows the thoughts of man. And only he who seeks God with that mind knows the higher things of the spirit.

The third important point is what David says. He says, If you seek him, he will be found of you; but if you forsake him, he will cast you off for ever."

This was fulfilled in Solomon's life. When he lived in search of God, God appeared to him. Twice, he appeared to Solomon. Despite that, Solomon, who was engrossed in sexual desire, liked and accepted 1,000 women as wives and concubines. Despite God's prohibition against marrying women of other castes, he defied it and married many women of other castes.

"For it came to pass, when Solomon was old, that his wives turned away his heart after other gods, and his heart was not perfect with the LORD his God, as was the heart of David his father." (1 Kings 11:4) 

"And Solomon did evil in the sight of the LORD and went not fully after the LORD, as did David his father." (1 Kings 11:6) Therefore, as David said, "If you forsake him, he will forsake you forever." God abandoned Solomon.

Therefore, dear ones, it is necessary that we serve Him with a pure heart and an enthusiastic mind. It is true that He is said to search all hearts and know all forms of memory. No one needs to tell him about us. He knows everything. "And needed not that any should testify of man, for he knew what was in man." (John 2:25)

Let's be careful not to be carried away by memories and actions. If we seek Him, He will be found; if we forsake Him, He will forsake us forever.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: