"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1576 ஆதவன் 01.06.2025 ஞாயிறு
"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8: 44)
வேதாகமத் தியானம் எண் - 1577 ஆதவன் 02.06.2025 திங்கள்
வேதாகமத் தியானம் எண் - 1578 ஆதவன் 03.06.2025 செவ்வாய்
வேதாகமத் தியானம் எண் - 1579 ஆதவன் 04.06.2025 புதன்
வேதாகமத் தியானம் எண் - 1580 ஆதவன் 05.06.2025 வியாழன்
வேதாகமத் தியானம் எண் - 1581 ஆதவன் 06.06.2025 வெள்ளி
வேதாகமத் தியானம் எண் - 1582 ஆதவன் 07.06.2025 சனி
"பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்." ( பிரசங்கி 8 : 12 )
இன்று சமூக வலைத்தளங்களை நாம் பார்ப்போமானால் அதிகமான பதிவுகள் உடல்நலம் குறித்தும் அதனை எப்படி மேம்படுத்தலாம், என்னென்ன உணவுகள் உடலுக்கு ஏற்றவை, எவைகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்துவனவாக உள்ளன. இவைகளைப் பதிவிடுபவர்கள் இவைகளைக் கடைபிடிக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் எல்லோருக்கும் உடல்நலத்துடன் நீண்டநாள் வாழவேண்டுமெனும் ஆர்வம் இருக்கின்றது என்பது மட்டும் புலனாகின்றது. எனவே, எல்லோரும் மருத்துவர் ஆகிவிட்டனர்.
மக்கள் இந்த உலகத்தில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்பவர்களை பொதுவாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணுவதுண்டு. ஆனால் மனிதர்கள் நீண்டநாள் உயிர்வாழ்வதால் அவர்கள் நல்லவர்கள் என்று பொருளல்ல. அனைத்து பாவச் செயல்களையும் செய்யும் ஒருவர் நூறாண்டுவரை வாழலாம், அதுபோல எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத ஒருவர் அற்ப வயதில் இறந்துபோகலாம். மனிதர்களது வாழ்நாளுக்கும் அவர்களது செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை.
உடல்நலம் குறித்து வெளியாகும் பதிவுகளை எல்லோரும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். ஆனால், உடல்நலத்தைவிட மேலான ஆத்தும காரியங்களைக்குறித்த காரியங்களுக்குப் பலரும் முன்னுரிமை கொடுப்பதில்லை. இந்த உலகத்தில் பொல்லாப்பான காரியங்களில் ஈடுபட்டு ஒருவர் நூறு வயதுவரை வாழ்ந்தாலும் அவரைவிட தேவனுக்கு அஞ்சி வாழும் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று இன்றைய தியானம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
தேவனுக்கு அஞ்சி வாழ்வது என்பது பயந்து பயந்து வாழ்வதல்ல, மாறாக தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அவற்றுக்கு விலகி நீதியுள்ள வாழ்க்கை வாழ்வது. "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13) என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வாழ்வது குறித்து மேலும் நாம் வேதத்தில், "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." (நீதிமொழிகள் 9:23) என்றும் "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதனால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்". (நீதிமொழிகள் 14:27) என்றும் வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, உடல்நலத்துக்கு ஒரு சில உணவுகளைத் தவிர்த்து ஒருசில உணவுகளைச் சேர்த்துக்கொள்வதுபோல ஆத்தும நலத்துக்கு ஒரு சில காரியங்களைத் தவிர்த்து ஒருசில காரியங்களை வாழ்வில் கடைபிடிக்கவேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலான மக்கள் உடல்நலம் குறித்தச் செய்திகளைக் கேட்டுக் கடைபிடிப்பதுபோல ஆவிக்குரிய செய்திகளைக் கேட்பதிலும் வாசிப்பதிலும் காட்டும் ஆர்வத்தை அவற்றைக் கடைப்பிடிப்பதில் காண்பிப்பதில்லை.
நீண்டநாள் வாழ்வதல்ல முக்கியம், மாறாக தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது கவனிக்கத்தக்கது.
"ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்." ( 1 பேதுரு 3 : 10, 11 )
வேதாகமத் தியானம் எண் - 1583 ஆதவன் 08.06.2025 ஞாயிறு
"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29 : 13 )
தேவனைத் தேடுவதற்கும் அவரை ஆராதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அவரை அறியாமலேயே ஆராதிக்கமுடியும். ஆனால் அதனால் என்ன பயன்? இன்று கடவுளை ஆராதிக்கும் அனைவரும் அவரை வாழ்வில் அறிந்தவர்களல்ல. இதனையே இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம்கூறினார், "நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்" (யோவான் 4:22) என்று.
தேவனை அறியவேண்டுமானால் முதலில் நாம் அவரை உண்மையான மனதுடன் தேடுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 )என்று இயேசு கூறவில்லையா? இன்று தேவனைத் தேடுபவர்களைவிட தேவனிடமிருந்து ஏதாவது நன்மையைப் பெறவேண்டுமெனும் ஆர்வத்தில் அவரை வழிபடுபவர்களே அதிகம்பேர். இத்தகைய மனிதர்கள் தேவனை வாழ்வில் ஒருபோதும் அறியமுடியாது.
இன்று நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித ஊழியர்களும் தங்களைத் தேடிவரும் மக்களுக்கு உலகத் தேவையை அடைந்திட ஜெபிக்கவே கற்றுக்கொடுக்கின்றனர். பல்வேறு தியானக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றபோதும் தேவனை அறிய அவை மெய்யான வழியைக் காட்டுவதில்லை. ஆம் அன்பானவர்களே, இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார், "குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?" (லூக்கா 6:39) ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரும் குருடர்களாக இருப்பதால் மக்களைப் பள்ளத்தில் தள்ளுகின்றனர்.
தேவனை அறியவேண்டுமென்றால் முதலில் அவரை வாழ்வில் அறியவேண்டும் எனும் ஆர்வம் வேண்டும். பல்வேறு தெய்வங்களை உலக மக்கள் வழிபடுகின்றனரே, இவற்றில் எது உண்மையான தேவனாக இருக்கமுடியும்? என்றாவது எண்ணிப்பார்க்கவேண்டும். ஆனால் இப்படி எண்ணிப்பார்க்கும் மனநிலையில் மக்கள் இல்லை. எந்த தெய்வத்திடம் வேண்டினால் நமது தேவைகள் சந்திக்கப்படும் என்றே பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர். எனவேதான் பலரும் தேவனை வாழ்வில் அறியமுடியாமல் இருக்கின்றனர்.
தேவனை நாம் அறிய முடியாமல் தடையாக இருப்பது நமது பாவங்களே என்று வேதம் நமக்குக் கூறுகின்றது. "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." (ஏசாயா 59:2)
எனவே, நாம் தேவனை அறியவேண்டுமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எல்லா மதங்களும் பாவங்களைப்பற்றியும் பாவ மன்னிப்பைப்பற்றியும் கூறினாலும் அவை கூறும் வழிமுறைகள் வெவ்வேறு. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நதியில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் போகும் என்று சிலர் எண்ணிக்கொண்டு அவ்வாறு நதிநீரில் குளித்து எழுகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் அவர்கள் பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் காண்பதில்லை.
ஆனால் வேதம் கூறுகின்றது, "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை." (எபிரெயர் 9:22) என்று. ஆம் அன்பானவர்களே, நமக்காக தனது சுய இரத்தத்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சிப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டும்போது நாம் தேவனை அறியமுடியும்; அவரது பிள்ளைகளாக மாறி அவரது மகத்துவத்தை வாழ்வில் உணரமுடியும். காரணம், "குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்". ( 1 யோவான் 1 : 7 )
மேலும், "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." ( எபிரெயர் 10 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. முழு இருதயத்தோடு தேவனை அறியும் ஆர்வத்துடன் நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டும்போது அவரைக் கண்டுகொள்ளலாம். அவரிடமிருந்து எதனையாவது பெறவேண்டுமென்று அவரைத் தேடாமல் அவரே நமக்கு வேண்டுமென்று நாடுவோம். ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1584 ஆதவன் 09.06.2025 திங்கள்
"ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுபோதும்." ( மத்தேயு 6 : 34 )
இன்றைய தியான வசனம் பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தலாம். அது எப்படி நாளைக்காக நாம் கவலைப்படாமல் இருக்க முடியும்? நமது குழந்தைகளின் படிப்புச் செலவுகள், திருமணம், எதிர்பாராச் செலவினங்கள், நமக்கு வயதாகும்போது நமக்குப் பாதுகாப்பு இவைகளையெல்லாம் பற்றி நாம் முன்னரேத் தீர்மானித்து இந்தச் செலவுகளுக்காக ஆயத்தமாய் இருக்கவேண்டாமா? என்றெல்லாம் நாம் எண்ணலாம்.
ஆனால் இந்த வசனம் மூலம் இயேசு வலியுறுத்த விரும்புவது தேவன்மேல் நாம் உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும் என்பதைத்தான். இந்த உலகத்தில் தேவனது கிருபை இல்லாமல் நாம் எதனையும் சாதிக்கமுடியாது. எவ்வளவுதான் சொத்து சுகங்களை நாம் சேர்த்தாலும் அவை அனைத்தையும் ஒரே நொடியில் இழந்துவிடக்கூடிய நிலையும் நமக்கு ஏற்படலாம். யோபுவின் வாழ்க்கையினை நினைத்துப்பாருங்கள். எனவே தேவனது கிருபையினைச் சார்ந்து நாம் வாழவேண்டும் என்று இயேசு வலியுறுத்துகின்றார்.
இதனை நாம் பாலைவனத்தில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா அளித்ததைக் கொண்டு சிறு விளக்கம் பெறலாம். இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவை தேவன் பொழிந்தபோது அதில் எதனையும் மறுநாள்வரை வைக்கவேண்டாம் என்று கட்டளையிட்டார். அதாவது அன்றன்றுள்ள அளவுக்கு மன்னாவைச் சேகரித்தால் போதும் என்று கூறியிருந்தார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் மன்னாவைக் கண்டபோது தேவனது கட்டளையைமீறி அதனை அதிகமாகச் சேர்க்க முயன்றார்கள்.
தேவன் அன்றன்று அவர்களுக்குத் தேவையான மன்னாவைத் தவறாமல் அளித்தபோதும் அவர்கள் மறுநாளைக்கு என்று சேர்க்கக் காரணம் அவர்களது விசுவாசக் குறைவு. ஒருவேளை நாளைக்கு மன்னா பொழியப்படாவிட்டால் என்னசெய்வது என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே கட்டளையைமீறி மறுநாளுக்காகச் சேர்த்து வைத்தார்கள். ஆனால் அதனை அவர்களால் மறுநாளில் பயன்படுத்தமுடியாத நிலைதான் ஏற்பட்டது.
"மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்." (யாத்திராகமம் 16 : 19, 20) என்று வாசிக்கின்றோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 )
இந்த உலகம் ஒருவரின் பல்வேறு தகுதிகளைக் கருத்தில்கொண்டு அவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கின்றது. இந்த உலகத்தில் பணம், அதிகாரம், புகழ், அழகு, திறமை, கல்வித்தகுதி என பல்வேறு காரணிகள் மனிதர்களை தகுதியுள்ளவர்களாக்குகின்றன.
நாம் ஒரு பதவிக்கு விண்ணப்பிக்கும்போதும் நமது கல்வித்தகுதியையும், இதரத் தகுதிகளையும் (other talents), முன் அனுபவம் (past experiences) இவைகளைக் கருத்தில்கொண்டுதான் நமக்கு ஒரு வேலைவாய்ப்பைத் தருகின்றனர். ஆனால் தேவன் இப்படிப்பார்த்து மனிதர்களைத் தனது பணிக்காகத் தெரிவுசெய்வதில்லை. உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தனது பணிக்காகத் தெரிவுசெய்கின்றார். இப்படி அற்பமானவர்களைத் தெரிவுசெய்து அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கிப் பயன்படுத்துகின்றார்.
யோசேப்பு, சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டவன். அரசனான தாவீது தகப்பனாலும் சகோதரர்களால் ஒரு பொருட்டாக எண்ணப்படாமல், ஆடுமேய்த்துக்கொண்டுத் திரிந்தவன், இலட்சக்கணக்கான இஸ்ரவேலரை பார்வோனது கையிலிருந்து விடுதலையாக்கி கானானை நோக்கி வழிநடத்திய மோசே ஒரு திக்குவாயும் மந்த நாவும் உள்ள மனிதன்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும் படிப்பறிவில்லாத மீனவர்கள். ஆம், தேவன் ஒரு மனிதனை அவனது தகுதிகளின் அடிப்படையில் பார்க்காமல் அவர்களது இருதயத்தைப்பார்த்துத் தெரிவுசெய்கின்றார். இதனை அறிந்திருந்ததால்தான் அன்னை மரியாள், "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 51, 52 ) என்று பாடுகின்றார்.
அப்போஸ்தலரான பவுலும், "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 ) என்று கூறுகின்றார். அப்போஸ்தலரான பவுல் அதிகம் படித்தவர்தான். ஆனால் அந்தப் படிப்பைப் பார்த்து தேவன் அவரைத் தெரிவு செய்யவில்லை. எனவேதான் துணிவுடன் அவர் இன்றைய தியான வசனத்தை எழுதியுள்ளார்.
ஆம் அன்பானவர்களே, இந்த உலகம் நம்மைத் தகுதியற்றவர்கள், இயலாதவர்கள், வெறுமையானவர்கள், அற்பர்கள், என்று கருதலாம். ஆனால் தேவன் நம்மை மேலானவர்களாகக் கருதுகின்றார். எனவேதான் புகழும், அதிகாரமும், படிப்பும், பணமும், அழகும் உள்ளவர்கள் அறியாத தேவனை நமக்கு அவர் வெளிப்படுத்தியுள்ளார். தேவனை அறியாமல் எல்லா உலகச் செல்வங்களை அனுபவிப்பதிலும் அவை எதுவும் இல்லாவிட்டாலும் தேவனையும் அவரது மேலான உடனிருப்பு அனுபவங்களையும் வாழ்வில் அனுபவிப்பது மேலானது.
இப்படித் தேவன் ஏன் இல்லாதவர்களையும் அற்பர்களையும் தேர்வுசெய்கின்றார் என்பதை இன்றைய தியான வசனத்தின் முதல் இரண்டு வார்த்தைகள், "உள்ளவைகளை அவமாக்கும்படி" என்று கூறுகின்றன. அதாவது, "நீ எல்லாம் உடையவன் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றாயே, எனது பார்வையில் நீ அவமானவன், ஒன்றும் இல்லாதவன்" என்பதனை அவர்கள் உணரும்படி இப்படி ஒன்றுமில்லாதவர்களைத் தேவன் தனக்காகத் தெரிவுசெய்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, இன்று மற்றவர்களைப்போல் நம்மிடம் உலகம் பெருமையாகக் கருதும் எதுவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் நாம் தேவனை அறிந்துள்ளோம். தேவன் நமக்குத் தன்னை வெளிப்படுத்தியுள்ள கிருபைக்காக அவருக்கு நன்றி கூறித் தொடர்ந்து அவருக்கேற்ற வாழ்வு வாழ்வோம். அவரே நம்மை இறுதிவரை தொடர்ந்து நடத்துவார். "இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." ( லுூக்கா 10 : 21 )
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
எவ்வளவுதான் நாம் கிறிஸ்துவுக்குள் பலம்கொண்டாலும் சிலவேளைகளில் நமது பிரச்சனைகளை துன்பங்களை நாம் துன்மார்க்கருடைய செழிப்புடன் ஒப்பிட்டுப்பார்த்துவிடும்போது மனம் சோர்வடைந்துவிடுகின்றோம். துன்மார்க்கன் செழிப்பான் என்றுதான் வேதம் கூறுகின்றது (சங்கீதம் 73). ஆனால் இந்த உலகினில் மனிதர்கள் அந்தச் செழிப்பைத் தேவ ஆசீர்வாதம் என எண்ணிக்கொள்கின்றனர். துன்மார்க்கர்களது செழிப்பு புல்லைப்போன்றது என்பதனை யாரும் உணர்வதில்லை. புல் எப்படி வெகு சீக்கிரத்தில் வெயிலால் வறண்டு போகிறதோ அதுபோல துன்மார்க்கர்கள் வறண்டுபோவார்கள்.
ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமக்குள் ஏற்படும் சோர்வுகளின்போது நாம் இவைகளைச் சிந்திப்பதில்லை. "நான் இவ்வளவு நேர்மையாக, உண்மையாக வாழ்ந்து என்ன பயன்?" எனும் எண்ணம் நமக்குள் எழுந்துவிடுகின்றது.
இதனை மேற்கொள்ள தாவீது இன்றைய தியானத்தில் வழி காட்டுகின்றார். அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் தேவன் நமது வாழ்வில் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருப்பார். ஒவ்வொருவரையும் தேவன் இப்படியே வித்தியாசமாக நடத்துகின்றார். நாம் விசுவாசத்தில் வளர்வதற்காகவே தேவன் இப்படிச் சில அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நம்மை வழிநடத்துகின்றார்.
நமது வாழ்வில் சோதனைகள் ஏற்பட்டு மனம் மடியும்போது தேவன் இதுவரை நமக்குச் செய்த அதிசயங்களை நாம் தியானிப்போமானால் நமது சோர்வு மறையும். அது தேவன்மேல் நமக்குள்ள விசுவாசம் குறைந்திடாமல் நம்மைப் பாதுகாக்கும். இதனையே தாவீது இங்குக் கூறுகின்றார், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." என்று.
தாவீதுக்கு ஏற்பட்டச் சோதனைகள் அதிகம். சகோதரர்கள் அவனிடம் அன்பாய் இருக்கவில்லை. பிற்காலத்தில் சவுல், சொந்த மகன் அப்சலோம் என அவர்து உயிரை வாங்கத் துடித்தவர்கள் பலர். ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் தாவீது தனது பழைய வாழ்வை எண்ணிப்பார்த்திருப்பார். ஆடு மேய்த்துக்கொண்டு வனாந்தரத்தில் அலைந்த நாட்கள்....., தேவன் அவரோடு பேசி பல சத்தியங்களை வெளிப்படுத்திக்கொடுத்த நாட்கள், தேவனைப் புகழ்ந்து பாடி துதிக்கத் தேவன் அவருக்கு உள்ளத்தில் கொடுத்த பல்வேறு பாடல்கள்......என தேவன் கொடுத்த பல்வேறு நன்மைகளை அவர் எண்ணிப்பார்த்திருப்பார். எனவேதான் இன்றைய தியான வசனத்தில், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்" என்று நினைவுகூர்கின்றார்.
அன்பானவர்களே, தாவீதின் இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்றுவோம். நமது பழைய வாழ்வை எண்ணிப்பார்ப்போம். அதிலிருந்து தேவன் நம்மை எப்படியெல்லாம் மாற்றி வழிநடத்தி வந்துள்ளார் என்பதனைச் சிந்தித்துப்பார்ப்போம். அவற்றுக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நாம் எப்படி இருந்தோம், இப்போது எந்த விதத்திலெல்லாம் தேவன் நம்மை ஆசீர்வதித்துள்ளார் என எண்ணிப்பார்த்துத் தேவனைத் துதிப்போம்.
ஆம், நமது ஆவி நமக்குள் குழப்பமடையும்போது சோர்ந்துபோகாமல் நமது பழைய நாட்களை நினைப்போம், தேவனது செய்கைகளையெல்லாம் தியானிப்போம், அவர் கொடுத்துள்ள மேலான ஆசீர்வாதங்களுக்காக நன்றி சொல்வோம். எந்தத் தகுதியுமில்லாத நம்மைத் தகுதிப்படுத்திய தேவனைநோக்கி "கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?" ( 2 சாமுவேல் 7 : 18 ) என்று தாவீதைப்போல கூறுவோம்.
"நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்." ( 2 இராஜாக்கள் 3 : 17, 18 )
நாம் இக்காட்டான வேளைகளில் நமது விடுதலைக்காக ஜெபிக்கும்போது சிலவேளைகளில் சூழ்நிலைகள் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதுபோலத் தோன்றலாம். இந்த இக்கட்டான வேளையில் எப்படி நம்மால் வெற்றிபெறமுடியும் என்று நாம் எண்ணலாம். நமது விசுவாசமே ஆட்டம்காணலாம். ஆனால், ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த ஆண்ட சராசரங்களைப் படைத்தவர் தேவன்; அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" ( எரேமியா 32 : 27 ) என்று நமது விசுவாசத்துக்குத் திடன் தருகின்றார் கர்த்தர்.
இருபுறமும் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு. எதிரே செங்கடல். பின்னால் கொல்வதற்கு நெருங்கும் பார்வோனின் படைகள்; தப்பிக்க வழியே இல்லை. ஆனால் தேவன் அதிசயம் செய்து செங்கடலை பிளந்து இஸ்ரவேலரைக் கால் நனையாமல் கடலைக் கடக்கப்பண்ணினார்.
ஆம் அன்பானவர்களே, இதுபோலவே யூதாவுக்கு எதிராக போருக்கு வரும் மோவாபியரை எதிராக இஸ்ரவேலின் ராஜா யோராம், யூதாவின் ராஜாவாகிய யோசபாத், மற்றும் ஏதோமின் ராஜா ஆகிய மூவரும் வனாந்தரம் வழியாக போருக்குப் புறப்பட்டனர். ஏழு நாட்கள் கடந்தபின்னர் வழியில் தண்ணீரில்லாததால் படைவீரர்களும், குதிரைகளும் தவித்தனர். அப்போது அவர்கள் கர்த்தரிடம் விசாரிக்க எலிசாவை அணுகினர். அப்போது கர்த்தர் எலிசாவிடம் இன்றைய தியான வசனத்தைக் கூறினார்.
அன்பானவர்களே, இந்தச் சூழ்நிலையினை எண்ணிப்பாருங்கள். இடமோ வனாந்தரம். ஆனால் கர்த்தர் சொல்கின்றார், "நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று". அதுபோலவே கர்த்தர் செய்து தனது மக்களுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
இதுபோலவே இன்று நாம் பல்வேறு காரியங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கலாம். அந்த ஜெபத்துக்கான பதில் உலக மனிதர்கள் எண்ணுவதுபோன்ற வழிகளிலல்ல, மாறாக காற்றும் மழையும் இல்லாமல் அதிசயமாக தேவன் பள்ளத்தாக்கினை தண்ணீரால் நிரப்பியதுபோன்ற அதிசய வழியில் நமது வாழ்வில் நிறைவேறும். ஆம் அன்பானவர்களே, சூழ்நிலைகளைப் பார்க்காமல் சூழ்நிலைகளை மாற்றவல்ல கர்த்தரை நோக்கிப் பார்ப்போம்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த பல்வேறு அற்புதங்களும் இப்படிப்பட்டவைதான். அவை நாம் எண்ணிப்பார்க்க முடியாத இயற்கைக்கு அப்பாற்பட்டவை.. மரித்து நான்கு நாட்களுக்குப்பின் எழுப்பப்பட்ட லாசர், பாடையில் கிடத்தப்பட்டு அடக்கத்துக்குக் கொண்டுபோகப்பட்ட வாலிபன், மரித்துப்போன சிறுமி, 38 ஆண்டுகள் பெதஸ்தா குளக்கரையில் படுத்திருந்த மனிதன், 18 ஆண்டுகள் நிமிரக்கூடாத கூனி, 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பெரும்பாடு அனுபவித்தப் பெண்........ இப்படிப் பலருக்கு இயற்கைக்கு மாறான வழியில் நடந்த அதிசயங்கள் வேதாகமத்தில் நமது விசுவாச வளர்ச்சிக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, சூழ்நிலைகளை நோக்காமல் கர்த்தரையே விசுவாசத்தோடு நோக்கி ஜெபிப்போம். காற்றையும் காணமல், மழையையும் காணாமல் நமது பள்ளத்தாக்கு வாழ்க்கை தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அது நமக்கு மட்டுமல்ல, அன்று கால்நடைகளுக்கும் மற்றும் அங்கிருந்த பலருக்கும் உதவியதுபோல நம்மைச் சுற்றிலும் இருக்கும் பலருக்கும்கூட ஆசீர்வாதமாக இருக்கும்.
"என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று." ( எஸ்றா 9 : 6 )
"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )
இந்த உலகம் நம்மை எத்தனை அற்பமானவர்களாகக் கருதினாலும் கர்த்தர் அப்படி நம்மைப் பார்ப்பதில்லை. அவர் நம்மில் எவரையும் பயன்படுத்த முடியும். அதுபோலவே நாம் உடல்வலு, பணம், பதவி இவற்றில் எவ்வளவு பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தர் நம்மைப் பலவான்களாக மாற்றிட முடியும். அதனையே நாம் கிதியோனது வாழ்வின்மூலம் அறிய முடிகின்றது.
மீதியானியர் இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீதியானியர் அவ்வப்போது இஸ்ரவேலரை நெருக்கி அவர்களது உடைமைகளையும் அவர்களது வயலின் விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். அப்போது இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடையமாட்டானா என்று ஏங்கித் தவித்தனர். அப்போது ஒருநாள் கிதியோன் எனும் வாலிபன் தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான்.
மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்து அதனைப் போரடித்தான். ஏனெனில் மீதியானியர் எப்போது வருவார்கள் என்று தெரியாது. அப்போதுதான் கர்த்தருடைய தூதன் அவன்முன் வந்து நின்று, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ஆனால் கிதியோன் தனது அற்பமான குடும்ப நிலைமையை எடுத்துக் கூறுகின்றான். "ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 15 )
எனவேதான் கர்த்தர் கிதியோனைப்பார்த்து, "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) ஆம் அன்பானவர்களே, "என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று அவர் பவுல் அப்போஸ்தலரைத் திடப்படுத்தவில்லையா? கர்த்தர் நம்மோடு இருக்கும்போது பிரச்சனைகளை மேற்கொள்ளவும் சமாளிக்கவும் நமக்கு இருக்கும் கொஞ்சமான மனித பலம் போதும்.
ஆனாலும் கிதியோன் தனது அற்ப நிலைமையை எண்ணி தேவனிடம் அதனை அறிக்கையிட்டதைப்போல நாமும் கர்த்தரிடம் அறிக்கையிடலாம். "ஆண்டவரே, நான் பலவீனமானவன் அல்லவா? எனது படிப்பு, குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பேன்?" என அவரிடம் கூறலாம். ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியது போலவே நம்மோடும் கூறுகின்றார், "வேறு எதனையும் பார்க்காதே, நான் உன்னோடு இருக்கின்றேன்".
தனது பலவீனத்தை ஒத்துக்கொண்டு அதனை தேவனிடம் அறிக்கையிட்ட கிதியோனிடம் தேவன் "நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )
ஆம் அன்பானவர்களே, நமது பலவீனங்களைப் பார்க்கவேண்டாம்; சூழ்நிலைகளைப் பார்க்கவேண்டாம்; பிரச்சனைகளின் தன்மையினைப் பார்த்துப் பயப்படவேண்டாம். கர்த்தர் நம்மோடு இருப்பாரானால் நாம் பலசாலிகள்தான்; பராக்கிரமசாலிகள்தான். எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். அன்பானவர்களே, சோர்ந்துபோகவேண்டாம். ஏனெனில் கர்த்தர் சொல்கின்றார், " நான் உன்னோடேகூட இருப்பேன்"
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
"சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 4 )
மனிதர்களுக்கு பிரியமுண்டாக பேசுவது என்பது, எதைப் பேசினால் மக்கள் இரசிப்பார்கள், எது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்று தங்களுக்குள் முடிவெடுத்து மக்களுக்கு ஏற்றபடி பேசுவது. இப்படிப் பேசுவதால் முதலாவது, அதிக மக்கள் அந்தப் பிரசங்கியின் பிரசங்கத்தைக் கேட்க வருவார்கள். இரண்டாவது, அப்படிப் பேசுவதால் அதிக அளவில் .காணிக்கைக் கிடைக்கும். இதற்கு மாறாகத் தேவனைப் பிரியப்படுத்தப் போதிக்கும்போது மேற்படி இரண்டும் கிடைக்காது.
மனிதர்களைப் பிரியப்படுத்தப் பேசுதல் என்பது, மனம் திரும்பாத ஒரு மனிதனிடம் இரட்சிப்புக்கேற்ற வார்த்தைகளைப் பேசி சத்தியத்தை உணர்த்தாமல் "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.." என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவது, அல்லது அத்தகைய மனிதர்கள் அளிக்கும் காணிக்கைகளை மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, "கர்த்தர் உங்களை பத்து மடங்காக ஆசீர்வதிப்பார்" என்பது.
மட்டுமல்ல, மக்களைக் கவரும்படியான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவது. உதாரணமாக, குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை ஆசீர்வாத திட்டத்தில் இணைத்து நாங்கள் உங்களுக்காகத் தினமும் ஜெபிப்போம் என்பது போன்ற வேதத்துக்கு முரணான செயல்கள். இத்தகைய முறைமைகள் மனிதர்கள் கடைபிடிக்க எளிமையானவை. எனவே இவற்றுக்கு மக்களது ஆதரவு அதிகம் கிடைக்கும்.
தேவனுக்குப் பிரியமானவைகளைப் பேசுதல் என்பது, பாவத்திலிருந்து மனம் திரும்புதல், ஆத்தும இரட்சிப்பு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், நித்திய ஜீவன் இவைகளைக்குறித்துப் பேசி மக்களை வழி நடத்துதல். இத்தகைய போதனைகளை தேவனுக்கு உத்தமமும் பிரியமுமான போதகர்களால்தான் போதிக்கமுடியும். எனவேதான் பவுல் இன்றைய தியான வசனத்தின் துவக்கத்தில் "சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணின படியே" என்று கூறுகின்றார். ஆனால், பெரும்பாலான மக்கள் இத்தகைய போதனைகளை விரும்புவதில்லை. எனவே, இவற்றை போதிக்கும் ஊழியர்களுக்கு மக்கள்கூட்டம் சேர்வதுமில்லை.
ஒரு ஊழியர் எத்தகைய விதமாக பிரசங்கிக்கிறார் என்பதைக் கவனித்து அந்த மனிதன் தேவனுக்கு உகந்தவனாகப் பேசுகின்றானா அல்லது மனிதர்களைத் திருப்திப்படுத்த பேசுகின்றானா என்பதை நிதானிக்கக்கூடிய அறிவு நமக்கு வேண்டும். இன்று பல விசுவாசிகள் வேதாமத்தை வாசிப்பதே இல்லை. வாசித்தாலும் கடமைக்காக வேதாகமத்தைத் திறந்து குறிப்பிட்ட ஒரு சில வசனங்களை வாசிப்பவர்களாக இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களால் ஊழியர்களை அவர்களது போதனையின் அடிப்படையில் இனம்காண முடியாது. அவர்கள் உலக ஆசீர்வாதத்தையே விரும்புவதால் அத்தகைய போதகர்களையே நாடுவார்கள்.
இப்படி மனிதர்களைப் பிரியப்படுத்தப் போதிப்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்:-"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1 : 10 )
வேதாகம வார்த்தைகள் நம் அன்பின் ஆண்டவர் நமக்கு எழுதிக்கொடுத்த வார்த்தைகள். அவற்றை தேவ அன்போடு, அவரை இன்னும் இன்னும் அதிகமாக அறியவேண்டுமெனும் ஆர்வத்தில் வாசிக்கும்போதுதான் நாம் சத்தியத்தை அறிய முடியும். போலிகளையும் மனிதர்களைத் திருப்திப்படுத்த போதிப்பவர்ளையும் இனம்காண முடியும்.
மனிதர்களைப் பிரியப்படுத்தப் போதிக்கும் போதனைகளைக் கேட்டு வாழ்ந்தோமானால் ஆத்தும மரணத்தையும் தேவனுக்குப் பிரியமான போதனைகளைப் போதிக்கும் ஊழியர்களது போதனைகளைக் கேட்டு நடந்தோமானால் நித்திய ஜீவனையும் பெறுவோம். போதனைகளை பகுத்தறியும் பிரகாசமான மனக் கண்கள் நமக்கு ஏற்படும்படி ஜெபிப்போம்.
"விதைகளின் உள்ளே" 🌳
"விதைகளின் உள்ளே" 🌳
.jpeg)
No comments:
Post a Comment