Wednesday, March 06, 2024

கிறிஸ்துவோடு பங்கு / PARTAKERS WITH CHRIST

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,123     💚 மார்ச் 07, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்." ( யோவான் 13 : 27 )

உண்மையான மனம் திரும்புதல் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தினசரி நற்கருணை உட்கொண்டாலும் நாம் சாத்தானுடைய மக்களும் அவனுக்கு அடிமையானவர்களுமாய் இருக்கின்றோம் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

ஆம், மெய்யான மனம்திருப்புதலும் உள்ளத்தில் தூய்மையும் இல்லாமல் இருந்துகொண்டு நற்கருணை உட்கொள்ளும்போது நாம் சாத்தானுக்கு அடிமைகள் ஆகின்றோம். இன்றைய தியான வசனத்தில் யூதாஸ் கிறிஸ்து கொடுத்த அப்பத்தினை வாங்கி உண்டபின் அவனுக்குள் சாத்தான் புகுந்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை அவனுக்குள் நுழையாத சாத்தான் அவன் நற்கருணையை உண்டவுடன் அவனுக்குள் நுழைந்தான். 

இதற்குக் காரணம் அவனுக்கிருந்த சாத்தானின் வஞ்சக குணம். ஏற்கெனவே கிறிஸ்துவைக்  காட்டிக்கொடுக்கத் திட்டம்போட்டுக்கொண்டு அதனை மறைத்து அவரிடம் வஞ்சகமாக அவன் நடந்துகொண்டான். இதனை நாம் "அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்." ( மத்தேயு 26 : 25 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, மனம்திரும்புதல் இல்லாத நற்கருணை நம்மை சாத்தானுக்கு அடிமையாக்கி பல்வேறு நோய்களைத்தான் நமக்கு ஏற்படுத்தும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்." ( 1 கொரிந்தியர் 11 : 28 ) என்று கூறுகின்றார். 

தொடர்ந்து அவர், "இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.  நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்." ( 1 கொரிந்தியர் 11 : 30, 31 ) என்று கூறுகின்றார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கையால் அப்பத்தை வாங்கி உண்ட யூதாஸின் உள்ளேயே  சாத்தான் புகுந்தான் என்றால் நாமெல்லோரும் எம்மாத்திரம்? யூதாஸ் எண்ணத்தில்  வஞ்சகமுள்ளவனாக இருந்தான். தனது உண்மையான குணத்தை மறைத்து இயேசு கிறிஸ்துவிடம் அன்புள்ளவனாக இருப்பதாகக் காட்டிக்கொண்டான். இதுபோல நாம் இருக்கின்றோமா என்பதனை நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். 

ஆலய காரியங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது, ஆராதனைகளில் தவறாமல் கலந்துகொள்வது, காணிக்கைகள் கொடுப்பது போன்ற காரியங்களை நாம் செய்துகொண்டிருக்கலாம். நற்கருணை உட்கொண்டு வரலாம். ஆனால் நமது உள்ளம் தேவனுக்கேற்ற உண்மையுள்ளதாக இருக்கின்றதா என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று. 

உணர்வற்றவர்களாக நாம் வாழ்வோமானால் "நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்" என்று இயேசு யூதாஸைப் பார்த்துக் கூறியதுபோல நம்மிடமும் கூறுவார். அவனிடம் எதனைச் சீக்கிரமாய்ச் செய்யச் சொன்னார்? அவனது உள்ளம் விரும்பிய வஞ்சக செயல்பாட்டினை. ஆனால் அந்தச் செயலின்  முடிவினையும் அவனது வாழ்க்கையின் முடிவினையும்  நாம் அறிவோம். 

நமது உள்ளத்தைச் சாத்தான் நுழைய முடியாத பரிசுத்த ஆலயமாகக் காத்துக்கொள்ளவேண்டியதுதான் நமது முதல் கடமை.  அப்போதுதான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக இருப்போம். "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்றார் இயேசு கிறிஸ்து. யூதாஸ் தவறியதும் இந்த விஷயத்தில்தான். எனவே நாமும் எச்சரிக்கையாக இருப்போம். உண்மையுள்ள இதயத்தோடு வாழ ஆவியானவர் நம்மை வழிநடத்திட ஜெபிப்போம்.  அப்போதுதான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


            PARTAKERS WITH CHRIST 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,123   💚 March 07, 2024 💚 Thursday 💚

"And after the sop Satan entered into him. Then said Jesus unto him, that thou doest, do quickly." (John 13: 27)

Today's meditation verse tells us that if we live a life without true repentance and take the Eucharist daily, we are Satan's people and his slaves.

Yes, when we partake of the Eucharist without true repentance and purity of heart, we become slaves to Satan. In today's meditation verse, it is said that after Judas bought and ate the bread given by Christ, Satan entered him. Satan, who had not entered him until then, entered him as soon as he partook of the Eucharist.

The reason for this was the deceitful nature of Satan in him. He had already planned to betray Christ and concealed it and acted deceitfully towards him. We read this, "Then Judas, which betrayed him, answered and said, Master, is it I? He said unto him, Thou hast said." (Matthew 26: 25) we read.

Yes, dear ones, the eucharist without repentance will enslave us to Satan and cause us various diseases. That is why the apostle Paul said, "But let a man examine himself, and so let him eat of that bread, and drink of that cup." ( 1 Corinthians 11 : 28 )

He continued, "For this cause many are weak and sickly among you, and many sleep. For if we would judge ourselves, we should not be judged." (1 Corinthians 11: 30, 31)

If Satan entered Judas who ate bread from the hand of the Lord Jesus Christ, then what about all of us? Judas was deceitful in his thinking. He pretended to be a lover of Jesus Christ by hiding his true character. We must check if we are like this.

We may be doing things like being more enthusiastic in church affairs, attending services regularly, giving offerings etc. We can take the Eucharist. But whether our heart is true to God is something we should think about.

If we live unfeelingly, Jesus will say to us as he said to Judas, "Do quickly what you do" What did Jesus ask him to do quickly? Deceptive activity that his heart desired. But we know the outcome of that act and the outcome of his life.

Our first duty is to guard our heart as a holy temple where Satan cannot enter. Only then will we be partakers with Christ. "But let your communication be, Yea, yea; Nay, nay: for whatsoever is more than these cometh of evil." (Matthew 5: 37) said Jesus Christ. This is the area where Judas failed. So let us also be cautious. Let us pray that the Spirit will lead us to live with a true heart. Only then will we be partakers with Christ.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: