ஆதவன் 🔥 992🌻 அக்டோபர் 16, 2023 திங்கள்கிழமை
"யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன." ( எரேமியா 32 : 19 )
நமது தேவனைப்பற்றியும் அவரது வல்லமைபற்றியும் இன்றைய வசனம் ஆரம்பத்தில் கூறிவிட்டு இந்த வல்லமையை அவர் மனிதர்களை நியாயம்தீர்க்கும்போது விளங்கச்செய்வார் என்று நம்மை எச்சரிக்கின்றது.
அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன என்று கூறியுள்ளபடி தேவன் நமது செயல்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். அந்த அடிப்படையிலேயே நம்மை அவர் நியாயம் தீர்ப்பார்.
ஆனால் இதனை உணராமல் "வல்லமை தாரும் தேவா" என உச்சக்குரலில் ஆர்ப்பரித்துப் பாடும் பலரும் வல்லமை பெற்று இயேசு கிறிஸ்துவைப்போல தாங்களும் அற்புதங்களும் அதிசயங்களும் செய்து மக்கள் மத்தியில் பெயர் பெறவே விரும்புகின்றனர்.
ஆம் அன்பானவர்களே, மெய்யான வல்லமை நமக்கு ஏன் தேவை என்றால் பாவத்திலிருந்து விடுபடவே. தேவ ஆவியானவரின் வல்லமை இல்லாமல் நாம் பாவத்தை மேற்கொள்ள முடியாது. சாவுக்கேதுவான நமது உடல் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்படவேண்டும். இதனையே அப்போஸ்தலரான பவுல், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று கூறுகின்றார்.
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிற தேவனை நாம் ஏமாற்றிட முடியாது. அவர் நமது ஆராதனை முறைமைகளையோ பக்தி முயற்சிகளையோ பெரிதாக எண்ணுவதில்லை. நமது இருதயம் அவரோடு ஐக்கியமில்லாமல் குறிப்பிட்ட மந்திரங்களைத் திருப்பித் திருப்பிச் சொல்வதால் பயனில்லை. வல்லமை மிக்க ஜெபம் என்று சிலர் தரும் ஜெபங்களை வாசிப்பதில் அர்த்தமில்லை.
குறிப்பிட்ட வார்த்தைகள் நம்மில் அதிர்வலையை உண்டாக்கிடும் என்றும், எனவே குறிப்பிட்ட மந்திரங்கள் தேவனை நம்மிடம் நெருங்கிடச் செய்யும் என்றும் பிற மத சகோதர்கள் கூறுவதுண்டு. உடம்பில் அதிர்வலை ஏற்படுவது முக்கியமல்ல, நமது உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியைச்செய்ய வேண்டும். நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தம் அடையவேண்டும். பாவங்களைக்குறித்த வெறுப்பு நம்மில் ஏற்பட வேண்டும்.
எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். வேதாகமம் கூறும் வழிகளுக்கு முரணான காரியங்களைச் செய்வது நம்மை தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றாது. அவனவன் வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தககதாகவும் மட்டுமே அவர் பலன் தருவார். "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆவியானவரின் துணையோடு நமது வழிகளையும் செயல்பாடுகளையும் தேவனுக்கு ஏற்புடையவையாக்குவோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
NOT MANTRAS .....
AATHAVAN 🔥 992🌻
October 16, 2023 Monday
"Great
in counsel, and mighty in work: for thine eyes are open upon all the ways of
the sons of men: to give every one according to his ways, and according to the
fruit of his doings:" (Jeremiah 32: 19)
Today's verse begins by
talking about our God and His power and warns us that He will show this power
when He judges men.
God is watching all our deeds,
as He said, " thine eyes are open upon all the ways of the sons
of men: to give every one according to his ways, and according to the fruit of
his doings” He will judge us on that basis.
But without realizing this,
there are many people who sing loudly as "God give me power" and want
to gain fame among people by doing miracles like Jesus Christ.
Yes, dear ones, why we need
real power is to be freed from sin. We cannot live a sinless life without the
power of God's Spirit. Our mortal body must be quickened by the power of the
Holy Spirit. This is what the apostle Paul said, "But if the Spirit of him that raised up Jesus from the dead dwell
in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal
bodies by his Spirit that dwelleth in you." (Romans 8: 11)
We cannot deceive God who is
great in thought and mighty in action. He does not take our worship practices
or devotional efforts seriously. It is useless to repeat certain mantras
without our heart being united with Him. There is no point in reciting the
prayers that some tell as the mighty prayer.
Other religious people say
that certain words create a vibration in us and therefore certain mantras bring
God closer to us. It is not important to vibrate our body, the Holy Spirit should
work in our hearts. We must attain holiness according to God. Hatred of sins
should arise in us.
So, we need to be cautious.
Doing things contrary to what the Bible says does not make us acceptable to
God. He will reward only what is worthy of him and according to the fruit of ones
deeds. "And,
behold, I come quickly; and my reward is with me, to give every man according
as his work shall be." (Revelation 22: 12) says the Lord Jesus
Christ. With the help of the Spirit, let us make our ways and actions
acceptable to God.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment