DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, November 20, 2025

🦋 Meditation verse - ஏசாயா 41: 8-9 / Isaiah 41:8–9

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1751                                  🔆 ஆதவன் 23.11.2025 ஞாயிறு   


"என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதன் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்." ( ஏசாயா 41: 8-9)

நேற்றைய தியான வசனத்தைப்போலவே இன்றும் நமக்குத் தேவன் ஆறுதலனான வார்த்தைகளைத் தருகின்றார். ஒரு காலத்தில் நாம் தேவனை அறியாதவர்களாக வாழ்ந்துவந்தோம். ஆனால் தேவன் கிருபையால் நம்மை இரட்சித்துத் தனது பிள்ளைகளாக  ஏற்றுக்கொண்டார். இதனையே அவர், நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதன் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று கூறுகின்றார். 

இப்படித் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நாம் இஸ்ரவேலராகவும் அவரது  சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியாகவும் இருக்கின்றோம். இதனையே, "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று." (கலாத்தியர் 3:14) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம் அன்பானவர்களே, புறஇனத்தாரான நாம் கிறிஸ்து இயேசுவின்மூலம் இந்த ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்கின்றோம். 

இப்படி நாம் அவருக்கேற்ற ஆபிரகாமின் சந்ததியாக இருப்பதால் நம்மைப்பார்த்து, "நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்" என்று அன்போடு கூறுகின்றார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னிடம் வரும் எவரையும் தள்ளிவிடமாட்டேன் என்று கூறவில்லையா? "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்   என்னிடத்தில்  வரும்,  என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" (யோவான் 6:37) என்று கூறினாரே ?

கிறிஸ்து இயேசுவை நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது நாம் ஆபிரகாமைப்போல நிரந்தரமாக அவரது நண்பர்களாகின்றோம். எனவே, ஆபிரகாமுக்கு தேவன் வாக்களித்த அதே ஆசீர்வாதங்களும் நமக்கு உரியவை ஆகின்றன. 

எனவே எந்தச் சூழ்நிலையிலும் நாம் மனம் கலங்காமல் இருப்போம். துன்பங்கள், பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது, "நான் தேவனின் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததி; தேவன் பூமியின் கடைஎல்லையிலிருந்து என்னை எடுத்து வந்துள்ளார்; என்னைப்பார்த்து நீ என் தாசன் என்கின்றார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், உன்னை வெறுத்துவிடவில்லை என்று கூறுகின்றார்" என்று நமக்குள்ளே கூறிக்கொள்வோம்.  

நமது வாழ்வில் துன்பங்கள், சோதனைகள் துரத்தும்போது தேவனின் இந்த வார்த்தைகள் நம்மை மனம் பதறாமல் இருக்கச்செய்யும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                 

“Inside the Seeds” 🌳

📖 Scripture Meditation No. 1751
🔆
AATHAVAN – 23.11.2025, Sunday

“But you, Israel, My servant,
Jacob whom I have chosen,
Descendant of Abraham My friend—
You whom I have taken from the ends of the earth
And called from its remotest parts
And said to you, ‘You are My servant,
I have chosen you and have not rejected you.’” — Isaiah 41:8–9

Just like yesterday’s meditation verse, today also the Lord speaks comforting words to us. Once, we lived without knowing God. But by His grace, He saved us and accepted us as His children. About this He says, “I took you from the ends of the earth, called you from its farthest borders, and said to you: ‘You are My servant; I have chosen you.’”

As those chosen by God, we are counted as Israel and as the descendants of Abraham, His friend. This is exactly what the Apostle Paul affirms:
“in order that in Christ Jesus the blessing of Abraham would come to the Gentiles, so that we would receive the promise of the Spirit through faith.” — Galatians 3:14 (NASB)

Yes, beloved, we who are Gentiles have received this blessing through Christ Jesus.

Because we are Abraham’s spiritual descendants, the Lord lovingly says to us:
“You are My servant, I have chosen you, I have not rejected you.”

Did not our Lord Jesus Christ say that He will never cast out anyone who comes to Him? “All that the Father gives Me will come to Me, and the one who comes to Me I certainly will not cast out.” — John 6:37 (NASB)

When we receive Christ Jesus into our hearts, we become—like Abraham—His everlasting friends. Therefore, the very blessings God promised Abraham also become ours.

So, in any situation, let us not be discouraged. When troubles and pressures surround us, let us tell ourselves:

“I am the descendant of Abraham, God’s friend.
God has taken me from the ends of the earth.
He calls me His servant.
He has chosen me and has not rejected me.”

These words of God will strengthen us and keep our hearts from trembling when trials and afflictions chase us in life.

Devotional Message by Bro. M. Geo Prakash

No comments: