Saturday, September 23, 2023

மரித்தவர்களுக்கு அதிசயங்கள் / WONDERS TO THE DEAD

ஆதவன் 🔥 971🌻 செப்டம்பர் 25, 2023 திங்கள்கிழமை

"மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?   பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?"( சங்கீதம் 88 : 10, 11 )

இன்றைய தியான வசனம் வேதனையால் வாடிய சங்கீத ஆசிரியர் மனம் கசந்து கூறுவதாகும். இத்தகைய வேதனையும் வருத்தங்களும் நமக்கும் பல்வேறு சமயங்களில் ஏற்படுவதுண்டு. வேதனையோடு இந்தச் சங்கீத ஆரம்பத்தில் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது." ( சங்கீதம் 88 : 3 ) என்று. 

அதாவது, துக்கத்தால் நான் செத்துப்போனேன்; எனக்கு இனியும் நீர் அதிசயங்களைச் செய்வீரோ என்கின்றார். கைவிடப்பட்ட இந்த நிலையில் அவர் இன்றைய சங்கீதத்தை எழுதியுள்ளார். 

ஆனால் கர்த்தரது ஆவி ஒருவரை எந்த நிலையிலும் உயிர்ப்பித்து எழுந்து நிற்க  உதவிட முடியும். எல்லாம் முடிந்துபோயிற்று என்ற நிலையிலிருந்த இஸ்ரவேலருக்கு  எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் திடனளித்தார். தரிசனத்தில் உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்  அவரைக்கொண்டுபோய் அவரைத் தீர்க்கதரிசனம் கூற வைத்தார். "கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்." ( எசேக்கியேல் 37 : 5 ) என்று கூறினார். அதுபோல அந்த எலும்புகள் உயிரடைந்தன. 

"என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 37 : 13 ) ஆம் அன்பானவர்களே, எந்தவித துக்கத்தால் நாம் மரித்தவர்கள்போல ஆகியிருந்தாலும் நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணுவேன் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அப்போது நீங்கள் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கின்றார்.

மரணமடையும்வரை ஒருவர் கர்த்தரை நம்பலாம் ; அது இயற்கை. ஆனால் இயற்கைக்கு மாறாக மரித்தபின்பும் நமக்கு உயிரளித்து விடுவிக்கும் வல்லமை தேவனுக்கு உண்டு என்பதை விசுவாசிக்கும்போதுதான் நமது மனக் கவலைகள் முற்றிலும் மறைந்து தைரியம் பிறக்கும். 

மரித்து நான்கு நாட்கள் கடந்தபின் இயேசு கிறிஸ்து லாசரை உயிர்ப்பிக்கவில்லையா? லாசருவின் சகோதரிகளுக்கு இந்தச் சூழ்நிலையில் நம்பிக்கையே இருக்க வாய்ப்பில்லாதிருந்தது.  நாமும் அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தால் அப்படித்தான் இருந்திருப்போம். "இயேசு:- கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்." ( யோவான் 11 : 39 ) ஆனால் இயேசு கிறிஸ்து அந்த நாறியப்  பிணத்தை உயிர்தெழச் செய்தார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்க்கையும் துன்பங்களின் தொடர்ச்சியால் மரித்த வாழ்க்கையாக இப்போது இருக்கலாம்; ஆனால் தேவன் நினைத்தால் ஒரே நொடியில் அதனை மாற்றி நம்மை உயிர்ப்பிக்கமுடியும். 

"என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 37 : 13 ) என்கிறார் கர்த்தர்.  விசுவாசத்தோடு அவரைப் பற்றிக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்

           WONDERS TO THE DEAD

AATHAVAN 🔥 971🌻 Monday, September 25, 2023

"Wilt thou shew wonders to the dead? shall the dead arise and praise thee? Shall thy lovingkindness be declared in the grave? or thy faithfulness in destruction?" ( Psalms 88 : 10, 11 )   

Today's meditation verse is the anguished psalm teacher's words. Such pains and sorrows also happen to us at various times. At the beginning of this psalm with anguish the psalmist says, "For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave." ( Psalms 88 : 3 )

That is, I was dead out of grief; He says do you still do miracles for me again. In this state of abandonment, he wrote today's psalm.

But the Spirit of the Lord can revive a person in any situation and help him stand up. God comforted the Israelites through the prophet Ezekiel who were in a state where everything was over. He took Ezekiel in a vision to a valley full of dry bones and made him say prophesy. "Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause breath to enter into you, and ye shall live:" ( Ezekiel 37 : 5 ) And so the bones came alive.

"And ye shall know that I am the LORD, when I have opened your graves, O my people, and brought you up out of your graves,” (Ezekiel 37: 13) Yes, dear ones, I will open your graves and bring you out of your graves, says the Lord Jesus Christ. Then you will know that I am the Lord.

One can trust in God till death; It is natural. But only when we believe that God has the power to give us life and deliver us even after death, contrary to nature, our mental worries disappear completely and courage is born.

Didn't Jesus Christ raise Lazarus after four days of death? Lazarus' sisters had no chance of hope in this situation. We would have been like that if we were in a similar situation. "Jesus said, Take ye away the stone. Martha, the sister of him that was dead, saith unto him, Lord, by this time he stinketh: for he hath been dead four days." (John 11: 39) But Jesus Christ resurrected that stinking corpse.

Yes, dear ones, our life may now be a dead life due to the succession of sufferings; But if God wills, He can change it in a moment and revive us.

"And ye shall know that I am the LORD, when I have opened your graves, O my people, and brought you up out of your graves," (Ezekiel 37: 13) says the Lord. Let us cling to him by faith.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: