DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, November 12, 2025

🦋 Meditation verse - உபாகமம் 23 : 14 / Deuteronomy 23:14

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1742                                  🔆 ஆதவன் 14.11.2025 வெள்ளி      


"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது." ( உபாகமம் 23 : 14 )

இஸ்ரவேலர் மோசேயால் எகிப்திலிருந்து கானானை நோக்கி வழிநடத்தப்பட்டபோது நாற்பது ஆண்டுகளாக பயணம் செய்தனர். கர்த்தரின் வார்த்தையின்படி பல நாட்கள் ஒரே இடத்தில் தங்கியிருப்பர். கர்த்தர் கட்டளையிடும்போது புறப்பட்டுத் தங்களது பயணத்தைக் தொடர்வர்.  தேவனே இந்த நாட்களில் அவர்களுக்குத் துணையாக இருந்து நடத்தினார். 

பாளையம் என்பது இஸ்ரவேலர் கூடாரமடித்துத் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியாகும். தேவனாகிய கர்த்தர் இஸ்ரேலருக்குப் பாதுகாப்பாக அந்தக் குடியிருப்புப் பகுதியில் உலாவிக்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு இஸ்ரவேலரைவிட்டு அகன்றிடக்கூடாது என்பதில் மோசே உறுதியாக இருந்தார். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். எனவே பரிசுத்தக் குறைவு காணப்படுமேயானால் அவர் அகன்று போய்விடுவார்.  ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது என இஸ்ரவேலருக்கு அறிவுறுத்தினார்.  

ஆம் அன்பானவர்களே, இஸ்ரவேலருக்கு அன்று கிடைத்ததுபோன்ற பாதுகாப்பு ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் கிடைக்கவேண்டுமானால் நாமும் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், "நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக." ( லேவியராகமம் 11 : 45 ) எனும் வார்த்தைகள் இன்று நமக்கும் தேவனது வார்த்தையாக அறிவிக்கப்படுகின்றது. 

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." ( 1 பேதுரு 1 : 16 ) என்று நமக்கு நினைவூட்டுகின்றார். மேலும், எபிரெய நிருப ஆசிரியரும், "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்;  பரிசுத்தமில்லாமல்  ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." (எபிரெயர் 12:14) என்கின்றார்.

இன்றைய தியான வசனத்தில் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" என்று. நமது உள்ளமாகிய தேவன் வசிக்கும் பாளையம் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அதில் அசுத்தம் காணப்படுமேயானால் அவர் நம்மை விட்டு விலகிப் போய்விடுவார். நாம் தேவனை வாழ்வில் தரிசிக்கவும் அவரோடுள்ள உறவில் வளரவும் நமது இருதயம் சுத்தமானதாக இருக்கவேண்டியது அவசியம். 

எனவேதான், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்". (மத்தேயு 5:8) என்றார் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நமது இருதயத்தின் நினைவுகளே நமது வார்த்தைகள்மூலம் வெளிவருகின்றன. ஆம், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.  எப்படியெனில்,  இருதயத்திலிருந்து  பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும்            புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்". (மத்தேயு 15:18-20)

நம் தேவனாகிய கர்த்தர் நம்மை இரட்சிக்க நமது உள்ளமாகிய பாளயத்திற்குள்ளே வந்து உலாவ விரும்புகின்றார். ஆகையால், அவர் நம்மிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, நம்மை விட்டு விலகிப்  போகாதபடிக்கு, நமது உள்ளமாகிய பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                


Inside the Seeds 🌳

📖 Bible Meditation No. 1742
🔆
AATHAVAN — Friday, 14 November 2025

“Since the Lord your God walks in the midst of your camp to save you and to defeat your enemies before you, therefore your camp must be holy; and He must not see anything indecent among you or He will turn away from you.” — Deuteronomy 23:14 (NASB)

When the Israelites were led by Moses from Egypt toward Canaan, they journeyed for forty years. According to the Lord’s word, they stayed in one place for several days, and when He commanded, they set out again. During all those years, the Lord Himself walked with them, guiding and protecting them.

The camp referred to the area where the Israelites pitched their tents and lived. The Lord God moved among them within that camp as their divine protector. Moses firmly believed that God’s protection should never depart from Israel. Since the Lord is holy, any form of impurity or uncleanness would cause Him to withdraw His presence. Hence, God instructed Israel:

“Therefore, your camp must be holy; and He must not see anything indecent among you or He will turn away from you.”

Beloved, if we desire the same divine protection that the Israelites enjoyed, we too must live holy lives as spiritual Israelites. The Lord said,

“For I am the Lord who brought you up from the land of Egypt to be your God; thus you shall be holy, for I am holy.” — Leviticus 11:45 (NASB)

The Apostle Peter reminds us of this same truth: “You shall be holy, for I am holy.” — 1 Peter 1:16 (NASB)

And the author of Hebrews further exhorts us:

“Pursue peace with all people, and the holiness without which no one will see the Lord.” — Hebrews 12:14 (NASB)

In today’s meditation verse, we again read:

“Therefore, your camp must be holy; and He must not see anything indecent among you or He will turn away from you.”

Our heart — the dwelling place of God — is like that camp. It must remain pure and undefiled. If impurity is found within, the Lord will turn away. To behold God in our lives and to grow in our relationship with Him, our hearts must be kept clean and holy.

That is why our Lord Jesus Christ said: “Blessed are the pure in heart, for they shall see God.” — Matthew 5:8 (NASB)

The thoughts of our heart are revealed through our words. As Jesus also said,

“The things that come out of the mouth come from the heart, and those things defile the person. For out of the heart come evil thoughts, murders, acts of adultery, other immoral sexual acts, thefts, false testimonies, and slanderous statements. These are the things that defile the person.” — Matthew 15:18–20 (NASB)

Our Lord God desires to walk within the camp of our heart to save us. Therefore, our inner life must be kept holy, so that He may not see anything unclean among us and depart from us.

📖 Message by: Bro. M. Geo Prakash
                               

No comments: