ஆதவன் 🔥 950🌻 செப்டம்பர் 04, 2023 திங்கள்கிழமை
"என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." ( சங்கீதம் 66 : 18 )
கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருமே ஜெபிக்கின்றனர். எல்லோருமே கடவுள் தங்கள் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கவேண்டுமென்று ஆசைப்படுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத, ஜெபிக்காத மக்களும் உலகினில் பல நன்மைகளைப்பெற்று வாழ்கின்றனர். பொதுவாக நாம் அனைவரும் உலக ஆசீர்வாதங்களை தேவனிடம் கேட்பதுதான் ஜெபம் என்றும் அதனைப் பெற்றுக்கொள்வதுதான் ஜெபத்தின் வெற்றி எனவும் எண்ணிக்கொள்கின்றோம்.
ஆனால், ஜெபம் என்பது உண்மையில் வாழ்வின் ஊற்றாகிய தேவனை வாழ்வில் பெற்று அனுபவிப்பது; அவரோடு நம்மை இணைத்துக்கொள்வது. அப்படி நம்மை அவரோடு இணைத்துக் கொள்ளும்போது நமது விண்ணப்பங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அப்போது நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஜெபிப்பவர்களாக இருப்போம். நமது ஜெபவேளைகளில் தேவ பிரசன்னத்தை உணர்பவர்களாக இருப்போம்.
இன்று உலகினில் அக்கிரமக்காரர்கள், துன்மார்க்கர்கள் பலரும் செழித்து வளருவதைப் பார்க்கின்றோம். எனவே, உலக செழுமைக்கும் ஜெபத்துக்கும் தேவ ஆசீர்வாதத்துக்கும் தொடர்பில்லை என்பது புரியும். ஆம் அன்பானவர்களே, உலகச் செழிப்பைக் கண்டு நாம் ஏமாந்துவிடக்கூடாது. காரணம் துன்மார்க்கன் செழிப்பான் என்றுதான் வேதம் கூறுகின்றது. "துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்." ( சங்கீதம் 73 : 3-5 ). ஆனால் அவர்கள் முடிவு புல்லைப்போன்றது
மாறாக, நீதிமான் தேவனையே தேடுவான். அவனது ஆசீர்வாதமும் வித்தியாசமானதாக இருக்கும். ஆம், "நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்." ( சங்கீதம் 92 : 12 ) என்கின்றது வேதம். பனைமரம் செழிப்பு என்று கூறமுடியாது. ஆனால் அது வறண்ட பகுதிகளில்தான் செழித்து வளரும். அதன் மொத்த உடலும் மனிதர்களுக்குப் பயன்படும். அதுபோலவே நீதிமான் இருப்பான். இது முழுமையான ஆசீர்வாதத்தை அடையாளம்.
வேதாகமம் உலக செழிப்புக்காக எழுதப்படவில்லை. இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர் கூறுவது ஆவிக்குரிய கண்ணோட்டத்தில்தான். ஆம், நமது இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தோமானால் ஆண்டவர் நமக்குச் செவிகொடார். இதனையே ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன், "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59 : 2 ) என்று கூறுகின்றார். ஆம், நமது அக்கிரமங்கள் தேவனைவிட்டு நம்மைப் பிரிகின்றது.
ஆனால் இன்று உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதால் பலரும் தேவன் தங்களைவிட்டு தனது முகத்தை மறைப்பதை அறியாமல் இருக்கின்றனர். தங்களை தேவன் அன்புசெய்வதாக எண்ணிக்கொள்கின்றார். துன்மார்க்க ஊழல்வாதிகள் செழிப்பது தேவ ஆசீர்வாதமென்றால் நாம் தேவனை வழிபடுவது வீண். நாம் நல்ல ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்வதும் வீண். நாமும் அவர்களைப்போல வாழ்ந்து மடியலாமே?
இன்றைய வசனத்தின் அடுத்த வசனத்தில், "மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்" ( சங்கீதம் 66 : 19 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர் உறுதியாக. ஆம், இது உலக மனிதர்கள் கூறுவதுபோல அல்ல. நிச்சயமாக தேவன் எனது ஜெபத்துக்கு பதில் கொடுத்துள்ளார் எனும் உறுதி.
ஆம் அன்பானவர்களே, நமது இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தோமானால் ஆண்டவர் நமக்குச் செவிகொடார். ஆனால் நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நம் ஜெபத்தில் கேட்கும் உலக காரியங்கள் நமக்குக் கிடைக்கவில்லையானாலும் அப்போதும், "தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். ஆனால் ஏதோ நோக்கத்துக்காக நான் கேட்டதைத் தராமல் தாமதிக்கின்றார் எனும் உறுதி நமக்கு ஏற்படும். அக்கிரம சிந்தையை நம்மைவிட்டு அகற்றுவோம்; தேவன் நமக்குச் செவிகொடுப்பதை அனுபவத்தில் உணர்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
WICKEDNESS
AATHAVAN 🔥 950🌻
September 04, 2023 Monday
"If I
regard iniquity in my heart, the Lord will not hear me” (Psalms 66: 18)
All those who believe in God
pray. Everyone longs for God to hear and answer their prayers. People
who do not believe in God and do not pray live with many benefits in the world.
Generally, we all think that prayer is to ask God for worldly blessings and to
receive them is the success of prayer.
But prayer is receiving and experiencing God, the source of life; Associating ourselves with Him. Our applications will be different when we so align ourselves with Him. Then we will prioritize spiritual things and pray. We will experience God's presence in our prayer times.
Today in the world we see
many wicked and evil people flourishing. Therefore, worldly prosperity has
nothing to do with prayer and God's blessings. Yes beloved, we must not be deceived
by worldly prosperity. This is because the scriptures say that the wicked will
prosper. "For I was envious at the foolish, when
I saw the prosperity of the wicked. For there are no bands in their death: but
their strength is firm. They are not in trouble as other men; neither are they
plagued like other men." (Psalms 73: 3- 5) But their end is like
grass
Instead, the righteous will seek God. His blessing will be different. Yea, "The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon." (Psalms 92: 12) says the Vedas. The palm tree cannot be said to be prosperous. But it thrives in dry areas. Its entire body is useful for humans. And so is the righteous. It is a sign of complete blessing.
The Bible was not written for worldly prosperity. In today's meditation verse, the psalmist is speaking from a spiritual perspective. Yes, if we regard iniquity in our heart, the Lord will not hear us. This is what God said through the prophet Isaiah, "But your iniquities have separated between you and your God, and your sins have hid his face from you, that he will not hear." ( Isaiah 59 : 2 ) Yes, our iniquities separate us from God.
But today many are unaware that God has hidden His face from them because, they are receiving worldly blessings. They consider themselves loved by God. If the prosperity of the wicked and corrupt is a blessing from God, then we worship God in vain. It is also in vain that we live a good and holy life. Can we live and die like them?
In the next verse of today's
verse, the psalmist affirms, "But verily God
hath heard me; he hath attended to the voice of my prayer." (Psalms 66:
19) Yes, it is not as worldly people say. It is of surety that God has
answered my prayer.
Yes, beloved, if we regard iniquity in our heart, the Lord will not hear us.
But when we live a life according to God, even if we do not get the worldly
things that we ask for in our prayers, even then we could say, "God has
heard me and heard the sound of my prayer. But for some purpose, He is delaying
to give me what I asked for. Let us remove the wicked thought from ourselves;
we will experience the presence of God and have the assurance that God hears
us.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment