Tuesday, January 16, 2024

உள்ளான மனுஷனில் / IN THE INNER MAN

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,081       💚 ஜனவரி 25, 2024 💚 வியாழக்கிழமை  💚 

"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில்             வல்லமையாய்ப் பலப்படவும்," (  எபேசியர் 3 : 16 )

மனிதர்கள் அனைவரும் இரண்டு விதமாக இருக்கின்றோம். வெளி மனிதன் என்பது வெளிப்பார்வைக்கு இந்த உலகத்துக்கு நாம் எப்படித் தெரிகின்றோம் என்பதைக் குறிக்கின்றது. உள்ளான மனிதன்  என்பது நாம் மட்டுமே அறிந்த அல்லது, நாமும் தேவனும் மட்டுமே அறிந்த நமது ஆவிக்குரிய குணங்களைக் குறிக்கின்றது.  

வெளி மனிதனை நடிப்பு மூலம் நாம் பிறருக்கு அறிவித்துக்கொள்ள முடியும். அதாவது நமது உண்மை மனநிலையை மறைத்து நல்லவர்கள்போல பிறருக்கு நம்மைக் காட்டிக்கொள்ள முடியும். ஆம், இதுவே மாய்மால வாழ்க்கை. மனிதர்கள் பெரும்பாலும் இப்படி மாய்மாலம் செய்பவர்களாகவே பலவேளைகளில் இருக்கின்றனர். இப்படி நடிப்பதால் நல்லவன் என உலகத்துக்கு நம்மைக் காட்டிக்கொள்ளலாம். ஆனால் தேவனை நாம் ஏமாற்றமுடியாது.

பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் இந்த இரட்டை வாழ்க்கை இருந்தாலும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு உள்ளான மனிதன் என்பது கிறிஸ்து நமக்குள் உருவாகும்போது மெருகேறத் துவங்குகின்றது. நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்போது உள்ளான மனித வாழ்வைக் கிறிஸ்துவுக்குள் வாழத் துவங்குகின்றோம். வேதாகமமும் நமது உள்ளான மனித வளர்ச்சிக்காகவே எழுதப்பட்டுள்ளது. நமது உள்ளான ஆவிக்குரிய நிலையைப் பொறுத்தே நாம் தேவனுக்குமுன் எடைபோடப்படுகின்றோம்.  இதனையே ஆவிக்குரிய வாழ்வு என்கின்றோம்.  

இந்தநமது ஆவிக்குரிய  வாழ்வில் நாம் பலப்படவேண்டியது மிகவும் அவசியம்நாம் தேவனை அறியும் ஆரம்ப நாட்களில் ஆரம்பப் பள்ளியில் படிப்பதுபோன்ற ஒரு அனுபவத்தினுள் வாழ்கின்றோம்அங்கு அப்போதுதான் எழுத்துச் சொல்லித் தருவார்கள்ஆனால் நாம் அப்படியே இருப்பதில்லைபடிப்பில் ஒவ்வொரு  வகுப்பாக படித்து எம்.., எம்.பி .பி .எஸ் ., பொறியியல் படிப்பு என ஒரு மேலான படிப்பு நிலைக்கு வருகின்றோம் 

அதுபோலவே ஆவிக்குரிய வாழ்வும்நாம் கிறிஸ்துவை அறிந்த ஆரம்ப நிலையிலேயே இருந்துவிடக் கூடாதுகிறிஸ்து  இயேசுவில்  நாம் பலப்படவேண்டும் . பவுல் அடிகள் கூறுகிறார்"கடைசியாகஎன் சகோதரரேகர்த்தரிலும் அவருடைய  சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்." (  எபேசியர் 6 : 10 )

வல்லமை என்றதும் கிறிஸ்தவர்கள் பலரும் அதிசயங்கள்  அற்புதங்கள் செய்வதும்நோய்களைக் குணமாக்கும்   வரம்  கிடைப்பதும்தான் என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்ஆனால்உண்மையான வல்லமை என்பது பாவத்திலிருந்தும் பாவ  பழக்கங்களிலிருந்தும்  முற்றிலும் நாம் விடுதலை பெறுவதுதான்எனவேதான் பவுல் அடிகள் "அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்என்று கூறுகிறார்  பாவத்தை மேற்கொள்ளும்போது நாம் உள்ளான மனிதனில் வல்லமையாய்ப் பலப்படுகின்றோம். 

நாம் இன்னும் நமது மாம்ச எண்ணங்களிலேயே இருந்தால் நாம்  பலம் அடையவில்லை என்று பொருள்பவுல் அடிகள் கூறுகிறார், "நீங்கள் பெலனில்லாதவர்களானதால்உங்களுக்குப் போஜனங்கொடாமல்பாலைக் குடிக்கக்கொடுத்தேன்இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால்இப்பொழுதும்  உங்களுக்குப் பெலனில்லை." (  1 கொரிந்தியர் 3 : 2 )

"பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள்  இருக்கிறபடியால்நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து  மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? (  1 கொரிந்தியர் 3 : 3 )

மாம்ச எண்ணங்களான இச்சைபொறாமைகாய்மகாரம், அவதூறு,பெருமை போன்றவை அழிந்து நாம் கிறிஸ்துவின்  வல்லமையினால் பலப்படவேண்டும். ஆம் அன்பானவர்களே, மெய்யான வல்லமை தேவனுடைய ஆவியின் பலத்தினால்  உண்டாயிருக்கிறதுதேவனுடைய ஆவியின் பலம் நம்மைத்  தாங்கி வழிநடத்த வேண்டுவோம்அப்போதுதான் நாம் உள்ளான மனிதனில் வல்லமை பெற்று  கிறிஸ்துவை  உலகுக்கு அறிவிக்கிறவர்களாக  மாற  முடியும்.   


தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                               

           IN THE INNER MAN


'AATHAVAN'📖 BIBLE MEDITATION No:- 1,081    💚 January 25, 2024 💚 Thursday 💚

“….. to be strengthened with might by his Spirit in the inner man;” (Ephesians 3: 16)

All humans are of two natures – the outer man and the inner man.  The outer man refers to how we appear to the outside world. The inner man refers to our spiritual qualities that only we know, or that only we and God know.

We can express ourselves to others by pretending to be good. That means we can hide our true state of mind and present ourselves to others as good people. Yes, this is hypocrisy. Humans are often hypocritical like this. By acting like this, we can show ourselves to the world as a good person. But we cannot deceive God.

Although all men in general have this dual life, the inner man of us as Christians begins to mature as Christ forms within us. When we have our sins washed away by the blood of Christ, we begin to live the inner human life in Christ. The Bible is also written for our inner human development. We are weighed before God according to our inner spiritual condition. This is what we call spiritual life.

It is very necessary for us to be strengthened in this spiritual life of ours. In the early days of our knowledge of God, we live in an experience like that of elementary school. Only then will they teach you how to write. But we are not in that state always. We study in each class and reach a higher level of study such as MA, MPBS, Engineering studies etc.

So is the spiritual life. We must not stop at the initial stage of knowing Christ. We must be strong in Christ Jesus. Paul goes on to say, “Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might.” (Ephesians 6: 10)

Many Christians think that power means performing miracles and receiving the gift of healing. But real power is our complete freedom from sin and sinful habits. That is why Paul says “to be strengthened with might by his Spirit in the inner man;” If we  still commits sin, it means we are not strengthened in our inner man.

If we are still in our fleshly thoughts, it means that we are not strong. Paul says, " I have fed you with milk, and not with meat: for hitherto ye were not able to bear it, neither yet now are ye able.” (1 Corinthians 3: 2)

For ye are yet carnal: for whereas there is among you envying, and strife, and divisions, are ye not carnal, and walk as men?” (1 Corinthians 3: 3)

Carnal thoughts such as lust, envy, slander, pride etc. should be destroyed and we should be strengthened by the power of Christ. Yes, beloved, true power comes from the power of God's Spirit. May the power of God's Spirit sustain us and guide us. Only then can we gain power in our inner man and become proclaimers of Christ to the world.

God’s Message :- Bro. M. Geo Prakash

Sunday, January 14, 2024

மேசியாவைக் கண்டோம் / WE FOUND MESSIAH

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,080      💚 ஜனவரி 24, 2024 💚 புதன்கிழமை  💚 

"பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்." ( யோவான் 1 : 45 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது உடனிருப்பையும் உணர்ந்தவர்களாக அவரை அறிவதே மேலான அனுபவம். அதாவது வெறும் அற்புதம் அதிசயங்களைக் கண்டு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்வதைவிட கிறிஸ்துவை உண்மையாய் வாழ்விலே அனுபவித்து அவரை அறிவதும் பிறருக்கு அறிவிப்பதும் மேலானது.

இன்றைய வசனம் பிலிப்பைப்பற்றி கூறுகின்றது. பிலிப்புவை இயேசு கிறிஸ்து, "என்னைப் பின்பற்றிவா" என   அழைக்கின்றார். உடனேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற பிலிப்பு அவரோடு இருந்த அந்த ஒரு நாளிலேயே அவர்தான் மெய்யாக உலகினில் வரவேண்டிய மேசியா என்பதைக்   கண்டுகொண்டார். இயேசு கிறிஸ்து பெரிய அற்புதங்களையோ அதிசயங்களையோ பிலிப்புக்குக் காட்டவில்லை. ஆனால் கிறிஸ்துவோடு உடனிருந்த அனுபவத்தால் அவரே மேசியா என்பதைப் பிலிப்பு  கண்டுகொண்டார். 

பிலிப்பு இப்படி இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளக் காரணம் நியாயப் பிராமண நூல்களை அவர் நன்றாகக்  கற்று அறிந்திருந்ததால்தான். எனவேதான் அவர் இயேசுவைக் கண்டுகொண்ட உடனேயே நாத்தான்வேலைக் கண்டு,  "நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே." என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இயேசுவை வேதபூர்வமாக அறிந்து அவரது உடனிருப்பையும் ருசித்தவர்கள் பிலிப்பைப் போலவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் கண்டு அனுபவித்த இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். பிலிப்பு நாத்தான்வேலுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறியபோது அவன் நம்பவில்லை. அவன் பிலிப்புக்கு மறுமொழியாக, "நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான்." ( யோவான் 1 : 46 ) அதற்குப் பிலிப்பு: "வந்து பார்" என்றான்.

ஆம், நான் கூறுவதால் நீ நம்பவேண்டாம் நீயே வந்து பார். இதுபோலவே நாமும் இருக்கவேண்டும் அன்பானவர்களே. பாஸ்டர்களும் குருக்களும் கூறுவதால் அல்ல, மாறாக நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து அனுபவிக்கவேண்டும். பிலிப்பு நாத்தான்வேலுக்கு பெரிய வேத  விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. "வந்து பார்" என்று கூறி நாத்தான்வேலைக் கிறிஸ்துவிடம் அழைத்து வருகின்றார்.  

பிலிப்பைப் போல நாமும் இயேசு கிறிஸ்துவை அறியவேண்டும். ஆதியாகமம் முதல் மல்கியா முடிய பழைய ஏற்பாட்டு நூல்களில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறப்பட்டுள்ளது. பிலிப்பைப்போல நாமும் அதனைக் கண்டுகொள்ளவேண்டும். அப்படிக் காணும்போது தீர்க்கதரிசிகளின் மூலம் தேவன் பழைய ஏற்பாட்டில் பேசியுள்ளதை அறிய அறிய நமக்கு ஆச்சரியமும் கிறிஸ்துவின்மேல் விசுவாசமும் அதிகரிக்கும். பிலிப்பைப் போல நாமும் உறுதியாக அவரே மேசியா என்று பிறருக்கு அறிவிக்கத் துவங்கிவிடுவோம். 

கிறிஸ்துவிடமிருந்து அதிசயங்களைப் பெற்று அவர்மேல் விசுவாசம் கொள்வதைவிட அனுபவத்தால் அவரைக் கண்டு அவர் நம்மோடு இருந்து செயல்படுவதை உணர்ந்துகொள்வதே மேலானது.  அப்போது நாமும் பிலிப்பைப்போல, "நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே". என்று உறுதியாக அறிக்கையிடுவோம். மட்டுமல்ல, அப்போது, வேறு யாரையும் உதவிக்கு அழைத்து ஜெபிக்கமாட்டோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்        

                WE FOUND MESSIAH 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION  No:- 1,080   💚 January 24, 2024 💚 Wednesday 💚

"Philip findeth Nathanael, and saith unto him, We have found him, of whom Moses in the law, and the prophets, did write, Jesus of Nazareth, the son of Joseph." (John 1: 45)

The best experience is to know the Lord Jesus Christ and to feel His presence. In other words, it is better to experience Christ in real life and to know Him and to announce Him to others than just seeing miracles and believing in Christ.

Today's verse is about Philip. Jesus Christ calls Philip, "Follow me." Philip, who immediately followed him, found out that he was indeed the Messiah who was to come into the world on that one day he was with him. Jesus Christ did not show Philip great miracles or wonders. But through his experience with Christ, Philip knew that He was the Messiah.

The reason why Philip recognized Jesus in this way was because he was well-learned and familiar with the Old Testament texts. That is why immediately after he found Jesus, he saw Nathanael and said, "We have found him of whom Moses and the prophets wrote in the books, this is Jesus of Nazareth, the son of Joseph."

Beloved, those who know Jesus scripturally and taste his presence are like Philip. They will be eager to tell others about the Jesus Christ they have seen and experienced. When Philip told Nathanael about Jesus Christ, he did not believe him. He answered Philip, "Can there any good thing come out of Nazareth? (John 1: 46) And Philip said: "Come and see."

Yes, don't believe what I say, come and see for yourself. So should we, dear ones. Not because pastors and priests say it, but because we need to know and experience Him personally. Philip was not giving Nathanael great scriptural explanations. He brings Nathanael to Christ by saying, "Come and see."

Like Philip, we need to know Jesus Christ. Jesus Christ is mentioned in the Old Testament books from Genesis to Malachi. Like Philip, we must see it. When we see what God has spoken through the prophets in the Old Testament, we will wonder and our faith in Christ will increase. Like Philip, we will begin to proclaim to others that He is the Messiah.

It is better to see Him by experience and realize Him. Then we shall also proclaim like Philip, "we found him of whom Moses and the prophets wrote in the law, Jesus of Nazareth, the son of Joseph." We will definitely report that. Moreover, then, we will not call anyone else for help and pray to them.

God’s Message :- Bro. M. Geo Prakash

Wednesday, January 10, 2024

கர்த்தரைத் தேடுவது / SEEKING THE LORD

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,079        💚 ஜனவரி 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை  💚 

"கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்." ( ஆமோஸ் 5 : 4 )

கர்த்தரைத் தேடுவது என்பது உண்மையான மெய் அன்போடு அவரை அறிந்துகொள்ளவேண்டும் எனும் ஆவலில் தேடுவதைக் குறிக்கின்றது. என்னைத் தேடுங்கள்; என்னிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களையல்ல, என்கிறார் தேவனாகிய கர்த்தர். அப்படி அவரைத் தேடும்போது நமது  ஆத்துமா  பிழைக்கும். 

ஒரு பெண்ணை உண்மையாய்க்  காதலிக்கும் மனிதன் அந்தப் பெண்ணை நேசிப்பதால் அவள்  தனக்கு உரியவளாகவேண்டும் என்று எண்ணுவானேத் தவிர அவளை மணமுடித்தால் தனக்கு எவ்வளவு வரதட்சணை கிடைக்கும் என்று கணக்குப்போட்டு காதலிக்கமாட்டான். அப்படிக் காதலிப்பது உண்மையான காதலுமல்ல. ஆனால் இன்று இயேசு கிறிஸ்துவை அன்புசெய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரும் அவரிடமிருந்து என்ன கிடைக்கும் என்றே எதிர்பார்த்து அவரை அன்பு செய்கின்றார். எனவே இப்படி அன்பு செய்வது கிறிஸ்துவை மெய்யாக அன்பு செய்வதல்ல.

"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." (சங்கீதம் 105: 4) என்று சங்கீதத்தில் வாசிக்கின்றோம். அவரையும் அவர் சமூகத்தையும் ஒருநாள் அல்ல, மாறாக தினமும் தேடவேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. காரணம், மெய்யான ஒளியான அவர் இல்லாத வாழ்வு    இருளடைந்த வாழ்வாக அமைந்துவிடும்.

மேலும், உண்மை அன்பில்லாமல் கர்த்தரால் கிடைக்கும் உலக ஆசீர்வாதத்தைத் தேடுபவர்கள் பெரும்பாலும் ஊர் ஊராக கோவில் கோவிலாக அலைவது நாம் காணக்கூடிய ஒன்று. ஆனால் இது அர்த்தமற்றது. இதனையே ஆமோஸ் தீர்க்கதரிசி மூலம் தேவன் கூறுகின்றார், "பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்."( ஆமோஸ் 5 : 5 ) ஆம் அன்பானவர்களே, தேவன்மேல் உண்மை அன்பு இல்லாத வாழ்வு நம்மை  இப்படி அலையவைக்கும். 

நாம் கர்த்தரைத் தேடி எங்கும் அலையவேண்டாம். நாம் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே அவரை அறியலாம், வழிபடலாம், அவரது பிரசன்னத்தை உணரலாம். ஆம், எங்கும் நிறைந்திருக்கும் கர்த்தரை நாம் எங்கும் தொழுதுகொள்ளலாம். இதனையே சமாரியா பெண்ணிடம் இயேசு கூறினார், "ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 )

அப்படி நாம் ஏன் அவரைத் தேடவேண்டும்? இன்றைய வசனம்  அதற்கும் பதில் கூறுகின்றது, "அப்பொழுது பிழைப்பீர்கள்." என்று. அதாவது நமது வாழ்வில் கர்த்தர் இல்லையானால் நாம் பிழைக்கமுடியாது. நாம் எவ்வளவு சொத்து சுகங்களோடு வாழ்ந்தாலும் அது மெய்யான உயிருள்ள வாழ்வாக இருக்காது. நாம் இந்தப் பூலோக வாழ்விலும், மறுமையிலும் பிழைத்து  வாழ வேண்டுமானால் அவரைத் தேடவேண்டியதும் அவர் நம்மோடு இருக்கவேண்டியதும் அவசியமாகும். 

உலக ஆசீர்வாதங்களுக்காக தேவனைத் தேடி வாழ்பவர்களுக்கு அவரது பிரசன்னம் வாழ்வில் இருப்பதையோ தேவ பிரசன்னம் வாழ்வில் இல்லாமல் போவதையோ கண்டுணர முடியாது. உண்டு, உறங்கி, வேலைக்குப் போவதுபோல ஜெபத்தையும் ஆலய வழிபாட்டையும் அன்றாடப் பணிபோலச் செய்துகொண்டே இருப்பார்கள்.  ஆனால் கர்த்தரைத் தேடிக்  கண்டுபிடித்தார்களுக்கு அவரது உடனிருப்பும் அது இல்லாமல் போவதும் தெளிவாகவேத்  தெரியும்.

புதிய ஏற்பாட்டின்படி விசுவாச மார்க்கத்தாராகிய நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். எனவே, நமக்காகவே தேவன்  இதனைக் கூறுகின்றார், "இஸ்ரவேல் வம்சத்தாரே என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்." அனுதினமும் அவரைத் தேடுவோம். அவரது பிரசன்னத்தில் களிகூர்ந்து மகிழ்வோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்            

                SEEKING THE LORD

‘AATHAVAN' 📖 Vedagam Dhyanam - No:- 1,079 💚 January 23, 2024 💚 Tuesday 💚

"For thus saith the LORD unto the house of Israel, Seek ye me, and ye shall live:" (Amos 5: 4)

Seeking the Lord means seeking to know Him with genuine love. Look for me; Not blessings from me, says the Lord God. When we seek Him like that, our soul will survive.

A man who truly loves a woman deserves that she should be his own because he loves her, but he does not fall in love by calculating how much dowry he will get if he marries her. Loving like that is not true love. But many who claim to love Jesus Christ today love Him expecting what they will get from Him. So, loving like this is not really loving Christ.

"Seek the LORD, and his strength: seek his face evermore." (Psalms 105: 4) we read in the Psalms. This verse tells us to seek him and his community not once, but daily. The reason is that life without Him, the true light, will be a life of darkness.

Also, what we see is that those who seek worldly blessings from the Lord without true love often wander from town to town and temple to temple. But this is pointless. This is what God says through the prophet Amos, "But seek not Bethel, nor enter into Gilgal, and pass not to Beersheba: for Gilgal shall surely go into captivity, and Bethel shall come to nought.' (Amos 5: 5) Yes dear, life without true love for God will make us wander like this.

We should not wander anywhere in search of God. We can know Him, worship Him, feel His presence right where we are. Yes, we can worship the omnipresent Lord anywhere. This is what Jesus said to the Samaritan woman, "Woman, believe me, the hour cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, worship the Father." (John 4: 21)

Why should we seek Him? Today's verse answers that too, "Then you shall live." that. That is, if there is no Lord in our lives, we cannot survive. No matter how many possessions we live with, it is not a truly living life. If we want to survive in this worldly life and in the hereafter, it is necessary to seek Him and for Him to be with us.

Those who live in search of God for worldly blessings cannot find His presence in their lives or realize the absence of God's presence in their lives. They eat, sleep, go to work and do prayer and temple worship as a daily routine. But those who seek and find the Lord know clearly His presence and His absence.

According to the New Testament we believers are spiritual Israelites. Therefore, God says this for us, “saith the LORD unto the house of Israel, Seek ye me, and ye shall live:" Let us rejoice in His presence.

God’s Message :- Bro. M. Geo Prakash                                      

Tuesday, January 09, 2024

அகந்தை / PRIDE

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,078      💚 ஜனவரி 22, 2024 💚 திங்கள்கிழமை 💚 


"அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்." ( தானியேல் 4 : 37 )

இன்றைய வசனம் பாபிலோனின் மன்னன் நேபுகாத்நேச்சார் தனது அனுபவத்தில் உணர்ந்து கூறியவை. நாம் வேதாகமத்தில்  பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று வாசிக்கின்றோம். தேவன் இப்படி எதிர்த்து நின்றாலும் அதற்கு ஈடாக அவர் கிருபையினை அளிக்கின்றார். அதாவது அவர் அதிகமான கிருபையினை அளிப்பதால் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார்.       

இதனை நாம் "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 ) என்று வாசிக்கின்றோம். அதாவது நாம், "என்னால்தான் இது சாத்தியமாயிற்று" என்று பெருமை பாராட்டாமல் அவரது கிருபையால்தான் எல்லாம் சாத்தியமாயிற்று என்று கருதி வாழவேண்டும்.

பாபிலோன் மன்னன் நேபுகாத்நேச்சார் தனது அரண்மனையில் உலாவும்போது அவனுக்கு  அவனது வல்லமையை நினைத்துப் பெருமை வந்தது. அதனால் அவன், "இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்." ( தானியேல் 4 : 30 ) ஆனால் அவன் இப்படிச் சொல்லவும் தேவன் அவனைச் சிறுமைப்படுத்தி, மாட்டைப்போலப்  புல்லை மேய வைத்தார். 

அப்படிப் புல்லை மேய்ந்து, தான் ஒன்றுமில்லை எல்லாம் தேவனால்தான் என்பது உணர்ந்துகொண்டான். அப்போது புத்தித் தெளிந்தவனாகக் கூறுகின்றான், "பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்." ( தானியேல் 4 : 35 )

அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் பெருமை நம்மை மேற்கொள்ளாமல் காத்துக்கொள்வோம். அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையுடனும் அகந்தையாகவும் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும். 

இன்று நாம் நல்ல பதவியில் இருக்கலாம், நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம், செல்வச் செழிப்பில் வாழலாம், உடல் அழகைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்காக மற்றவர்களை அற்பமாகவும் ஏளனமுமாக எண்ணவேண்டாம். கர்த்தரது கிருபையால் இதனை நாம் பெற்றுள்ளோம் என்ற தாழ்மை எப்போதும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். ஒரே நொடியில் நாம் நேபுகாத்நேச்சாரைபோல புல்லைத்தின்னும் நிலைமைக்கு வரலாம்.

அவர் பெருமையுள்ளவர்களை தாழ்த்துகின்றவர் மட்டுமல்ல, தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகின்றவர். நாம் அற்பமாக எண்ணும்  ஒருவரை தேவன் மிகவே உயர்த்தி மகிமைப்பட வைக்கவும் முடியும். "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; " ( 1 சாமுவேல் 2 : 8 )

எனவே அன்பானவர்களே, நாம் எவ்வளவு பெரிய பதவியிலோ, செல்வதிலோ, உடல் வலிமையிலோ, அழகிலோ  இருந்தாலும் தாழ்மை குணத்தை நாம் சுதந்தரித்துக் கொள்வோம். ஏனெனில், தேவனுடைய வழிகள் நியாயமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களை ஒரே நொடியில்  தாழ்த்த அவராலே ஆகும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்            

                       PRIDE

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION - 1,078        💚January 22, 2024 💚 Monday 💚

"all whose works are truth, and his ways judgment: and those that walk in pride he is able to abase." (Daniel 4: 37)

Today's verse is what Nebuchadnezzar, the king of Babylon, uttered after realizing it in his experience. We read in the Bible that God opposes the proud. Even though God resists the proud like this, He gives grace in return. That is, He opposes the proud because He bestows abundant grace.

We read this "But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble." (James 4: 6) That is, we should live with the assumption that everything is possible only because of His grace, without boasting, "This was made possible only because of me."

Babylonian king Nebuchadnezzar was proud of his power as he strolled through his palace. And so, he said, "The king spake, and said, Is not this great Babylon, that I have built for the house of the kingdom by the might of my power, and for the honour of my majesty?" (Daniel 4: 30) As soon as he said this, God humbled him and made him graze on grass like a cow.

As he grazed the grass, he realized that he is nothing and everything is because of God. Then the enlightened one says, "And all the inhabitants of the earth are reputed as nothing: and he doeth according to his will in the army of heaven, and among the inhabitants of the earth: and none can stay his hand, or say unto him, What doest thou?" (Daniel 4: 35)

Beloved, let us guard ourselves against pride in any situation. All his works are truth, and his ways are justice; It is He who humbles those who walk proudly and arrogantly.

Today we may be in a good position, be in good health, live in wealth and have physical beauty. But don't look down on others for that. We must always be humble that we have received this by God's grace. In an instant we can be like Nebuchadnezzar.

He not only humbles the proud but exalts the humble. God can greatly exalt and glorify someone we think little of. "He raiseth up the poor out of the dust, and lifteth up the beggar from the dunghill, to set them among princes, and to make them inherit the throne of glory:"(1 Samuel 2: 8)

Therefore, dear ones, no matter how great our position, wealth, physical strength or beauty, let us inherit the character of humility. For God's ways are just; He is the one who brings down in a moment those who walk proudly.

God’s Message :- Bro. M. Geo Prakash                                       

Monday, January 08, 2024

சிறுமந்தை / LITTLE FLOCK

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,077       💚 ஜனவரி 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚 

"அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்." ( 1 யோவான்  4 : 5 )

அப்போஸ்தலரான யோவான் காலத்திலும் இன்றைய காலத்தைப்போல உலக ஆசீர்வாத போதகர்கள் இருந்தனர். பெரும்பாலான மக்களும் அப்போஸ்தல உபதேசத்தை விரும்பாமல் இத்தகைய ஆசீர்வாத உபதேசங்களைத் தேடி  ஓடினார்கள். இதனைக் கண்ட யோவான் அப்போஸ்தலர், "அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்." ( 1 யோவான்  4 : 5 ) என்று கூறுகின்றார். 

மேலும் அவர் கூறுகின்றார், "நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதனாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  4 : 6 )

அதாவது ஒருவர் தேவனையும் அவரது அன்பையும் வாழ்வில் அறிந்தவரென்றால் அவர் தேவ சாத்தியங்களை சார்ந்து போதிப்பார். அதனை வாழ்வில் உணர்ந்த மக்களும் அத்தகைய போதனைகளுக்குச்   செவி  கொடுப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து அப்போஸ்தலரான யோவான் மேற்படி வசனத்தில் கூறுகின்றார், "இதனாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.".   இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் தேவனுக்குக்  விரும்புவதில்லை. அவர்கள் உடனடி ஆறுதலை மட்டுமே தேடுவார்கள். அவர்களுக்கு மனோதத்துவ முறையில்  இத்தகைய ஆசீர்வாத ஊழியர்கள் ஆறுதல் அளிக்கின்றனர். இது தேவன் அளிக்கும் ஆறுதல் அல்ல. எனவேதான் யோவான் இவர்களை "வஞ்சக ஆவி" என்று கூறுகின்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இம்மைக்கான ஆசீர்வாதத்துக்கு மட்டும் உரியவரல்ல, மாறாக முதலில் பரலோக ஆசீர்வாதமே அவர் தர விரும்புவது. அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதன்மையாகத் தேடும்போது உலக ஆசீர்வாதங்களையும் அவர் நமக்கு அருளுவார். மாறாக, உலக ஆசீர்வாதத்துக்காக மட்டுமே அவரை நாடுவோமானால் இரண்டையுமே இழந்துவிடுவோம்.  

உலகத்துக்குரியவர்கள் உலகத்துக்குரியவைகளைப் பேசிக் கொண்டிருக்கட்டும் உலக ஆசீர்வாதங்களுக்காக அலைபவர்கள்  அவர்களுக்குச் செவிகொடுக்கட்டும் கர்த்தருக்குரியவர்களாகிய நாமோ கர்த்தருக்கு உரியவற்றைப் போதிக்கும் ஊழியர்களை இனம் கண்டு அவர்களைச் சார்ந்துகொள்வோம்.

மெய்யான போதகர்களுக்கு ஆசீர்வாதத்தையே போதிக்கும் போதகர்களைவிட கூட்டம் சிறிதாகக் கூடலாம். காரணம் இந்த உலகம் கவர்சிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும்.  கவர்சியைக்காட்டித் தேவன் தனக்கு ஆள் சேர்ப்பதில்லை  மெய்யாக அவருக்குச் செவிகொடுக்கும் சிறு மனதையே அவருக்குப் போதும்.  "பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்." ( லுூக்கா 12 : 32 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்       

                  LITTLE FLOCK

‘AATHAVAN' 📖 BIBLE MEDITATION - No:- 1,077 💚 January 21, 2024 💚 Sunday 💚

"They are of the world: therefore, speak they of the world, and the world heareth them." (1 John 4: 5)

At the time of the Apostle John also there were Christian preachers who only preached world blessing like today. Most of the people did not like the apostolic preaching and ran after such blessed teachings. The apostle John saw this and said, "They are of the world: therefore, speak they of the world, and the world heareth them." (1 John 4: 5)

And he says, "We are of God: he that knoweth God heareth us; he that is not of God heareth not us. Hereby know we the spirit of truth, and the spirit of error." (1 John 4: 6)

That is, if one knows God and loves Him will teach according to God's mind. People who have realized it in life will also listen to such teachings.

Following this, the apostle John says in the above verse itself, "By this we know what the spirit of truth is and what the spirit of deceit is." People who experience various sufferings in this world are not willing to wait for God. They only seek instant comfort. They are consoled by such blessing’s preachers in a psychophysical way. This is not the true comfort God gives. That is why John calls them a "deceitful spirit."

The Lord Jesus Christ is not just for the blessing of this world, rather, He wants to give the heavenly blessing first. He will also shower us with worldly blessings as we seek first His kingdom and righteousness. On the contrary, if we seek Him only for worldly blessings, we will lose both.

Let the people of the world talk about the things of the world and let those who wander for the blessings of the world listen to them.

True preachers may have smaller crowds than preachers who preach worldly blessings. Because this world gives priority to attractiveness. God doesn't attract people by showing glamours. He really needs even a small number of people who listens to Him. "Fear not, little flock; for it is your Father's good pleasure to give you the kingdom."(Luke 12: 32)

God’s Message :- Bro. M. Geo Prakash