பிதாவும் குமாரனும் / FATHER AND THE SON

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,127      💚 மார்ச் 11, 2024 💚 திங்கள்கிழமை 💚

"நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்." ( ரோமர் 4 : 24, 25 )

ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். ஆபிரகாமின் விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டதுபோல பிதாவை விசுவாசிக்கும் நமக்கும் எண்ணப்படும் என்கின்றார் பவுல். பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குமுள்ள உறவு பல கிறிஸ்தவர்களுக்கும் இன்று புரியாமலேயே இருக்கின்றது. 

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவரே கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்.  இதனை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இதனை பெயரளவுக்கு கூறுவதல்ல, இந்த சத்தியத்தை நம்பி கிறிஸ்துவைப்போலப்   பிதாவைக் கனம் பண்ணவேண்டும். "தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." ( யோவான் 8 : 42 ) என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.

ஒருவரை ஒரு காரியத்தைச்  செய்து முடித்துவிட்டு வருமாறு ஒருவர் அனுப்புகின்றார் என்றால் அனுப்புகின்றவர்தானே பெரியவர்.?  பிதாவே அனுப்புகின்றவர். இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டவர். ஆம் அன்பானவர்களே, பிதாவாகிய தேவனை நாம் விசுவாசிக்கவேண்டும். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமது பாவங்களுக்குப் பரிகாரியாக அனுப்பினார். பிதாவாகிய தேவனே இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பினார். அவரை விசுவாசித்தால் மட்டுமே நமக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்று அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

ரோமர் 4:25 பொது வேதாகம மொழிபெயர்ப்பில் மிகத் தெளிவாக உள்ளது. "நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்தெழச் செய்தார்"

இயேசு கிறிஸ்துவும் தான் பிதாவை நோக்கி ஜெபித்தபோது.  "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்றுதான் ஜெபித்தார். அதாவது நாம் பிதாவாகிய தேவனையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறியவேண்டியது அவசியம். அப்படி அறியும்போதுதான் நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம்.

அப்போஸ்தலரான பேதுருவும், "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ) என்று எழுதுகின்றார். அதாவது தேவ கிருபையும் தேவ சமாதானமும் நமக்குப் பிதாவையும் குமாரனான இயேசு கிறிஸ்துவையும் அறியும்போதுதான் பெருகும். 

"தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( எபேசியர் 1 : 19 ) எனத் தான் வேண்டுவதாகப் பவுல் கூறுகின்றார். நமக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை ஆவியானவர் கொடுக்கும்படி வேண்டுவோம். 

இன்று தவறான  வேத போதக கூட்டத்தார் எழும்பி தவறான போதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பிதாவாகிய தேவனுக்கு நாம் முன்னுரிமைக் கொடுத்தால் அது கிறிஸ்துவை அவமதித்ததுபோல இருக்கும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவே பிதா தன்னைவிடப் பெரியவர் என்பதைத் தெளிவாகக் கூறினார், "ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்." ( யோவான் 14 : 28 )

அன்பானவர்களே, பிதாவுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குமுள்ள உறவினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். யோவான் நற்செய்தி இதனையே விளக்குவதாக உள்ளது. குறிப்பாக யோவான் 14 முதல் 17 வரையிலான அதிகாரங்கள் இதனைத் தெளிவுபடுத்தும்.

பிதாவைக் கனம் பண்ணுவதுபோல குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நாம்  கனம் பண்ணவேண்டியது அவசியம். காரணம், நம்மை நியாயம்தீர்க்கும் அதிகாரத்தை பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே அளித்துள்ளார்.  "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 ) வேத சத்தியங்களை ஆவியானவரின் துணையோடு புரிந்துகொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                      

                    FATHER AND THE SON

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No: - 1,127 💚 March 11, 2024 💚 Monday 💚

"But for us also, to whom it shall be imputed, if we believe on him that raised up Jesus our Lord from the dead, Who was delivered for our offences and was raised again for our justification." (Romans 4:24, 25)

The apostle Paul speaks of today's meditation verse while referring to Abraham's faith. Paul says that just as Abraham's faith was counted to him, so it is counted to us who believe in the Father. Many Christians today do not understand the relationship between God the Father and the Lord Jesus Christ.

God, the Father, is greater than Jesus Christ. He himself sent Christ into the world. We need to understand this first. This is not to be said at face value, but we should believe this truth and honour the Father like Christ. "Jesus said unto them, If God were your Father, ye would love me; for I proceeded forth and came from God; neither came I of myself, but he sent me." (John 8:42) says Jesus Christ.

If someone sends another to do something for him, then is not the one who sends it great.? The Father sends Jesus Christ. Yes, beloved, we must believe in God the Father. He himself sent the Lord Jesus Christ as a propitiation for our sins. God the Father raised Jesus Christ alive. Apostle Paul says in today's meditation verse that only if we believe in Him, we also have resurrection.

Romans 4:25 is very clear in the new Tamil common Bible translation. "God committed Jesus to die for our trespasses and raised him from the dead so that we might be reconciled to him."

Jesus Christ said when he prayed to the Father. "And this is life eternal, that they might know thee the only true God, and Jesus Christ, whom thou hast sent." ( John 17:3) That is, we must know God the Father and the Lord Jesus Christ. Only when we know that do we qualify for eternal life.

And the apostle Peter said, "Grace and peace be multiplied unto you through the knowledge of God and of Jesus our Lord." ( 2 Peter 1:2) That is, God's grace and God's peace will increase only when we know the Father and the Son, Jesus Christ.

“The eyes of your understanding being enlightened; that ye may know what is the hope of his calling, and what the riches of the glory of his inheritance in the saints,” (Ephesians 1:18) Paul says that he prays. We should pray to Holy Spirit to give us bright eyes to understand the truth. 

Today, false Vedic preachers are rising and giving false teachings. They think that if we give priority to God the Father, it will be like insulting Christ. But Jesus Christ made it clear that the Father was greater than himself: "for my Father is greater than I." (John 14:28)

Beloved, we must understand the relationship between the Father and the Lord Jesus Christ. The Gospel of John illustrates this. The chapters of John from 14 to 17 make this clear.

It is necessary that we honour the Son, Jesus Christ, as we honour the Father. The reason is that God the Father has given Jesus Christ the authority to judge us. "For the Father judgeth no man, but hath committed all judgement unto the Son." (John 5:22)Let us have clear understanding of with the help of Holy Spirit. 

God’s Message : Bro. M. Geo Prakash 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்