"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1605 ஆதவன் 30.06.2025 திங்கள்
"ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்." ( ஆதியாகமம் 18 : 12 )
"வயது என்பது வெறும் எண் மட்டுமே" (Age is only a number) என்பார்கள். இதன் பொருள் சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையல்ல என்பதுதான். நாம் பெரும்பாலும் நமது வயதைக் கருத்தில்கொண்டு சில செயல்களைச் செய்யத் தயங்குகின்றோம். ஆனால் பல உலக மனிதர்கள் தங்களது 70, 80 வயதுகளிலும் பல்வேறு சாதனைகளைப் புரிகின்றனர்.
உலக மனிதர்கள் கூறுவதுபோல கூறிக்கொண்டு எல்லாச் செயல்களையும் நம்மால் வயதான காலத்தில் செய்திட முடியாது. மனிதனது சக்திக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் அப்படி நமது சக்தியால் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது என்பது தேவனது கிருபை இருந்தால் மட்டுமே முடியும். இதற்கு உதாரணம்தான் ஆபிரகாம், சாராள் தம்பதியினர். நூறு வயது ஆபிரகாமுக்கு வயது முதிர்ந்த கிழவியான சாராள் மூலம் குழந்தை பிறப்பது என்பது மனித முயற்சியால் கூடாத காரியம். ஆனால், "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்." ( ஆதியாகமம் 18 : 14 ) தேவன். அதுபோல ஈசாக்கை மகனாகக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
அன்பானவர்களே, இன்று நாம் நமது வயதை எண்ணி சாராள் கூறியதைபோலக் கூறிக்கொண்டிருக்கலாம். இனி இந்த உலகத்தில் எனக்கு எதுவும் நல்லதாக நடக்க வாய்ப்பில்லை; எனது வாழ்க்கை இப்படியேதான் முடியப்போகின்றது" என்று மனதினில் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?" என்கின்றார் தேவன்.
காலேப் தனது எண்பதாவது வயதில் தனக்கு 40 வது வயதில் இருந்த அதே பெலன் இருக்கின்றது என்று கூறுவதை நாம் வேதாகமத்தில் வாசிக்கலாம். அவர் கூறுகின்றார், "....கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது."( யோசுவா 14 : 10, 11 )
இன்று, "நல்ல ஒரு வீடு இல்லை, பிள்ளைகளுக்கு நல்ல தொழிலில்லை, பெண் பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்க வழியில்லை.....எனக்கோ அறுபத்தைந்து வயது ஆகிவிட்டது." என்பதுபோன்ற புலம்பல் நமக்குள் இருக்கலாம். ஆனால் "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?" என்கின்றார் தேவன். எனவே, நாம் எதிர்மறையான எண்ணத்தைக் கைவிட்டு எதனையும் செய்யவல்ல தேவனது கிருபையினைச் சார்ந்து கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
இன்று பலரும் வயதான காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும் எனக் கருதி பணத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்து வாழ்கின்றனர். ஆனால் அது மட்டும் போதாது. வயதான காலத்தில் நம்மைத் தேவ கிருபை தங்கிடவேண்டும். இன்றைய தியான வசனத்தில், சாராள், "நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?" எனக் கேள்வி எழுப்புகின்றாள். ஆனால், தேவனது கிருபை இருக்குமானால் முதிர்ந்த வயதிலும் இன்பம் உண்டாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதை நாம் அறிகின்றோம்.
எனவே அன்பானவர்களே, சங்கீத ஆசிரியரைபோல முதிர் வயது தேவ கிருபைக்காக நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். "முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்." ( சங்கீதம் 71 : 9 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர். இதுவே நாம் செய்யவேண்டியது. இன்று நாம் வாலிபர்களாக அல்லது உடலில் நல்ல வலிமையுள்ள நடுத்தர வயதினராக இருக்கலாம். இதே பெலன் நமக்கு என்றைக்கும் இருக்காது என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
முதிர் வயது துணைக்காக பணத்தைச் சேமிப்பது முக்கியமென்று கருதும் நாம் தேவ கிருபைக்காக ஜெபிக்கவேண்டாமா? அன்றாட ஜெபத்தில் இந்தக் கருதுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் நம்மை முதிர்வயதிலும் காத்து நடத்துவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1605
AATHAVAN – Monday, 30.06.2025
“Therefore,
Sarah laughed within herself, saying, After I am waxed old shall I have
pleasure, my lord being old also?” Genesis 18:12
People
often say, “Age is only a number.” What they mean is that age is not a
barrier to achievement. Yet, many times we hesitate to act simply because of
our age. However, we see people around the world accomplishing great things
even in their 70s and 80s.
But
unlike worldly people who rely solely on strength and ability, we must
understand that man’s strength has its limits. Some things cannot be achieved
merely by human effort. It is only through God's grace that the impossible
becomes possible. A clear example of this is the couple Abraham and Sarah. For
Abraham, who was 100 years old, to have a child through Sarah, a woman well
past childbearing age, was humanly impossible.
But
God said, “Is anything too hard for the Lord? At the time appointed I will
return unto thee, according to the time of life, and Sarah shall have a son.” (Genesis
18:14, KJV) And indeed, He blessed them with Isaac.
Dearly
beloved, you too may be like Sarah today—counting your age and wondering, “What
good can still happen in my life? Isn’t everything over for me?” But God
asks, “Is anything too hard for the Lord?”
In
the Bible, we read of Caleb, who declared that even at the age of eighty-five,
he had the same strength he had at forty: “...the Lord hath kept me alive...and
now, lo, I am this day fourscore and five years old. As yet I am as strong this
day as I was in the day that Moses sent me...for war, both to go out, and to
come in.” (Joshua 14:10–11, KJV)
Today,
we may be grumbling: “I have no proper house, no good job for my children, no
way to marry off my daughter... and I’m already sixty-five years old.” But
again, God asks: “Is anything too hard for the Lord?”
Therefore,
we must abandon negative thinking and depend wholly on the grace of our
all-powerful God.
Nowadays,
many people invest money in different ways, hoping it will support them in old
age. But that alone is not enough. What we truly need in our later years is the
grace of God. In today’s meditation verse, Sarah wonders: “After I am
waxed old... shall I have pleasure?” Yet we know that with God's grace,
even the aged can experience joy. This was confirmed in her life.
So,
beloved, like the Psalmist, we must earnestly pray for God’s grace in our old
age: “Cast me not off in the time of old age; forsake me not when my strength
faileth.” (Psalm 71:9, KJV)
This
is what we should do. You may now be a youth or in your middle age, strong and
healthy—but remember, this strength will not last forever.
If
we consider it important to save money for our old age, how much more should we
pray for divine grace to carry us through it? Let us include this in our daily
prayers. The Lord will sustain and lead us, even in our old age.
God's Message: Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment