'ஆதவன்' தியான எண்:- 1,006 அக்டோபர் 30, 2023 திங்கள்கிழமை
"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." ( சங்கீதம் 130 : 6 )
தேவனை வாழ்வில் அறிய; அவரது இரட்சிப்பைப் பெற, நாம் ஆர்வமாய்க் காத்திருக்கவேண்டும் எனும் உண்மையினை அழகிய உவமை வழியாக சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். ஜாமக்காரர் எனும் இரவுக் காவலர்களை அவர் உவமையாகக் கூறுகின்றார்.
இரவு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்காரர்களை நாம் பார்த்திருப்போம். கடுமையான கோடை வெய்யில் வாட்டும் காலத்திலும் மிகக் கடும் குளிரிலும், மழைக்காலங்களிலும் மிகவும் அவதிக்குள்ளாகி தங்கள் பணியைச் செய்கின்றனர். சுகமாக உறங்கவேண்டும் எனும் ஆர்வமும் உடல் சோர்வும் இருந்தாலும் அவர்களது பணி அவர்களைத் தூங்கவிடாது. எப்போது விடியும் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என்று அவர்கள் மனம் ஏங்கும்.
இப்படி இந்த இரவுக் காவலர்கள் ஏங்குவதைவிட அதிகமாய்த் தேவனுக்காக எனது மனம் காத்திருந்து ஏங்குகின்றது என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.
மேலும், சங்கீதம் 119 இல் நாம் வாசிக்கின்றோம், "உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது." ( சங்கீதம் 119 : 123 ) என்று.
அன்பானவர்களே, தனது உலக ஆசைகளை நிறைவேற்றுவதற்கு சங்கீத ஆசிரியர் இப்படி ஏங்கவில்லை. மாறாக, தேவனோடுள்ள உறவை அடைந்திட; ஆத்தும மீட்பினைப் பெறுவதற்கு இப்படிக் காத்திருக்கின்றேன் என்கின்றார். இன்று நமது மனம் இப்படி ஏங்குகின்றதா? இப்படி ஒரு ஏக்கம் நமக்குள் இருக்குமானால் நிச்சயமாக தேவன் நம்மிடம் நெருங்கிவருவார். அவரது இரட்சிப்பை நமக்கு வெளிப்படுத்துவார்.
புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் நியாயப்பிரமாணம் நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை இரட்சிக்கும். சங்கீதத்தில் கூறப்பட்டுள்ளதை அப்போஸ்தலரான பவுல் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு கூறுகின்றார்:- "நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.' ( கலாத்தியர் 5 : 5 ) ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு காத்திருக்கிறேன் என்று கூறுகின்றார்.
என்ன இருந்தாலும் நாம் ஆவலான இதயத்துடன் கர்த்தரது இரட்சிப்புக்குக் காத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இந்த உலகத்திலேயே நாம் ஒரு வேலைக்காக, அரசு சலுகைக்காக, கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு எனப் பல காரியங்களுக்குக் காத்திருக்கவேண்டியது இருக்கின்றது. ஆனால் இவற்றைவிட மேலான இரட்சிப்புக்கும் நித்திய ஜீவனுக்கும் நாம் எவ்வளவு அதிகம் காத்திருக்கவேண்டியது அவசியம்!!!
ஆவியானவர் நம்மை நிரப்பவும் நாம் நித்திய மீட்பினைப் பெறவும் தாகமுள்ளவர்களாக இருப்போமானால் நிச்சயமாக தேவன் தனது ஆவியால் நம்மை நிரப்புவார். "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ( ஏசாயா 44 : 3 ) என்கிறார் கர்த்தர்.
'AATHAVAN' MEDITATION No:- 1,006 October 30, 2023 Monday
"My
soul waiteth for the Lord more than they that watch for the morning: I say,
more than they that watch for the morning." (Psalms 130 : 6 )
To know God in life; The psalmist conveys the truth through a beautiful parable that we should eagerly wait for His salvation. He gives the parable of the night watchmen.
We have seen watchmen on
night patrol duty. They do their work in the scorching hot summer sun, extreme
cold and rainy season. Their work does not let them sleep despite their desire
to sleep well and their physical exhaustion. They yearn to go home and rest at
dawn.
The psalmist says that my
heart waits and longs for God more than these night watchmen long.
Also, in Psalm 119 we read, "Mine eyes fail for thy salvation, and for the word of
thy righteousness." (Psalms 119: 123)
Beloved, the psalmist did
not yearn like this to fulfill his worldly desires. Rather, to attain a
relationship with God; He says he is waiting like this to get soul redemption.
Is this what our mind longs for today? If we have such a longing in us, surely
God will come closer to us. He will reveal His salvation to us.
The
Law does not save us according to the New Testament. Rather, it is our faith in
the Lord Jesus Christ that saves us. According to the New Testament, the
apostle Paul says what is said in the psalm as follows: - "For we through
the Spirit wait for the hope of righteousness by faith." (Galatians 5:
5) Yes, he says that he waits with faith on the Lord Jesus Christ.
No matter what, we need to
wait for God's salvation with eager hearts. In this world we have to wait for
many things like a job, getting benefit under a government scheme, a seat in a
college. But how much more must we wait for salvation and eternal life than
these!!!
Surely
God will fill us with His Spirit if we thirst for the Spirit to fill us and our
eternal salvation. "For I will pour water upon him that is thirsty, and
floods upon the dry ground: I will pour my spirit upon thy seed, and my
blessing upon thine offspring:' (Isaiah 44: 3) says the Lord.
God’s Message: - ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment