DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, November 23, 2025

🦋 Meditation verse - ஏசாயா 62: 3 / Isaiah 62:3

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1754                                   🔆 ஆதவன் 26.11.2025 புதன்      


"நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்." ( ஏசாயா 62: 3)

கிறிஸ்தவர்களில் பலரும் பொதுவாக இன்றைய தியான வசனத்தை இறந்தவர்களது கல்லறைகளிலும், நினைவு நாள் அட்டைகளிலும் அச்சிடுவார்கள்.  ஆனால் இந்த வசனம் இறந்தவர்களுக்காக அல்ல; மாறாக, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மக்களுக்குக் கூறப்பட்டுள்ள வசனமாகும். 

ஒரு அரசனுக்கு கிரீடம், மணிமுடி என்பன அதிகாரத்தையும் மேன்மையையும் வெளிப்படுத்தும் அடையாளங்களாகும். அதாவது, இந்த வசனத்தில், நாம் ஒரு மதிப்பின் வலியுறுத்தலைக் காண்கிறோம். "அழகுள்ள கிரீடம்" மற்றும் "ராஜமகுடம்" ஆகிய உருவகங்கள் சிறப்பானவை. இவை,  அழகு மற்றும் விசேஷத்தைக் குறிக்கிறது. இது கடவுளுடைய மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் அவருடைய பார்வையில் விலைமதிப்பற்றவர்கள் என்பதைக் குறிக்கிறது. "கிரீடம்" என்ற சொல் மதிப்புமிக்க மற்றும் உயர்த்தப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது, இது ஒவ்வொருவருக்கும் கடவுளின் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு என்பதை உணர்த்துகிறது.

இந்த வசனத்தின் ஆழத்தை நாம்  புரிந்துகொள்ள, இந்த வசனம் கூறப்பட்ட சூழல் மற்றும் அதன் பொருளை நாம் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும்.  ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை மற்றும் மீட்பின் செய்திளை வழங்குவதில் பெயர்பெற்றவர். இஸ்ரவேல்  மக்கள் நாடுகடத்தலில் இருந்து திரும்பி வந்து, எருசலேமில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பல சவால்களை  எதிர்கொண்டனர். இந்த வசனத்தில் உள்ள உருவகம், கடவுள் தம் மக்களை உயர்த்துவார்  என்ற வாக்குறுதியைப் பிரதிபலிக்கிறது. அதாவது, ஏசாயா இந்த வசனத்தை அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேல் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்த பிறகு அவர்களின் அதிகாரம் மீட்டெடுக்கப்படுவதை குறிப்பிட எழுதுகின்றார். 

இன்றைய புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நாம் பாவத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து கிறிஸ்துவால் மீட்கப்பட்டு  கடவுளின் கையில் மகத்தான ஒருவராக மாற்றப்படுகிறோம் என்பதை இந்த வசனம் குறிக்கின்றது. மட்டுமல்ல, மீட்கப்பட்ட நம்முடைய உள்ளார்ந்த மதிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது. நாம் கடவுளின் பிரியமான பிள்ளைகள் என்ற நம்முடைய அடையாளத்தை உணர்ந்துகொள்ள இது ஒரு ஊக்க வசனமாக அமைகிறது; நாம் தேவனால் ஒரு நோக்கத்துடனும் முக்கியத்துவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருக்கின்றோம். "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 9) என்று பேதுரு குறிப்பிடுகின்றார். 
 
ஆம் அன்பானவர்களே, உலக வாழ்வில் ஒருவேளை வறுமை நம்மை வாட்டி வதைக்கலாம் ஆனால், கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் பிச்சைக்காரர்களல்ல; ராஜாக்கள். எனவேதான் ஏசாயா தொடர்ந்து இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." ( ஏசாயா 62: 4) நாம் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், ராஜமுடியுமாயிருகின்றோம் என்பது எத்தனை மேன்மையான காரியம்!! எனவே மகிழ்ச்சியாய் இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

“Inside the Seeds” 🌳

📖 Bible Meditation No. 1754
🔆
AATHAVAN – Wednesday, 26.11.2025

“You will also be a crown of beauty in the hand of the Lord, And a royal diadem in the hand of your God.” — Isaiah 62:3

Many Christians commonly print today’s meditation verse on tombstones and memorial cards. However, this verse is not meant for the dead; rather, it is spoken to the people redeemed by Christ.

For a king, a crown and a royal diadem symbolize authority and majesty. In this verse, we see a strong emphasis on value and honour. The images of “a crown of beauty” and “a royal diadem” are powerful, representing beauty, uniqueness, and special favour. God’s people are not ordinary; they are precious in His sight. The word “crown” points to something valuable and exalted, reminding us that every person has a significant place in God’s divine plan.

To understand the depth of this verse, we must first grasp its context and purpose. The prophet Isaiah is well known for delivering messages of comfort, hope, and restoration to the Israelites. After returning from exile, the people of Israel faced many challenges in rebuilding their lives in Jerusalem. The imagery in this verse reflects God’s promise to lift them up again. Isaiah writes this to assure a people once enslaved and exiled that their honour would be restored after much suffering.

In the same way, as New Testament believers who were once slaves to sin but redeemed by Christ, we are transformed into valuable vessels in God’s hands. This verse reminds us of our inner worth. It encourages us to understand our identity as God’s beloved children—created with purpose and significance.

All who are redeemed are made by God to be kings and priests. As Peter declares:

“But you are a chosen people, a royal priesthood, a holy nation, a people for God’s own possession, so that you may proclaim the excellencies of Him who has called you out of darkness into His marvelous light.” — 1 Peter 2:9

Dearly beloved, though poverty or struggles may press us in this earthly life, those redeemed by Christ are not beggars but kings. That is why Isaiah continues in the next verse:

“It will no longer be said to you, ‘Forsaken,’

Nor to your land will it any longer be said, ‘Desolate’;

But you will be called, ‘My delight is in her,’

And your land, ‘Married’;

For the Lord delights in you,

And to Him your land will be married.”

Isaiah 62:4

What a glorious truth—that we are a crown of beauty and a royal diadem in the hand of the Lord! Let us rejoice in this honour.

God’s Message:- Bro. M. Geo Prakash


                                

No comments: