"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1595 ஆதவன் 20.06.2025 வெள்ளி
"என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்." ( சங்கீதம் 41 : 9 )
இன்றைய தியான வசனம் நம்பிக்கைத்துரோகம் செய்யும் மனிதர்களைப்பற்றிக் கூறுகின்றது. தாவீது சந்தித்த நம்பிக்கைத் துரோகிகளைப் போன்றவர்களை நாமும் நமது வாழ்க்கையில் கண்டிருக்கலாம். தாவீதின் சொந்த மகனான அப்சலோமே தாவீதைக்கொல்ல வகைபார்த்துத் திரிந்தான்.
நாம் மிகவும் நம்பியிருக்கும் மனிதர்கள் நமக்கு எதிராகச் செயல்படும்போது நமது மனம் அதிகமாகப் பாதிக்கப்படும். தன்னோடு உணவு உண்டு சேர்ந்து நண்பர்களாக வாழ்ந்தவர்கள் தனக்கு எதிராக எழுந்ததையே தாவீது. "என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும்" என்று கூறுகின்றார்.
சிலவேளைகளில் நாம் நோயுற்றிருக்கும்போது நம்மைப் பார்க்க வருபவர்கள் எல்லோரும் நல்ல எண்ணத்துடன் வருவதில்லை. மருத்துவ மனையில் நம்மைப் பார்க்கவந்துவிட்டு வெளியில்போய், "இவனுக்கு இந்த வியாதி வந்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும்" என்றும், "இவன் செய்த பொல்லாப்புக்குக் கடவுள் தண்டனை கொடுத்துள்ளார்" எனவும் பேசிக்கொள்ளும் மனிதர்கள் உண்டு. எனவே பலரும் நோயுற்றிருக்கும்போது பலர் தங்களைப் பார்க்கவும் விசாரிக்கவும் வருவதை விரும்புவதில்லை.
இதனையே தாவீது, "அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்." ( சங்கீதம் 41 : 5, 6 ) என்கின்றார்.
ஆனால் தொடர்ந்து தாவீது ஒரு உண்மையினைக் கூறுகின்றார். அதாவது பலரும் என்னவேண்டுமானாலும் பேசட்டும், நாம் தேவனுக்கேற்ற வாழ்வு வாழ்வோமென்றால் நமக்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகள் எதுவும் பலிக்காது என்பதனை அவர், "என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்." ( சங்கீதம் 41 : 11, 12 ) என்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, நோய்கள், துன்பங்கள் நம்மை நெருக்கலாம். உடனிருந்து நண்பர்களாகப் பழகிய சிலர் நமது நிலத்தையோ, பணத்தையோ, பொருள்களையோ ஏமாற்றி அபகரித்து நமக்குத் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் தேவனோடு நமக்குள்ள தனிப்பட்ட உறவு உண்மையாக இருக்குமானால் அவரும் நம்மேல் தனி அக்கறையுடன் இருப்பார். தேவன் நம்மேல் அன்பாக இருப்பதை அவர் நமக்குச் செய்யும் அதிசயமான விடுதலை வாழ்வால் பிறர் அறியச் செய்வார்.
உடனிருந்து நம்மோடு பழகி, பின்னர் நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை நாம் பழிவாங்காமல் தேவனிடம் நமது வேண்டுதல்களை ஏறெடுத்து ஜெபிப்போம். "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 ) ஆம் அவரது மக்களாக நாம் வாழும்போது நமக்கு ஏற்ற நியாயத்தை கர்த்தர் வழங்குவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1595
AATHAVAN – Friday, 20.06.2025
"Yea,
mine own familiar friend, in whom I trusted, which did eat of my bread, hath
lifted up his heel against me." — Psalm 41:9 (KJV)
Today’s
meditation verse speaks about betrayal by those whom we trust. Like David, we
too may encounter betrayal in our lives from people we once trusted dearly.
Even David’s own son Absalom conspired to kill him.
When
people we deeply trust act against us, it wounds our hearts more than anything
else. David laments the betrayal by someone who dined with him and lived as a
friend. He says, "mine own familiar friend, in whom I trusted, which
did eat of my bread..."
Sometimes
when we fall sick, not everyone who visits us does so with a pure heart. Some
may walk out of the hospital and speak ill of us, saying things like, “He
must have done something wrong to deserve this disease,” or “This is
God’s punishment for his sins.” That is why many sick people prefer not to
have too many visitors.
David
describes this very thing: “Mine enemies speak evil of me, When shall he die,
and his name perish? And if he come to see me, he speaketh vanity: his heart
gathereth iniquity to itself; When he goeth abroad, he telleth it.” — Psalm 41:5–6 (KJV)
Yet,
David proclaims a profound truth. He affirms that no matter what people may
say, if we live a life pleasing unto God, the words spoken against us will not
prosper. He declares: “By this I know that thou favourest me, because mine
enemy doth not triumph over me. And as for me, thou upholdest me in mine
integrity, and settest me before thy face for ever.”
— Psalm 41:11–12 (KJV)
Yes,
beloved, sickness and afflictions may draw near to us. Some who were once close
friends may have deceived us and betrayed us—be it for our land, wealth, or
possessions. But if our personal relationship with God is true, He will care
for us with divine concern. God will manifest His love for us through a
miraculous life of deliverance, letting others witness His favour upon us.
Let
us not seek revenge against those who turned against us after once walking
closely with us. Instead, let us take our petitions to the Lord in prayer. “Vengeance
belongeth unto me, I will recompense, saith the Lord. And again, The Lord shall
judge his people.” — Hebrews 10:30 (KJV)
Yes,
as God’s people, He will surely provide us justice in due time.
Gospel Message by: Bro. M.
Geo Prakash
No comments:
Post a Comment