இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, March 05, 2024

ஆயத்தம் / PREPARATION

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,122    💚 மார்ச் 06, 2024 💚 புதன்கிழமை 💚

"என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை." ( உன்னதப்பாட்டு 5 : 6 )

அன்பானவர்களே, நமது தேவன் அன்பானவர்தான்; கிருபை நிறைந்தவர்தான், ஆனால் ஒவ்வொன்றுக்கும் அவர் குறிப்பிட்ட காலங்களை நியமித்துள்ளார். அதுபோலவே நாம் மீட்பு அடைவதற்கும் குறிப்பிட்ட காலத்தை நியமித்துள்ளார். அது இன்றுதான். அதனை நாம் அலட்சியப்படுத்தினால் பிற்பாடு அவரை நாம் காண முடியாது; அவர் நமக்குப் பதிலளிக்கமாட்டார். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு நினைவூட்டுகின்றது. 

இன்று அவரை நாம் அன்பான இயேசு கிறிஸ்து எனச் சொல்லிக்கொண்டாலும் நமது இருதயக் கதவினை அவருக்குத் திறக்காமல் அடைத்துவைத்து வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டிருப்போமானால் அர்த்தமிருக்காது. இதனையே இன்றைய வசனம் கூறுகின்றது,  "என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை."

மனமாற்றமில்லாத வாழ்க்கை வாழ்வோமானால், "என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று" என்று குறிப்பிட்டுள்ளபடி அவர் கூறிய வார்த்தைகள் பிற்பாடு நம்மைச் சோர்ந்துபோகச் செய்யும் 

இயேசு கிறிஸ்து இதனையே பத்துக் கன்னியர் உவமையில் கூறினார். மணவாளன் வரும் சமயத்தில் ஆயத்தமாய் இருக்காமல் கதவு அடைக்கப்பட்டப்பின்னர் வந்து தட்டிக்கொண்டடிருந்தால் அவர் உங்களை அறியேன் எண்டு சொல்வேன் என்கிறார். "பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( மத்தேயு 25 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். நமது வாழ்க்கை என்று முடிவடையும் என்று நமக்குத் தெரியாது. எனவே பாவங்கள் மன்னிக்கப்படவும் மீட்பு அனுபவத்தினைப் பெறவும் இன்றே நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம். 

"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." ( ஏசாயா 55 : 6 ) என்கின்றார் ஏசாயா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவர்க்கும் சமீபமானவர். நம்மோடு உறுதியான நட்புறவு கொள்ள விரும்புகின்றவர். நாம் அவரைத் தேடத்தக்க காலம் இதுதான். நமக்காக பரிந்துபேசக்கூடியவராக இன்று அவர் இருக்கின்றார். ஆனால் அவர் மீண்டும் வரும்போது நீதியுள்ள நியாதிபதியாக வருவார். அன்று நீதியோடு நியாயம் தீர்ப்பார். எனவே இன்றே நாம் மன்னிப்புப்பெற ஏற்ற காலம்.  

நியாயத் தீர்ப்பு நாளில் அவரிடம் இரக்கத்துக்குக் கெஞ்ச முடியாது. அன்று நமது இதயக் கதவைத் திறக்க முடியாது. கதவைத் திறந்தாலும் "என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை." எனும் நிலைதான் ஏற்படும்.

"இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." என்று கூறியுள்ளபடி நமது பாவங்களை இன்றே அவரிடம் அறிக்கையிட்டு மீட்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

                       PREPARATION

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,122   💚 March 06, 2024 💚 Wednesday 💚

"I opened to my beloved; but my beloved had withdrawn himself and was gone; my soul failed when he spake. I sought him, but I could not find him; I called him, but he gave me no answer." (Song of Songs 5:6)

Beloved, our God is loving; He is full of grace, but He has appointed times for each. Likewise, He has appointed a specific time for us to attain salvation. It is today. If we ignore it, we will not see Him later; He will not answer us. Today's meditation verse reminds us of that.

Even if we call him dear Jesus Christ today, it will not make sense if we close the door of our hearts without opening it and live as mere worshipping Christians. This is what today's verse says: "I opened to my beloved; but my beloved had withdrawn himself and was gone; my soul failed when he spake; I sought him, but I could not find him; I called him, but he gave me no answer."

If we live an unconverted life, His words will make us weary later, as He said, "I opened the door to my beloved; my beloved is gone, and he is gone; my soul is weary at his word."

Jesus Christ said this in the parable of the ten virgins. He says that if we are not ready when the bridegroom comes and knocks after the door is closed, he will say that he does not know us." Afterward came also the other virgins, saying, Lord, Lord, open to us. But he answered and said, Verily, I say unto you, I know you not." (Matthew 25:11, 12) we read.

Yes, beloved, "For he saith, I have heard thee in a time accepted, and in the day of salvation have I succoured thee: behold, now is the accepted time; behold, now is the day of salvation." (2 Corinthians 6:2) says the apostle Paul. We never know where our lives will end. Therefore, it is necessary that we be ready today to have our sins forgiven and experience redemption.

"Seek ye the LORD while he may be found; call ye upon him while he is near." (Isaiah 55:6), says Isaiah. The Lord Jesus Christ is near all of us. He wants to have a firm friendship with us. This is the time when we should seek Him. He is the one who can intercede for us today. But when He comes again, He will come as a righteous judge. On that day, he will judge with justice. So today is the perfect time for us to ask for forgiveness.

We cannot beg for mercy from Him on the Day of Judgment. We cannot open the door of our hearts on that day. Even when we open the door, a condition will occur, like, “My beloved is gone; my soul is weary at his word. I have looked for him, and I have not found him; I have called to him, and he has not answered me."

"Behold, now is the time of grace; now is the day of salvation." Let's report our sins to Him today and experience redemption.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: