"விதைகளின் உள்ளே" 🌳
"அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது." ( சங்கீதம் 44 : 3 )
மனிதர்களாகிய நாம் பலவீனமானவர்கள். நம்மால் நமது சுய முயற்சியால் பெரிய காரியங்களைச் சாதிக்கமுடியுமென்பது கூடாத காரியம். இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் பெரிய பெரிய சாதனைகளைச் செய்வதை நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தச் சாதனைகள் நிலைத்து நிற்பதுமில்லை சாதனைகள் புரிந்தவர்கள் சிறப்பாக வாழ்ந்ததுமில்லை. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாம் நமது செயல்களை தேவ சித்தத்துடன் அவருக்குப் பிரியமாகச் செய்வோமானால் தேவன் நம்மேல் அன்பாயிருந்து காரியத்தை வாய்க்கச்செய்வார்.
மக்கள் தங்கள் சுய பலத்தைச் சாராமல் தன்னையே சார்ந்து வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். இதனையே, "அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்." ( சங்கீதம் 147 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. குதிரை, வீரனுடைய கால்கள் என்பன தேவனைச் சாராது தங்களது சுயபலத்தை நம்புவதைக் குறிக்கின்றது. மேலும், "இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33 : 17 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது, நாம் தப்புவிக்கப்பட மனித பலம் அல்லது சுயபலம் வீண் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோலவே, இஸ்ரவேல் மக்கள் கானானைச் சுதந்தரித்தது அவர்களது சுயபலத்தினால் அல்ல; மாறாக, கர்த்தர் அவர்கள்மேல் அன்புகூர்ந்ததால்தான் என்று வேதம் கூறுகின்றது. "கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்." ( உபாகமம் 7 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ முயற்சியெடுத்து அவருக்கு உகந்தவர்களாக வாழ்வோமானால் அவர் நம்மேல் அன்பாயிருப்பார். அப்போது, நமது வெற்றி அவரால் ஏற்படும். "அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது" என்று கூறியுள்ளபடி நமது வாழ்க்கையும் அவரால் வெற்றியுள்ள வாழ்க்கையாக மாறும்.
மீகா தீர்க்கத்தரிசி "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" என்ற ஒரு புதிய பெயரைத் தேவனுக்குக் கொடுக்கின்றார். ஆம், "தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 ) என்கின்றார். இஸ்ரவேலர் மீது அன்புகொண்டு அவர்களை பாலைவனத்தில் மேகத்தூணிலும் அக்கினித் தூணிலும் இருந்து பாதுகாத்து வழிநடத்தியத் தேவன் நம்மேல் அன்புகூரும்போது நமக்குமுன்பாக நடந்து தடைகளை அகற்றி நம்மையும் பாதுகாப்பார்.
எனவே அன்பானவர்களே, "அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை" என்று கூறியுள்ளபடி நாமும் நமது சுயபலம் நமக்கு வெற்றியைத் தராது என்பதனை உணர்ந்து தேவனுக்கு ஏற்ற செயல்பாடுகளை செய்து அவரது அன்புக்குரியவர்களாக வாழ முயற்சியெடுப்போம். எந்தச் சிறிய செயலைச் செய்யும்போதும் நமது பலத்தை மட்டுமே நம்பாமல், தேவ பலம் நமக்கு வேண்டுமென்று வேண்டுவோம். அப்போது அவர் நமக்குத் துணையாக நின்று பாதுகாத்து வெற்றியைத் தருவார். அவரது வலதுகரமும், அவரது புயமும், அவரது முகத்தின் பிரகாசமும் நம்மை இரட்சிக்கும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1691
AATHAVAN – Wednesday, 24.09.2025
“For by their own
sword they did not possess the land, and their own arm did not save them; But
Your right hand and Your arm and the light of Your presence, For You favoured
them.” (Psalm 44:3)
As human beings, we
are weak. It is impossible for us to accomplish great things by our own
efforts. In this world, we see ordinary people achieving great feats, yet such
achievements do not last, nor do those achievers live truly fulfilled lives.
But for us who live a spiritual life, if we do our works in alignment with
God’s will, to please Him, God—out of His love for us—will make our endeavours
successful.
God desires that
people should not depend on their own strength but lean on Him. As it is
written: “He does not delight in the strength of the horse; He does not take
pleasure in the legs of a man.” (Psalm 147:10). The “horse” and the “legs of a
man” signify human strength and self-reliance apart from God. Again, it is
written: “A horse is a false hope for victory; Nor does it rescue anyone by its
great strength.” (Psalm 33:17). This tells us that human strength and
self-power are vain for deliverance.
In the same way,
Israel did not inherit Canaan by their own might, but because the Lord loved
them. Scripture says: “But because the Lord loved you and kept the oath which
He swore to your forefathers, the Lord brought you out by a mighty hand and
redeemed you from the house of slavery, from the hand of Pharaoh king of
Egypt.” (Deuteronomy 7:8).
Yes, beloved, if we
strive to live a life pleasing to God and walk in His ways, He will delight in
us. Then our victories will come from Him. Just as it is said, “For by their
own sword they did not possess the land, And their own arm did not save them;
But Your right hand and Your arm and the light of Your presence, For You favoured
them” (Psalm 44:3)—so also, our lives will be made victorious by Him.
The prophet Micah
gives God a new name: “The One Who breaks through.” He declares, “The one who
breaks through goes up before them; They break through, pass through the gate,
and go out by it. So, their king passes on before them, And the Lord at their
head.” (Micah 2:13). The God who lovingly led Israel through the wilderness by
a pillar of cloud and a pillar of fire will also, in His love for us, go before
us, remove obstacles, and protect us.
Therefore, beloved,
as it is written, “For by their own sword they did not possess the land” (Psalm
44:3), let us also recognize that our own strength cannot bring us victory.
Instead, let us strive to do works acceptable to God and live as those beloved
by Him. In every task, whether small or great, let us not depend solely on our
own strength but pray for God’s power. Then He will stand by us, protect us,
and grant us victory. His right hand, His arm, and the light of His presence
will save us.
God’s Message :- Bro. M. Geo Prakash

No comments:
Post a Comment