"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1745 🔆 ஆதவன் 17.11.2025 திங்கள்
"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 )
இன்று உலகினில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களும் பெரிய பெரிய தொழிச்சாலைகளும் உள்ளன. ஒவ்வொரு நிறுவனங்களிலும் பல ஆயிரம்பேர் பணிபுரிகின்றனர். இது தவிர, நாடுகளின் அரசாங்கமானது மிகப்பெரிய வேலைவாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் எல்லோரும் தேவனால் தகுதிபெற்றவர்களா? பெரும்பாலானவர்கள் தேவனை அறியாதவர்கள் அல்லவா? ஆனாலும் அனைத்தும் சிறப்பானதாகத்தானே நடைபெறுகின்றது? அப்படியானால் "எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." இன்றைய தியான வசனம் சொல்வது பொய்யா?
அன்பானவர்களே, வேதாகம வார்த்தைகளுக்கு நாம் எப்போதுமே ஆவிக்குரிய பொருளையே காணவேண்டும். இன்றைய தியான வசனத்தை நாம் வெறுமனே உலகக் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் நமக்கு இது வெற்று வார்த்தைகள் போலவே இருக்கும். இன்று பலரும் வேதாகம வார்த்தைகளை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம்.
இன்றைய தியான வசனம் நூறு சதவிகிதம் ஆவிக்குரிய அர்த்தம் கொண்டது. நாம் தேவனுக்கு முற்றிலும் ஏற்புடையவர்களாக வாழவேண்டுமானால் அதுபற்றி யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல; நமது சுய முயற்சிகள் மூலம் நாம் பரிசுத்தமாகி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியாது என்று பொருள்; கிறிஸ்து நமக்குள் வராமல் ஆவிக்குரிய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்மில் உருவாகாது என்று பொருள்.
இதனையே இயேசு கிறிஸ்து, "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." (யோவான் 15:5) என்று கூறினார். தண்டோடு இணைந்திருக்கும் திராட்சைக் கொடியானது அந்தத் தண்டுமூலம் செடியின் சாரதைப்பெற்று கனி கொடுப்பதுபோல கிறிஸ்துவோடு இணைந்து இருக்கும்போது மட்டுமே நம்மால் கனிகொடுக்கமுடியும்.
தண்டோடு இணைந்திருப்பதுதான் நமது தகுதி. அந்தத் தகுதியை இழந்துவிட்டோமானால் நம்மால் எதுவும் செய்யமுடியாது. "ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்." ( யோவான் 15 : 6 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?
ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவோடு இணைக்கப்படாவிட்டால் நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பது சிந்திக்கக்கூட முடியாதது. அப்படி வாழ நாம் தகுதியானவர்கள் அல்ல. இதற்கு நம்மைத் தகுதிபடுத்துபவர் பிதாவாகிய தேவனே. எனவேதான், எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." (யோவான் 6:37) என்றார். நமது சுய முயற்சிகளல்ல; தேவனது கரமே நம்மைப் பரிசுத்தமாக்கிட முடியும். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
📖
Scripture Meditation No. 1745
🔆 AATHAVAN
– Monday, 17.11.2025
“Not that we are adequate in
ourselves to consider anything as coming from ourselves, but our adequacy is
from God.” — 2 Corinthians 3:5 (NASB)
Today, there are thousands
of industries and large manufacturing units around the world. In each of these,
thousands of people are employed. Beyond that, the governments of various
nations provide enormous job opportunities; millions work in government sectors.
Are all of these people “made adequate by God”? Are not most of them people who
do not know God? Yet everything seems to function efficiently. If so, does
today’s Scripture verse — “our adequacy is from God” — become untrue?
Beloved, whenever we read
the Word of God, we must always look for its spiritual meaning. If we try to
interpret today’s verse only from a worldly standpoint, it will appear
meaningless. This is exactly why many people today fail to understand Scripture
properly.
Today’s meditation verse
carries 100% spiritual significance. If we desire to live in a way that is
completely pleasing to God, we are not adequate in ourselves to even think
about such things. No amount of our own effort can make us holy or acceptable
before God. Unless Christ dwells in us, spiritual thoughts and spiritual
actions cannot be birthed within us.
That is why Jesus Christ said:
“I am the vine, you are the
branches; the one who remains in Me, and I in him, bears much fruit, for apart
from Me you can do nothing.” — John 15:5 (NASB)
Just as a branch connected
to the vine receives nourishment through the stem and bears fruit, only when we
remain connected to Christ can we bear fruit.
Remaining connected to the
Vine — that is our adequacy. If we lose that connection, we become
capable of nothing. Did not Jesus warn:
“If anyone does not remain in Me, he is thrown away like a branch and dries up;
and they gather them, and throw them into the fire, and they are burned.” — John
15:6 (NASB)
Yes, beloved, without being
united with Christ in our spiritual life, we cannot even imagine becoming
anything useful for God. We are not adequate in ourselves. It is God the Father
who makes us adequate. That is why the Apostle Paul boldly says, “our
adequacy is from God.”
Our Lord Jesus Christ also declared:
“Everything that the Father
gives Me will come to Me, and the one who comes to Me I certainly will not cast
out.” — John 6:37 (NASB)
It is not our own effort —
it is the hand of God that sanctifies us. Let us surrender ourselves to Him.
God’s Message :- Bro. M.
Geo Prakash
No comments:
Post a Comment