DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, November 23, 2025

🦋 Meditation verse - லுூக்கா 23 : 42 / Luke 23:42

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1753                                  🔆 ஆதவன் 25.11.2025 செவ்வாய்     


"ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்." ( லுூக்கா 23 : 42 )

இன்று பலரும் பல்வேறு விதங்களில் ஜெபங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். மேலும், கிறிஸ்தவ சபைகளில் பல்வேறு ஜெப முயற்சிகள் செய்யப்படுகின்றன. நள்ளிரவு ஜெபம், உபவாச ஜெபம், சங்கிலி ஜெபம்,  உள்ளிருப்பு ஜெபம், இளைஞர் ஜெபம், பெண்கள் கூடுகை, விசேஷித்த ஜெப ஆராதனை என்று இந்த ஜெப பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால், இத்தகைய ஜெபக் கூடுகைகளில் பாவத்தைக்குறித்து எந்த அளவுக்கு மக்களுக்கு உணர்வூட்டப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அன்பானவர்களே, மனம் திரும்புதல் இல்லாத எந்த ஜெபமும் தேவனுக்குமுன் ஏற்புடையதல்ல என்பதனை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். . 

இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கும் ஜெபம் பெரிய பரிசுத்தவான் செய்த நீண்ட ஜெபமல்ல; மாறாக, கொலைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு திருடன் செய்த விண்ணப்பம்.  வெறும் ஏழு அல்லது எட்டு வார்த்தைகளைக்கொண்ட ஜெபம். இன்று கிறிஸ்தவர்கள் வேதாகமத்திலிருந்து பல்வேறு ஜெபங்களை உதாரணம் கொண்டு ஜெபிக்கின்றனர். யாபேஸின் ஜெபம், மோசேயின் ஜெபம், தாவீது, சாலமோன் இவர்களின் ஜெபம் இவற்றை பலர் பலவேளைகளில் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இந்தக் கொலைக்  குற்றவாளியின் ஜெபம் அவற்றைவிட மேலானது; இது வார்த்தைகளின் அலங்கரிப்பல்ல; மாறாக, மனம் வருந்தி இருதயத்திலிருந்து அவன் செய்த விண்ணப்பம். 

இந்த ஜெபத்தை அவன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுக்குமுன் தன்னோடு சிலுவையில் அறியப்பட்டிருந்த சக திருடனை நோக்கிக் கூறும் வார்த்தைகளைக் கவனித்துப்பார்ப்போம். "நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?  நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே" ( லுூக்கா 23 : 40-41 ) என்கின்றான். 

அதாவது, அவன் தனது பாவத்தை உணர்ந்திருந்தான்; தான் தண்டிக்கப்படுவது முறையானதுதான் என்பதனை ஏற்றுக்கொண்டான். இயேசு கிறிஸ்து பாவமற்றவர் என்பதனையும், அவரே பாவங்களை மன்னிக்கின்ற மேசியா என்பதனையும் உணர்த்துகொண்டவனாக இருந்தான். எனவேதான், "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்." என்று வேண்டினான். "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( லுூக்கா 23 : 43 )

ஆம் அன்பானவர்களே, மனம் திரும்புதல் இல்லாத நீண்ட நெடிய ஜெபங்களும் உபவாசங்களும் தேவனுக்குமுன் எடுபடாது. மாறாக, மெய்யான மனஸ்தாபத்துடன் மனம் வருத்தி நாம் செய்யும் சிறு ஜெபத்தையும் தேவன் கனிவுடன் ஏற்றுக்கொள்கின்றார். வாழ்க்கையில் திருட்டையே தொழிலாகக்கொண்டு வாழ்ந்தவன் மனம்திரும்பி செய்த சிறு ஜெபத்துக்கு, "இன்று என்னோடுகூட பரதேசியில் இருப்பாய்" எனும் மேலான  ஒரு பதிலை கிறிஸ்துவிடம் பெற்றுக்கொண்டான்; பரலோக வாழ்வைப்  பெற்றுக்கொண்டான் என்றால் நமது ஜெபத்தைத் தேவன் கேட்கமாட்டாரா? 

நாம் நம்மையே நிதானித்துப்பார்ப்போம். நமது பாவ வழக்கை என்றாவது நம்மை இருதயத்தில் குத்துதல் ஏற்படுத்தியிருக்கின்றதா? இல்லையானால் எந்த உணர்வுமில்லாமல் வெறுமனே ஜெபித்துக்கொண்டிருக்கின்றோமா? ஆம் அன்பானவர்களே, "எனக்கு ஜெபிக்கத்  தெரியாது" என்று யாரும் எண்ணவேண்டாம். இந்தத் திருடன் ஜெபித்ததுபோல நம்மால் ஜெபிக்க முடியாதா? 

இந்தத் திருடன் தனது பாவங்களை உணர்த்ததுபோல உணர்ந்து, மெய்யாகவே அந்தப் பாவங்களைச் செய்ததற்காக மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பை வேண்டுவோமானால் தேவன் நிச்சயமாக நமது பாவங்களை மன்னித்து நம்மையும் ஏற்றுக்கொள்வார்.  ஆம், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (1 யோவான் 1:9)

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                    

“Inside the Seeds” 🌳

Bible Meditation No. 1753
AATHAVAN – 25.11.2025, Tuesday

“Jesus, remember me when You come in Your kingdom!” (Luke 23:42)

Today, many of us pray in various ways. In Christian churches too, numerous prayer initiatives are conducted—midnight prayers, fasting prayers, chain prayers, intercessory prayers, youth prayers, women’s fellowship, special prayer worship, and the list goes on endlessly. But in these prayer gatherings, how far are people made aware of sin? This remains a big question.

Beloved, we must first understand one truth: any prayer without repentance is not acceptable before God.

The prayer we read in today’s meditation is not a long prayer made by a great saint. Instead, it is the plea of a thief who had been sentenced to death. A prayer consisting of barely seven or eight words.

Today, Christians take several prayers from the Bible as models—Jabez’s prayer, Moses’ prayer, the prayers of David and Solomon—and use them often. But the prayer of this condemned criminal was not decorated with poetic words; rather, it was a heartfelt cry that rose from deep sorrow and repentance.

Before he prayed to Jesus Christ, let us notice what he said to the other thief crucified beside him: “Do you not even fear God, since you are under the same sentence of condemnation? And we indeed are suffering justly, for we are receiving what we deserve for our deeds; but this Man has done nothing wrong.” (Luke 23:40–41)

This means he had realized his sin. He accepted that his punishment was just. He understood that Jesus Christ is sinless, and that He is the Messiah who forgives sins. Therefore, he prayed: “Jesus, remember me when You come in Your kingdom.”

And Jesus replied to him: “Truly I say to you, today you shall be with Me in Paradise.” (Luke 23:43)

Yes, beloved, long extended prayers and fastings without repentance are not acceptable to God. But even a short prayer that comes from a truly repentant heart is received graciously by the Lord.

A man who lived his entire life as a thief prayed a simple prayer in repentance—and he received the glorious promise: “Today you shall be with Me in Paradise.” If Christ granted him eternal life, will He not hear our prayer?

Let us examine ourselves. Has our sinful way of life ever pierced our hearts? Or are we praying without any understanding or conviction?

Beloved, no one should say, “I don’t know how to pray.” Can we not pray as this thief prayed?

If we, like him, realize our sins, truly repent for what we have done, and seek forgiveness from the Lord, God will certainly forgive and accept us.
For the Scripture says:

“If we confess our sins, He is faithful and righteous to forgive us our sins and to cleanse us from all unrighteousness.” (1 John 1:9)

Message by: Bro. M. Geo Prakash           

No comments: