DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, September 22, 2025

🦋 Meditation verse - மல்கியா 4 : 2 / Malachi 4:2

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1690                                           ஆதவன் 23.09.2025 செவ்வாய்          


"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதன் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்." ( மல்கியா 4 : 2 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீதியின் சூரியன் என்று அழைக்கப்படுகின்றார். நாம் தேவனுக்குப் பயந்த வாழ்க்கை வாழ்வோமானால் நமக்கு ஆசீர்வாதம் உண்டு என்பதனை இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்"  ( நீதிமொழிகள் 8 : 13 ) என்று வாசிக்கின்றோம். இப்படிநாம் கர்த்தருக்குப் பயந்து தீமையை வெறுத்து வாழ்வோமானால் நம்மேல் நீதியின் சூரியனாகிய இயேசு பிரகாசிப்பார். அந்த ஆசீர்வாதம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதனையே, "அதன் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" என்று வசனம் கூறுகின்றது. அதாவது, ஆரோக்கியமான வாழ்வு, கொழுத்த கன்றுகளைப்போல செழிப்பான வாழ்வு நமக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கு,  தீமையை வெறுத்து வாழ்ந்த யோசேப்பு நமக்கு ஒரு உதாரணம்.  பாவம் செய்யும்படியான சூழ்நிலை தனக்குக் கிடைத்தபோதும் அவன்  "நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி" ( ஆதியாகமம் 39 : 9 ) என்று கூறி பாவத்துக்கு விலகி ஓடினான். இப்படி தேவனை அன்புசெய்து அவன் பாவத்துக்கு விலகியதால் தேவன் அவனை எகிப்தின் பார்வோனுக்கு இணையாக உயர்த்தினார். ஆம், அவன்  கொழுத்த கன்றுபோல ஆகிவிட்டான். இதுபோலவே கர்த்தருக்குப்பயந்து வாழ்ந்த ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது இஸ்ரவேலின்மேல் இராஜாவாக உயர்த்தப்பட்டார். 

வேதாகமம் முழுவதும் நாம் இப்படிக் கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த பரிசுத்தவான்கள் பலரது வாழ்க்கை மாற்றத்தினைக் காணலாம். நாமும் இப்படி வாழ்வோமானால், "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." ( ஏசாயா 60 : 20 ) என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் நமக்குக் கூறுகின்றார். 

மட்டுமல்ல, கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு இருக்குமானால் அவர் தலைமுறை தலைமுறையாக நமது பிள்ளைகளுக்கும் இரக்கம் பாராட்டுவார் என்று அன்னை மரியாள் கூறுகின்றார். ஆம், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 ) என்று அவர் பாடுவதை நாம் வாசிக்கின்றோம். 

எனவே, கர்த்தர்மேல் பற்றுக்கொண்டு அவருக்குப் பயந்த வாழ்க்கைவாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்துகொள்வது மட்டும் போதுமென்று பல கிறிஸ்தவர்கள்  எண்ணிக்கொண்டு மற்றநேரங்களில் தேவனுக்குப் பயப்படாத துன்மார்க்க வாழ்க்கை வாழ்கின்றனர். ஆராதனை, வழிபாடுகளைவிட தேவன் அவருக்குப் பயந்த வாழ்க்கையையே விரும்புகின்றார். 

இப்படி நாம் கர்த்தருக்குப் பயந்து வாழ்வோமானால் நமது வாழ்க்கையில் நீதியின் சூரியனாகிய இயேசு கிறிஸ்து உதிப்பார். அப்போது வாழ்வில் ஆரோக்கியம் இருக்கும். நமது தலைமுறை பிள்ளைகளும்  தேவ ஆசீர்வாதத்தினைப் பெறுவார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

"Inside the Seeds" 🌳

Scripture Meditation No. 1690
AATHAVAN – 23.09.2025, Tuesday

“But for you who fear My name, the sun of righteousness will rise with healing in its wings; and you will go forth and frolic-like calves from the stall.” (Malachi 4:2)

Our Lord Jesus Christ is called the Sun of Righteousness. Today’s meditation verse reminds us that when we live a life in the fear of God, we will surely inherit His blessings.

We read, “The fear of the LORD is to hate evil.” (Proverbs 8:13). When we walk in reverence before the Lord and hate evil, the Sun of Righteousness, Jesus Christ, will shine upon us. What kind of blessings will follow? The Scripture declares: “with healing in its wings; and you will go forth and frolic-like calves from the stall.” In other words, God promises us a life of health and a flourishing, abundant life.

Joseph stands as an example of this truth. Even when he was tempted with sin, he said, “How then could I do this great evil and sin against God?” (Genesis 39:9) and fled from sin. Because of his love for God and refusal to compromise, the Lord exalted him next to Pharaoh in Egypt. Indeed, he became like a well-fed calf! Likewise, David, who once tended sheep in humility and the fear of the Lord, was lifted up as the king over Israel.

All through the Bible, we see how the lives of saints were transformed when they chose to walk in the fear of God. The Lord gives us this promise through the prophet Isaiah: “No longer will your sun set, Nor will your moon wane; For you will have the LORD as an everlasting light, And the days of your mourning will be over.” (Isaiah 60:20)

Not only that, but Mary, the mother of our Lord, also declared that God’s mercy will extend to future generations of those who fear Him: “And His mercy is to generation after generation Toward those who fear Him.” (Luke 1:50)

Therefore, let us hold fast to the Lord and commit ourselves to live in the fear of God. Many Christians think that merely attending church services and worship is enough, while living carelessly in sin at other times. But the Lord desires a God-fearing life more than mere outward worship.

If we live in such reverence before Him, the Sun of Righteousness, Jesus Christ, will rise in our lives. Then our days will be filled with health, and our children and generations to come will also partake in the blessings of God.

Message of God – Bro. M. Geo Prakash

No comments: