மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகள் / FRUITS OF REPENTANCE

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,124      💚 மார்ச் 08, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚




"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்." ( மத்தேயு 3 : 8 )





கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒருநாள் கூத்து போன்றதல்ல;  மாறாக அது அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவமாகும். மனம் திரும்புதல் என்பது ஒருநாள் நிகழ்வல்ல; அதனை நாம் தக்கவைத்துக்கொள்வதில்தான் வெற்றி இருக்கின்றது. ஒரு சில கன்வென்சன் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஏற்படும் கிளர்ச்சியால் சிலர் தொடர்ந்து அப்படிபட்டக் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்புவதுண்டு. இதனால் தங்களை இரட்சிக்கப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். 

இது எப்படியென்றால், கடற்கரையில்  அமர்ந்து கடற்காற்றையும் கடலின் அழகையும் ரசிப்பதுபோன்றது. அந்த அழகும் இன்பமும் நம்மை மகிழ்விப்பதால் அடிக்கடி கடற்கரைக்குச் செல்ல விரும்புகின்றோம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை இப்படி இருப்பது போதாது. நமது வாழ்வில் தனிப்பட்ட மாற்றம் இல்லாமல் எத்தனை கூட்டங்களிலும் ஆராதனைகளிலும் நாம் பங்கெடுத்தாலும் அது பலனற்றதே. கடலின் அழகை ரசிப்பது போன்றதே.

இதனையே யோவான் ஸ்நானகன் தன்னிடம் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த பரிசேயர்களையும் சதுசேயர்களையும் பார்த்துக் கூறினார், "........விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்." ( மத்தேயு 3 : 7, 8 ) என்று. 

பரிசேயர்களிடமும்  சதுசேயர்களிடமும் எந்த மனமாற்றமும் இல்லை. எல்லோரும் யோவானிடம் ஞானஸ்நானம் பெறச் செல்வதைக்கண்டு அவர்களும் சென்றனர். பிரபலமானவரைப்  பார்க்க விரும்புவதுபோன்ற விருப்பத்துடன் யோவானிடம் சென்றனர். எனவேதான் யோவான் அவர்களை விரியன் பாம்புக் குட்டிகள் என்றுக்  கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இன்று பல கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்வதால் தங்களை மீட்க்கப்பட்டவர்கள் அல்லது இரட்சிக்கப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். நமது இரட்சிப்பு என்பது அழகை ரசிப்பது போன்றதல்ல; மாறாக, ஒரு தொடர் வாழ்க்கையில் அது அடங்கியுள்ளது. கிறிஸ்து நமக்குள் உருவாகி நம்மில் பிரதிபலிப்பதுதான் ஆவிக்குரிய கனிதரும் அனுபவம். அந்த அனுபவம் உள்ளவனே கிறிஸ்தவன்.

இன்று பலர் பீடி, சிகரட், வெற்றிலை பழக்கங்களிலிருந்து விடுபடுவதே இரட்சிப்பு என்று எண்ணிக்கொள்கின்றனர். அது குறித்துச் சாட்சியும் சொல்கின்றனர். ஆனால், இவைகளிலிருந்து மருத்துவ முறைகள் மூலமும் விடுதலை பெறமுடியும் என்பதே உண்மை. உண்மையான இரட்சிப்பு நமது உள்ளான மனிதனில் மாறுதல் கொண்டுவருவதாக இருக்கவேண்டும். ஆவிக்குரிய கனிகள் நிறைந்ததாக இருக்கவேண்டும். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே அன்பானவர்களே, கனிகளோடு கூடிய கிறிஸ்தவ வாழ்க்கைதான் ஆவிக்குரிய வாழ்க்கை. அல்லாத வாழ்க்கை வெறுமையான ஆராதனைக் கிறிஸ்தவர்களையே உருவாக்கும். நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புவித்து ஜெபிக்கும்போது பாவத்திலிருந்து விடுதலை மட்டுமல்ல, தொடர்ந்து அவர் நம்மை கனியுள்ளவர்களாக  மாற்றுவார். ஆவியானவரின் வல்லமை என்பது அதிசயம் அற்புதம் செய்வதல்ல; மாறாக பாவத்தை வென்று கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வது. அதற்காக ஜெபிப்போம். கனியுள்ளவர்களாக மாறி உலகுக்கு நம்மை வெளிப்படுத்துவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

                    FRUITS OF REPENTANCE 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,124   💚 March 08, 2024 💚 Friday 💚

"Bring forth, therefore, fruits meet for repentance." (Matthew 3:8)

The Christian life is not living for one day alone; rather, it is a daily cross-carrying experience. Similarly, repentance is not a one-day event. Success lies in maintaining it. The excitement that comes from attending a few convention meetings makes some people want to continue attending such meetings. With this motivated intention, they consider themselves saved.

It is like sitting on the beach, enjoying the sea breeze and the beauty of the sea. We often like to go to the beach because its beauty and pleasure delight us. But spiritual life is not like that. No matter how many meetings and prayers we participate in without personal change in our lives, it is fruitless. It is like enjoying the beauty of the ocean.

This is what John the Baptist said to the Pharisees and Sadducees who came to him to be baptised: "O generation of vipers, who hath warned you to flee from the wrath to come? Bring forth, therefore, fruits meet for repentance." (Matthew 3:7, 8).

There was no real conversion of heart among the Pharisees and Sadducees. Seeing others, they also went to John to be baptised. They went to John with a desire to see a famous person. That is why John called them the generation of vipers.

Yes, dear, many Christians today consider themselves redeemed or saved because they attend so-called spiritual churches. Our salvation should not be like enjoying beauty; rather, it should consist of a continuous repentant life. A spiritually fruitful experience will reflect Christ in us. A Christian is one who has that experience.

Many people today think that salvation is getting rid of beedi, cigarette, and betel nut habits. Many witnesses in spiritual convention meetings profess like that. But the truth is that you can get rid of them through medical methods. True salvation must bring about a change in our inner man. Be full of spiritual fruits. "But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith, meekness, and temperance; against such there is no law." (Galatians 5:22–23)

So beloved, the Christian life with fruits is the spiritual life. Without it, we will be empty-hearted Christians. When we surrender ourselves to the Spirit's guidance and pray, not only are we freed from sin, but He will continually make us merciful. The power of the Spirit is not to work miracles; instead, overcome sin and live a fruitful life. Let's pray for that. Let us become kind and reveal ourselves to the world.

God’s Message : Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்