"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1699 ஆதவன் 02.10.2025 வியாழன்
"பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்." ( ஏசாயா 38 : 18-19 )
துதித்தல் என்பது வெறுமனே நாம் ஆண்டவரைப் புகழ்வதல்ல, மாறாக நாம் துதிப்பதன்மூலம் நமது நன்றியுணர்ச்சியினை வெளிப்படுத்துகின்றோம். ஏசாயா தீர்க்கத்தரிசி தேவனைத் தரிசித்தபோது அவர் கண்ட காட்சியினை அவர், "சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்". ( ஏசாயா 6:2-3) என்று விளக்குகின்றார்.
நாம் கிறிஸ்துவை வாழ்வில் அறிந்துகொண்டோமானால் நம்மையறியாமல் எப்போதும் தேவனைத் துதிக்கும் துதி நம்முடைய நாவில் இருந்துகொண்டே இருக்கும். அது வலுக்கட்டாயமாக நாம் முயலுவதால் அல்ல; மாறாக எப்படி நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோமோ அதுபோல நம்மை அறியாமலேயே நமது இருதயத்திலிருந்து தேவனை நோக்கி எழும்பும் நன்றி உணர்வாக அது வெளிப்படும்.
இப்படி நாம் தேவனைத் துதிக்கின்றவர்களாக வாழ்வோமானால் நாம் ஆவியில் உயிருள்ளவர்களாக இருக்கின்றோம் என்று பொருள். இல்லையானால் வெளிப்பார்வைக்கு உயிருள்ளவர்கள் என்று கருதப்பட்டாலும் தேவனது பார்வையில் நாம் உயிரில்லாதவர்களாகவே இருக்கின்றோம் என்று பொருள். இதனையே, "மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா". ( சங்கீதம் 115 : 17-18) என்று வாசிக்கின்றோம்.
தேவனை வாழ்வில் அனுபவித்த சங்கீத ஆசீரியர், "அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்". ( சங்கீதம் 146 : 1-2 ) என்று கூறுகின்றார். மேலும் "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறப்பட்டுள்ளது.
மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்" என்று. அதாவது, தேவனை வாழ்வில் அறிந்தவர்கள் அவரைத் துதிப்பது மட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளுக்கும் தேவனது மகத்துவத்தைப்பற்றி எடுத்துச் சொல்பவர்களாக இருப்பார்கள். அவர்களது சந்ததி தேவனை அறிந்த சந்ததியாக இருக்கும்.
"சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்". (எபேசியர் 5:19-21) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
மட்டுமல்ல, நாம் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைகளுக்கிடையே தேவனை நாம் துதிக்கிறவர்களாக இருக்கவேண்டியது அவசியம். "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (கொலோசெயர் 3:16-17) என்று கூறப்பட்டுள்ளது.
இப்படித் தேவனை நாம் துதிப்பதால் என்ன நடக்கின்றது? முதலாவது நாம் தேவ ஐக்கியத்தில் வளர்க்கின்றோம், பாவத்துக்கு விலகி வாழ்கின்றோம், தேவனுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நம்மால் முடிகின்றது, எல்லாவற்றுக்கும் மேலாக, துதிக்கும் தேவ மனிதனைச் சாத்தான் நெருங்குவதில்லை. துதியின் சங்கீதமாகிய சங்கீதம் 136 ஐ வாசித்துப்பார்த்தால் தேவ மனிதன் எப்படியெல்லாம் தேவனைத் துதித்து மகிமைப்படுத்த நமக்கு அறிவுறுத்துகின்றார் என்பதனை நாம் புரித்துக்கொள்ளலாம். தேவனைத் துதித்து நாம் உயிருள்ளவர்களாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳 Scripture Meditation No. 1699 AATHAVAN – Thursday, 02.10.2025
“For Sheol cannot thank You;
Death cannot praise You; Those who go down to the pit cannot hope for Your
faithfulness. It is the living who give thanks to You, as I do today; A father
tells his sons about Your faithfulness.” (Isaiah 38:18–19)
Praise is not merely about
glorifying the Lord; rather, through our praise we express our gratitude to
Him. When the prophet Isaiah had a vision of God, he described what he saw: ‘Seraphim
stood above Him, each having six wings: with two each covered his face, and
with two each covered his feet, and with two each flew. And one called out to
another and said, “Holy, Holy, Holy, is the Lord of armies, The whole earth is
full of His glory.”’ (Isaiah 6:2–3).
When we truly know Christ in
our lives, praise to God will always be upon our lips without us even being
conscious of it. This is not something we strive for by force, but just as we
breathe without awareness, thanksgiving rises naturally from our hearts toward
God.
If we live as people who
praise God, it means we are alive in the Spirit. Otherwise, though we may
appear alive outwardly, in God’s eyes we are spiritually dead. As it is
written: “The dead do not praise the Lord, Nor do any who go down into silence; But as for us, we will bless the Lord From this time and forever. Praise the
Lord!” (Psalm 115:17–18)
The psalmist who experienced
God declares: “Praise the Lord! Praise the Lord, my soul! I will praise the
Lord while I live; I will sing praises to my God while I have my being.” (Psalm
146:1–2) And again: “Praise the Lord! For it is good to sing praises to our
God; For it is pleasant and praise is beautiful.” (Psalm 147:1)
Today’s meditation verse also
says: “A father tells his sons about Your faithfulness.” That means
those who know God in their lives will not only praise Him themselves but will
also make His greatness known to their children, so their generations will also
grow up knowing the Lord.
The apostle Paul exhorts: “…speaking
to one another in psalms and hymns and spiritual songs, singing and making
melody with your hearts to the Lord; always giving thanks for all things in the
name of our Lord Jesus Christ to our God and Father; and subject yourselves to
one another in the fear of Christ.” (Ephesians 5:19–21)
Furthermore, whatever task we
are engaged in, we must be people who praise God even in the midst of our work:
“Let the word of Christ richly dwell within you, with all wisdom teaching and
admonishing one another with psalms, hymns, and spiritual songs, singing with
thankfulness in your hearts to God. Whatever you do in word or deed, do
everything in the name of the Lord Jesus, giving thanks through Him to God the
Father.” (Colossians 3:16–17)
What happens when we praise
God in this way? First, we grow in fellowship with Him. Second, we are enabled
to live separated from sin. Third, we are strengthened to live as witnesses for
Christ. Above all, Satan cannot come near a person who praises God. Psalm 136,
the great psalm of thanksgiving, teaches us how God’s people are to glorify Him
in every situation.
Let us live as those who are
truly alive by praising God continually.
Devotional Message
by: Bro. M. Geo Prakash

No comments:
Post a Comment