ஆதவன் 🔥 964🌻 செப்டம்பர் 18, 2023 திங்கள்கிழமை
"நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 3 : 5 )
இன்றைய சங்கீத தியான வசனம் எழுதப்பட்ட பின்னணியைப் பார்த்தால்தான் இதன் அருமை தெரியும். நாம் சுகமாக மெத்தையில் படுத்துத் தூங்கி எழுந்துகொண்டு, நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார் என்று கூறுவதுபோல தாவீது இதனைக் கூறவில்லை. மாறாக, தாவீதின் மகன் அப்சலோம் தாவீதைக் கொல்லுவதற்குத் தேடி அலைந்துகொண்டிருக்கும்போது அவனுக்குத் தப்பியோட முயன்ற தாவீது குகைகளிலும் மலை இடுக்குகளிலும் மறைந்து வாழும்போது கூறிய வார்த்தைகள் இவை.
சரியான உணவும், தூக்கமும், ஓய்வுமின்றி அலைந்து களைப்படைந்து கிடைத்த இடத்தில் படுத்து உறங்கியெழுந்து தாவீது இன்றைய வார்த்தைகளை அறிக்கையிடுகின்றார். தூங்கி விழிப்பேனா இல்லை தூங்கும்போதே எதிரி என்னைக் கொன்றுவிடுவானோ எனும் அச்சப்படத்தக்க சூழ்நிலையில் தாவீது உறங்கி எழுந்து மகிழ்ச்சியுடன் கூறுகின்றார், "படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்" என்று.
இதற்கு முந்தின இரண்டு வசனக்குமுன் அவர் கூறுகின்றார், "ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்." ( சங்கீதம் 3 : 3 ) ஆம், கர்த்தர் தன்னைக் கேடகத்தால் தாங்குகின்றார் என்பதைத் தாவீது அறிந்திருந்ததால்தான் அவரால் நிம்மதியாகத் தூங்கமுடிந்தது. எனவே, "எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்." ( சங்கீதம் 3 : 6 ) என்கின்றார் தாவீது.
புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலரான பேதுருவை ஏரோது கொலைசெய்யும் நோக்கத்துடன் பிடித்து சிறையிலடைத்து வைத்திருந்தான். அதற்கு முன்னர்தான் அவன் யோவானின் சகோதரனாகிய யாக்கோபைக் கொலைசெய்திருந்தான். அது யூதர்களுக்குப் பிடித்திருந்ததால் பேதுருவையும் கொலைசெய்ய எண்ணிச் சிறையில் அடைத்து வைத்திருந்தான்.
பொதுவாக கொலைசெய்யப்படப்போகும் கைதிகளுக்கு தண்டனை நிறைவேறப்போகும் நாளுக்கு முந்தின நாள் இரவில் தூக்கம் வராது என்கின்றனர் சிறை அதிகாரிகள். ஆனால் நாம் வாசிக்கின்றோம் அப்போஸ்தலரான பேதுரு எந்தக் கவலையுமின்றி சுகமாகச் சிறையில் தூங்கிக்கொண்டிருக்கின்றார். இதை, "ஏரோது அவரை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தார்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 : 6 ) என நாம் வாசிக்கின்றோம்.
தாவீது கூறுவதுபோல இங்கு பேதுருவையும் தேவன் தனது தூதர்களை அனுப்பிச் சிறையிலிருந்து விடுவித்தார்.
அன்பானவர்களே, எந்தக் கவலை, துன்பம், நோய் வந்தாலும் கவலைப்படாமல் தாவீது கூறுவதுபோல "கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்." என அறிக்கையிடுவோம். தேவன் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுபவரல்ல, தாவீதை விடுவித்தனர், பேதுருவோடு இருந்து அவரை அதிகாரத்தின் கைகளுக்குத் தப்ப வைத்தவர் நம்மையும் விடுவிப்பார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
THE LORD SUSTAINS ME
AATHAVAN 🔥 964🌻
Monday, September 18, 2023
"I laid me
down and slept; I awaked; for the LORD sustained me." (Psalms 3: 5)
The real beauty of today’s
verse can be seen only by looking at the background in which these hymns are
written. David does not say these verses as we slept comfortably on the
mattress and woke up, and say I laid me down and
slept; I awaked; for the LORD sustained me. On the contrary, these are
the words spoken by David as he hides in caves and mountain crevices as he
tries to escape his son Absalom as he wanders around seeking to kill him.
David reports today's words when
he was wandering without proper food, sleep and rest and tired from wandering. David
wakes up from sleep and says with joy and says, "
I awaked; for the LORD sustained me"
Two
verses before this he says, "But thou, O LORD,
art a shield for me; my glory, and the lifter up of mine head." ( Psalms 3
: 3 ) Yes, David was able to sleep peacefully because he knew that the
Lord supported him with a shield. Therefore, "I will not be afraid of ten thousand
of people, that have set themselves against me round about.” (Psalms 3: 6) says
David.
In the New Testament, the
apostle Peter was captured and imprisoned by Herod with intent to kill him.
Before that he had killed James, John's brother. Because it pleased the Jews,
he kept Peter in prison, intending to kill him also.
Now
a days prison officials say that
prisoners who are going to be executed usually do not sleep well the night
before their execution. But we read that the apostle Peter was sleeping soundly
in prison without any worries. It says, "And when Herod would have brought
him forth, the same night Peter was sleeping between two soldiers, bound with
two chains: and the keepers before the door kept the prison." (Acts 12:
6) we read.
As
David says, here God also sent his messengers and freed Peter from prison.
Beloved, do not worry about anything,
suffering or sickness. Let we also say as David, "Lord, you are my shield,
my glory and the one who lifts up my head." God has no partiality. God who
delivered David, and Peter from the hands of the enemies, will deliver us also.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment