DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, June 03, 2025

🦋 சங்கீதம் 40 : 1 / Psalm 40:1

 "விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1581                                         ஆதவன் 06.06.2025 வெள்ளி  


"கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்." ( சங்கீதம் 40 : 1 )

மனிதர்கள் நாம் நாமது மனதின் விருப்பங்கள் உடனடியாக நிறைவேறிட வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நமது ஜெபங்களுக்கு தேவன் உடனடியாகப் பதில்தந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் எல்லா நேரங்களிலும் மனிதர்கள் நமது எண்ணப்படி தேவன் உடனடியாகப் பதில் தருவதில்லை. அவர் பலவேளைகளில் நம்மிடம் நிதானத்தை எதிர்பார்க்கின்றார். காரணம், இந்த நிதானம் நமது விசுவாசத்தை வளரச்செய்யும். 

ஆபிரகாமுக்குத்   தேவன் அளித்த வாக்குறுதியை அவர்  பெற்று மகிழ்ந்திட  ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. யோசேப்பு பல்வேறு துன்பங்களை அனுபவித்து ஏறக்குறைய  13 ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின்னரே தேவன் அவனுக்குத் தரிசனத்தில் காட்டிய ராஜமேன்மையை அடைந்தார். ஆம், 17 வயதில் சகோதரர்களோடு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த அவர் (ஆதியாகமம் 37:2) பாரவோன்முன் நிற்கும்போது 30 வயது என்று கூறப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 41: 46)

தாவீது பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரே இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தப்பட்டார். இந்த அனுபவங்களையெல்லாம் பெற்றிருந்ததால்  அவர் இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்." என்று கூறுகின்றார். 

எதிலும் உடனடி உயர்வு வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் சிலர் பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு உயர்வினை அடைந்திட முயல்கின்றனர். வேலையில் பதவி உயர்வுக்காக சிலர் கையூட்டுக்கொடுத்து அதனை அடைகின்றனர். இதுபோல அரசு விருதுகள், பரிசுகள் பெறுவதற்கும் குறுக்குவழியே பலருக்கு ஏற்றதாகத் தெரிகின்றது. ஆனால் இப்படி முயலும் பலர் தங்கள் விரும்பிய உயர்வை அடைந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கின்றனர். 

தேவனுக்கேற்ற காலம் ஒன்று உண்டு. எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 ) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.  ஆம் அன்பானபவர்களே, நமக்கு நியமித்திருக்கின்ற உயர்வு நிச்சயமாக தேவனால் நமக்குக் கிடைக்கும். குறுக்குவழிகள் தற்காலிக மகிழ்ச்சியை மட்டுமே நமக்குத் தரும். 

தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வு தாமதித்துக்கொண்டே இருப்பதால் பல பெற்றோர் கவலைப்பட்டுக் கலங்குகின்றனர். அன்பானவர்களே, பிள்ளைகளை தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். நிச்சயமாக தேவன் நமது காத்திருத்தலை மகிழ்ச்சியாக்குவார்.  கர்த்தருக்காகக்  காத்திருப்பவர்களை அவர் கைவிடமாட்டார். நிச்சயமாக நாம் எதிர்பார்த்ததற்கும் மேலான வாழ்க்கையினை நமது பிள்ளைகளுக்கு அமைத்துத் தருவார்.    

சிலவேளைகளில் இப்படிக் காத்திருப்பது நமக்குத் துயரம் தருவதாகவே இருக்கும். ஆனால் வேதம் கூறுகின்றது, "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 )

கர்த்தருக்குப் பொறுமையோடு காத்திருப்போம். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                  


“Inside the Seeds” 🌳

Scripture Meditation No. 1581

AATHAVAN - Friday, 06.06.2025

“I waited patiently for the Lord; and he inclined unto me, and heard my cry.” (Psalm 40:1, KJV)

As human beings, we often desire that our heartfelt wishes be fulfilled immediately. We expect God to respond to our prayers right away and make us joyful. But not always does God answer us according to our timeline. Many times, He expects patience from us — because this waiting strengthens our faith.

God gave Abraham a promise, but he had to wait nearly twenty-five years to see it fulfilled and rejoice. Joseph endured many hardships and waited about 13 years before the royal honour God had shown him in a dream came true. Yes, when he was 17 years old, he was tending the flock with his brothers (Genesis 37:2), and by the time he stood before Pharaoh, he was 30 years old (Genesis 41:46).

David too was elevated to be the king of Israel only after enduring many struggles. Because of these personal experiences, he could declare in today’s meditation verse,

“I waited patiently for the Lord; and he inclined unto me, and heard my cry.” (Psalm 40:1, KJV)

Because of the urge for instant promotion, some resort to shortcuts. For example, a few seek job promotions through bribery. Likewise, shortcuts seem attractive to many in the pursuit of government awards and prizes. But even though they may achieve their desired status, they often end up being joyless in life.

There is a God-appointed time for everything. That’s why the Apostle Peter exhorts us:

“Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time.” (1 Peter 5:6, KJV)

Yes, beloved, the promotion appointed for us will surely come — and only from God. Shortcuts provide only temporary happiness.

Many parents become troubled and distressed when their children's marriages are delayed. Dear ones, let us surrender our children to God in prayer. Surely, He will turn our waiting into joy. The Lord will not forsake those who wait for Him. Indeed, He will bless our children with a life far better than what we ever imagined.

Sometimes, waiting may bring sorrow. But the Bible says:

“Hope deferred maketh the heart sick: but when the desire cometh, it is a tree of life.” (Proverbs 13:12, KJV)

Let us wait patiently for the Lord.

“But they that wait upon the Lord shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.” (Isaiah 40:31, KJV)

Message by: Bro. M. Geo Prakash

                   

No comments: