Wednesday, March 06, 2024

தேவ வார்த்தைகளைக் காத்துக்கொள்வோம் / PRESERVE GOD'S WORDS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,125     💚 மார்ச் 09, 2024 💚 சனிக்கிழமை 💚

"அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." ( யோபு 23 : 12 )

பக்தனாகிய யோபுவின் வாழ்க்கைச் சரித்திரம் நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதான். அவர் பட்ட பாடுகள், வேதனைகள் இவற்றை அவர் தேவன்மேல் கொண்ட விசுவாசத்தால் பொறுமையாய்ச்  சகித்து வெற்றிக்கொண்டார்.  

யோபுவின் வெற்றிக்குக் காரணத்தை இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." என்கின்றார் அவர். 

தேவனுடைய வார்தைகளாகிய அவருடைய கற்பனைகளை விட்டு அவர் பின்வாங்கிடாமல் இருக்கக் காரணம் அவற்றை உணவைப் பாதுகாப்பதைவிட அதிகக் கவனமுடன் காத்துக்கொண்டதுதான் என்கின்றார். இன்று நாம் நமக்கு அதிகமாகிவிட்ட உணவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாத்து உண்பதுபோல யோபு  தனது இதயமாகிய பெட்டியில் தேவ வார்த்தைகளைக் காத்துக்கொண்டார்.  எனவே அவை அவரது துன்பகாலத்தில்  அவர் தேவனைவிட்டுப் பின்மாறிடாமல் அவரைக் காத்துக்கொண்டன.

அன்பானவர்களே, பக்தனாகிய யோபு காத்துக்கொண்டது போல நாம் உணவைவிட முக்கியமாகக் காத்துக்கொள்ள வேண்டியவை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவ வார்த்தைகளைத்தான். அதிலும் துன்ப காலங்களில் நமக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் ஒரு வசனம்,  "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." ( மத்தேயு 11 : 28 ) என்பது.

தற்கொலை எண்ணத்தால் பிடிக்கப்பட்டு வாழ்வில் இறுதிக்காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளால் தொடப்பட்டு ஆறுதல் அடைந்து மீட்கப்பட்டப்  பல சாட்சிகள் உண்டு. பல சாட்சிகளை நான் கேட்டிருக்கின்றேன்; வாசித்திருக்கின்றேன். இன்று நாமும் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் இருந்தாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை விசுவாசத்தோடு ஏற்று அவரிடம் செல்வோமானால் அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார். 

மேலும், இன்றைய தியான வசனத்தில் யோபு, "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை" என உறுதியோடு கூறுகின்றார். அதுபோல நாமும் தேவனது கட்டளைகளின்படி நடப்பதற்கு உறுதியேற்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தேவனுக்கு எதிரானப் பாவச்  செயல்களைச்  செய்யாமல் தவிர்த்து வாழ நாம் முயற்சிக்கவேண்டும்.  

யோபு கூறுவதுபோலவே சங்கீத ஆசிரியரும்  கூறுவதை நாம் பார்க்கலாம். "உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." ( சங்கீதம் 119 : 11 ) அவரது வார்த்தைகளை இருதயத்தில் வைத்தால் நாம் தேவனுக்கு  விரோதமாகப் பாவம் செய்யமாட்டோம் என்று இந்த வசனத்தின் மூலம் அறியலாம். 

ஆம் அன்பானவர்களே, தேவனது  வார்த்தைகளை நமது இருதயத்தில் பதித்து வைப்போம்; ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய் அவைகளைக் காத்துக்கொள்வோம்.  வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கின்ற நமக்கு அவைதான் இளைப்பாறுதல்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

              PRESERVE GOD'S WORDS 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,125  💚 March 09, 2024 💚 Saturday 💚

"Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary food." (Job 23:12)

The life story of pious Job is well known to all of us. Through his faith in God, he patiently endured all the pains and sufferings he suffered.

We read the reason for Job's success in today's meditation verse. "Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary food," he says.

He says that the reason he did not retreat from his precepts, the words of God, was that he guarded them more carefully than saving food. Job preserved God's words in the box that was his heart, just as we preserve and eat food that is too much for us today in the refrigerator. So, they kept him from turning away from God in his time of suffering.

Beloved, what we need to guard more than food is the divine words of our Lord Jesus Christ, just as the pious Job guarded. Especially the verse that give us comfort and encouragement in times of trouble: "Come unto me, all ye that labour and are heavy-laden, and I will give you rest." (Matthew 11:28)

There are many witnesses who were touched by these words of the Lord Jesus Christ and were comforted and saved at the end of their lives when they were caught by suicidal thoughts. I have heard many witnesses; I have read. Even though we are in the midst of various sufferings today, if we accept these words of the Lord Jesus Christ with faith and go to Him, He will give us rest.

Also, in today's meditation verse, Job affirms, "Neither have I gone back from the commandment of his lips.” Likewise, we must commit ourselves to following God's commandments. We should try to live without committing sinful acts against God under any circumstances.

We can see that the psalmist is saying the same thing as Job. "Thy word have I hid in my heart, that I might not sin against thee." (Psalms 119:11) We can know through this verse that if we keep his words in our hearts, we will not sin against God.

Yes, beloved, let us enshrine the words of God in our hearts. Let's protect them more than food. They are a relief to those of us who are troubled.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: