"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1673 ஆதவன் 06.09.2025 சனி
"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." ( ஏசாயா 51 : 7 )
தன்னை அறிந்து, தனக்கு உகந்தவர்களாக வாழும் மக்களுக்கு தேவன் இன்றைய தியான வசனத்தின்மூலம் ஆறுதலான வார்த்தைகளைத் தருகின்றார். அந்த மக்களையே அவர், "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே" என்று கூறி அழைக்கின்றார். ஆம் தேவனை மெய்யாக அறிந்தவர்கள் தேவனது நீதியை அறிந்திருப்பார்கள்; காரணம் வேத வசனம் அவர்களது இருதயத்தில் பதிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அவர்கள் இந்த பொல்லாத உலகத்தில் வாழ்வதால் தங்களை அறியாமல் ஒருவித பயம் சிலவேளைகளில் அவர்களை மேற்கொண்டுவிடுகின்றது. சில வேளைகளில் வேலைசெய்யும் பணியிடங்களில் இந்த தேவ மக்களுக்கு எதிராகச் சிலர் எழும்புவதுண்டு. அவர்கள் நிந்திக்கலாம், பல்வேறு தூஷண வார்த்தைகளை இவர்களுக்கு எதிராகக் கூறலாம். காரணம், தேவனை அறிந்தவர்கள் நீதியாக வாழ்வது அவர்களோடு பணிசெய்யும் அல்லது உடன்வாழும் மக்களுக்கு ஏற்றதாக இருக்காது.
உதாரணமாக, ஒரு அரசாங்க அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு லஞ்சம் வாங்கிட அதிக வாய்ப்பு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம், ஆனால், அவர் நீதி, நேர்மை எனப்பேசி லஞ்சத்துக்கு எதிராக இருப்பாரானால் அதே துறையில் அவரோடு பணிபுரியும் மற்றவர்களுக்கு அவரது செயல்பாடுகள் லஞ்சம் வாங்கிடத் தடையாக இருக்கும். எனவே அவர்கள் அந்த உண்மையுள்ள பணியாளனை நிந்தித்து தூஷண வார்த்தைகளைப் பேசுவார்களல்லவா?
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரிபவர்களென்றால், உங்களைப்பார்த்துத் தேவன்கூறுகின்றார், "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." என்று.
இதே நிலைமையை சில குடும்பங்களில் வாழ்க்கைப்பட்டுச் செல்லும் பெண்கள் சந்திக்க நேரிடலாம். மாமியார், நாத்தனார் ஏன் கணவன்கூட சில வேளைகளில் நிந்தித்துத் தூஷண வார்த்தைகளைப் பேசலாம். ஆனால் தேவன் கூறுவதுபோல நாம் நமது நீதி நேர்மையை விட்டுவிடாமல் தேவன்மேல் விசுவாசத்தோடு வாழ்வோமானால் நமது துன்பத்தை அவர் மாற்றி மகிழ்ச்சிப்படுத்துவார்.
இன்றைய தியான வசனம் எல்லோருக்கும் பொதுவான வசனமல்ல; மாறாக தேவ நீதியை அறிந்த மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. எனவேதான் "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே" என்று கூறப்பட்டுள்ளது. அன்பானவர்களே, நாம் எல்லோரும் இந்த வசனத்தின்படி ஆசீர்வாதத்தைப் பெறவேண்டுமானால் நீதியை அறிந்தவர்களாக தேவ வார்த்தைகளை இருதயத்தில் பதித்தவர்களாக மாறவேண்டியது அவசியம். நீதியின் சூரியனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து பாவங்களை அறிக்கையிடும்போது அவரது மன்னிப்பைப் பெற்று நீதியின் மக்களாக நாம் மாற முடியும். அப்படி நாம் மாறும்போது மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳
Scripture Meditation No. 1673
AATHVAN – 06.09.2025, Saturday
"Hearken unto me, ye that know
righteousness, the people in whose heart is my law; fear ye not the reproach of
men, neither be ye afraid of their revilings."
(Isaiah 51:7, KJV)
To those who know Him
and live as His own, God gives comforting words through today’s meditation
verse. He calls them, “ye that know righteousness, the people in whose heart
is my law.” Yes, those who truly know God will know His righteousness,
because His Word is written in their hearts.
Yet, living in this
evil world, at times they may be overtaken by fear without realizing it.
Sometimes in their workplaces, people may rise up against God’s children. They
may mock, or speak many reproachful words against them. The reason is that
living righteously before God does not please those who work or live alongside
them.
For example, imagine
an employee in a government office where there are many opportunities to take
bribes. But if he stands for righteousness and honesty and refuses bribery, his
very integrity becomes a hindrance to others who wish to take bribes. Naturally,
those colleagues will begin to reproach and speak against that faithful worker.
In such difficult
circumstances, God speaks to you: “Hearken unto me, ye that know
righteousness, the people in whose heart is my law; fear ye not the reproach of
men, neither be ye afraid of their revilings.”
This same situation
can be seen in families too, especially in the lives of women. A mother-in-law,
sister-in-law, or even at times a husband, may reproach and speak hurtful
words. But as God says, if we do not forsake our righteousness and honesty, and
continue to live faithfully trusting Him, He will turn our sorrows into joy.
Today’s meditation
verse is not a general word for all, but specifically for those who know the
righteousness of God. That is why He says, “ye that know righteousness, the
people in whose heart is my law.” Dearly beloved, if we wish to inherit
this blessing, we must become those who know righteousness and have God’s Word
engraved in our hearts. When we look unto Jesus Christ, the Sun of
Righteousness, confess our sins, and receive His forgiveness, we can be
transformed into the people of righteousness. Then, we will not fear the
reproach of men, nor be shaken by their reviling.
God’s Message: Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment