இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, March 25, 2024

முன்மாரியும் பின்மாரியும் / RAIN, BOTH THE FORMER AND THE LATTER

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,142       💚 மார்ச் 26, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை." ( எரேமியா 5 : 24 )

தேவனே ஏற்ற காலத்தில் மழையையும் பனியையும் பூமியில் அனுப்புகின்றார். பயிர்களின் அறுப்புக்காலங்களையும் அவரே ஏற்றவாறு நியமிக்கின்றார். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இவை எதையும் தங்கள் மனதில் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்கள் உழைப்புதான் விளைச்சலின் ஆசீர்வாதத்தைத் தந்தது என எண்ணிக்கொள்கின்றனர். நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் தேவனது கரம் இல்லையானால் நமக்கு வெற்றி கிடைக்காது எனும் உண்மையை அவர்கள் உணருவதில்லை.

இன்றைய வசனம் இதனால்தான் கூறுகின்றது, "எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை." அதாவது இந்த ஆசீர்வாதங்களைத் தந்த தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக மக்கள் வாழ்வதில்லை. அவரது கட்டளைகளுக்குப் பயந்து கீழ்படிவதும் இல்லை. (எல்லோரும் இப்படி இருப்பதில்லை ஆனால் பெரும்பான்மையோர் இப்படியே இருக்கின்றனர்.)

பல வேளைகளில் புயலும் மழையும் ஏற்பட்டு பயிர்களின் விளைச்சல் அழிவுறுவதை நாம் பார்க்கின்றோம். விவசாயிகள் தங்கள் முதலீடு அழிந்ததையெண்ணிக் கலங்குகின்றனர். சிலர் கடவுளை சபிக்கின்றனர். சிலவேளைகளில் விவசாயிகள் தற்கொலைசெய்து தங்களை மாய்த்துக்கொள்கின்றனர்.

விவசாயம் மட்டுமல்ல, நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் நம்மோடு தேவனது கரம் இருந்தால் மட்டுமே நாம் ஆசீர்வாதம் பெற முடியும். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) என்று வேத வசனம் கூறுகின்றது. தேவனது ஆசீர்வாதம் என்பது பரிபூரண ஆசீர்வாதமாக இருக்கும்; அதில் வேதனை இருக்காது.

சிலரது வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் பெற்றிருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்காது. காரணம், செல்வத்தின் திரட்சி மனநிம்மதியைத் தருவதில்லை. எனவேதான் வேதம் கூறுகின்றது, "தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்."( பிரசங்கி 5 : 19 )

அன்பானவர்களே, "சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்." (  நீதிமொழிகள் 15 : 16 ). எனவே தேவன் தரும் ஈவுகள் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நமக்கு வாழ்வில் மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, நம்மைத் தற்காக்கிற தேவனாகிய கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம்; பயந்திருப்போம்; அப்போது அவர் நம்மை உண்மையான மகிழ்ச்சியால் நிரப்புவார்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      
              
 RAIN, BOTH THE FORMER AND THE LATTER

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,142    💚 March 26, 2024 💚 Tuesday 💚

“Neither say they in their hearts; let us now fear the LORD our God, who giveth rain, both the former and the latter, in his season; he reserveth unto us the appointed weeks of the harvest.” (Jeremiah 5:24)

God sends rain and snow on the earth in due season. He also appoints the harvesting seasons of the crops accordingly. But most people do not have any of these things in their minds. They consider their labour to be the blessing of the harvest. They do not realise the fact that no matter how hard we work, we will not succeed without God's hand.

This is why today's verse says, “Neither say they in their hearts; let us now fear the LORD our God, who giveth rain, both the former and the latter, in his season.” It means that people do not live grateful to God, who gave these blessings. There is no fear or disobedience to his commands. (Not all are like this, but the majority are.)

Many times, we see storms and rains, and crop yields are destroyed. Farmers are worried that their investment has been destroyed. Some curse God. Sometimes farmers commit suicide.

Only if God's hand is with us can we be blessed in everything we do, not just farming. “The blessing of the LORD, it maketh rich, and he addeth no sorrow with it.” (Proverbs 10:22) says the scriptures. God's blessing will be a perfect blessing. There will be no pain in it.

Some people have all the wealth in their lives, but there is no peace at home. The reason is that the accumulation of wealth does not bring peace of mind. That is why the Bible says, “Every man also to whom God hath given riches and wealth, and hath given him power to eat thereof, and to take his portion, and to rejoice in his labour; this is the gift of God.” (Ecclesiastes 5:19)

Beloved, “Better is little with the fear of the LORD than great treasure and trouble therewith.” (Proverbs 15:16) So let us be grateful to God, no matter how little the gifts He gives us. Let us be grateful to the Lord God, who gives us rain in life, both the former and the latter, in his season. Let's be afraid. Then He will fill us with true joy.

God’s Message:- Bro. M. Geo Prakash

No comments: