DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, January 15, 2026

🦋 Meditation verse - ரோமர் 5: 3, 4 / Romans 5:3–4

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1807                                   🔆 ஆதவன் 18.01.2026 ஞாயிறு          


"அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்". ( ரோமர் 5: 3, 4)

நான் PUC படிக்கும்போது ஒரு ஆங்கிலத் துணைப்பாடநூல் பாடமாக இருந்தது. அதில் ஒரு சிறுகதை, ஒரு மனிதன் துன்பங்களைச் சிரமத்துடன் கடந்துசெல்வதும் பல ஆண்டுகளுக்குப்பின் அந்தத் துன்பங்களை எண்ணிப்பார்த்து அவன், "இதற்கா நாம் அன்று இவ்வளவு வேதனை அடைந்தோம்?" என எண்ணி  மகிழ்ச்சியடைவதும் குறிக்கப்பட்டிருந்தது.  ஆம், இப்போது துன்பமாகக் காணப்படும் பல காரியங்கள் பிற்பாடு எண்ணிப்பார்க்கும்போது, நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக்கொடுக்கும். 

படிக்கின்ற மாணவர்களுக்குத் தேர்வு பெரிய உபத்திரவம்போலவே இருக்கும். ஆனால் மேல்நிலைக்குச் செல்ல அந்தத் தேர்வை அவர்கள் கடந்துசெல்லவேண்டியது அவசியமாகும். இது போலவே நமது அன்றாட வாழ்க்கையில் வரும் உபத்திரவங்கள் நமக்குத் தேவன் நடத்துகின்ற தேர்வு போன்றதாகும். இந்த உபத்திரவங்கள் வழியாகத் தேவன் நம்மைச் சோதித்துத் தகுதிப்படுத்துகின்றார். இதனை அறிந்திருந்த யோபு, "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக  விளங்குவேன்." (யோபு 23:10)  என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம். 

தேவன் மனிதர்களை உபத்திரவங்களின் மத்தியிலிருந்துதான் தேர்வு செய்கின்றார். "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." (ஏசாயா 48:10) எப்படி நாம் உபத்திரவங்களை மேற்கொள்ளுகின்றோம் என்பதனை அவர் பார்த்துக்கொண்டிருக்கின்றார். 

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்" என்கின்றார். அதாவது உபத்திரவம் நமக்குப் பொறுமையாக இருக்கவும் தேவன்மேல் நம்பிக்கையாக இருக்கவும் வழி செய்கின்றது. இப்படி தேவன்மேல் நம்பிக்கைகொள்ள உபத்திரவம் காரணமாக இருப்பதால் உபத்திரவங்களில் மேன்மைபாராட்டுகின்றோம் என்கிறார் பவுல். 

உபத்திரவங்களின்போது நாம் பொறுமையை எப்படிக் காத்துக்கொள்கின்றோம் என்பதில் நமது உண்மையினை தேவன் கண்டறிகின்றார். எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு,  "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." (யாக்கோபு 1:12) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு. ஆனால் அதனை நாம் எத்தகைய பொறுமையோடு காத்துக்கொள்கின்றோம் என்பதனையே தேவன் எடைபோட்டு நம்மை மேன்மைப்படுத்துகின்றார். தேவன் இரக்கமும் உருக்கமும் உள்ளவராக இருக்கின்றார். அவர் நம்மை எபோதும் உபத்திரவத்திலேயே வைத்துக் கொடுமைப்படுத்தமாட்டார்.  "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின்  பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்;  கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்;   கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே" (யாக்கோபு 5:11)

எனவே, நமது வாழ்வில் உபத்திரவங்கள் ஏற்படும்போது அவை தேவன் நமக்கு வைத்திருக்கும் தேர்வு என எண்ணி விசுவாசத்தோடு அந்த உபத்திரவங்களைக்  கடந்துசெல்வோம். அதற்கான பெலனைத் தேவன் நமக்குக் கொடுக்கும்படி அனுதினமும் ஜெபிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                         

“Within the Seeds” 🌳

📖 Bible Meditation No. 1807
🔆
AATHAVAN – Sunday | 18.01.2026

“And not only this, but we also celebrate in our tribulations, knowing that tribulation brings about perseverance; and perseverance, proven character; and proven character, hope.” (Romans 5:3–4)

When I was studying PUC, one of our English supplementary lessons included a short story. It described a man who passed through great suffering with much difficulty. Many years later, when he reflected on those hardships, he joyfully remarked, “Was it really for this that we suffered so much back then?” Yes, many things that appear painful in the present later become a great source of encouragement when we look back on them.

For students, examinations often seem like severe trials. Yet, to move to the next level, they must necessarily pass through those examinations. In the same way, the tribulations that come in our daily lives are like God’s examinations for us. Through these tribulations, God tests us and makes us qualified. Knowing this, Job said:

“But He knows the way I take; When He has tried me, I shall come forth as gold.” (Job 23:10)

God chooses people from the midst of tribulations.

“Behold, I have refined you, but not as silver; I have tested you in the furnace of affliction.” (Isaiah 48:10)

He carefully observes how we endure our tribulations.

In today’s meditation verse, the Apostle Paul says, “We also celebrate in our tribulations, knowing that tribulation brings about perseverance; and perseverance, proven character; and proven character, hope.” In other words, tribulation teaches us patience and leads us to place our hope firmly in God. Because tribulation becomes the cause for us to trust in God, Paul says that we rejoice even in tribulations.

During times of suffering, God discerns our sincerity by seeing how we preserve patience. That is why the Apostle James says:

“Blessed is a man who perseveres under trial; for once he has been approved, he will receive the crown of life which the Lord has promised to those who love Him.” (James 1:12)

Yes, beloved, in this world we do have tribulations. But God weighs and honors us based on the kind of patience with which we endure them. God is compassionate and merciful. He will not keep us in affliction forever to torment us.

“We count those blessed who endured. You have heard of the endurance of Job and have seen the outcome of the Lord’s dealings, that the Lord is full of compassion and is merciful.” (James 5:11)

Therefore, when tribulations arise in our lives, let us consider them as examinations appointed by God and pass through them with faith. Let us pray daily that God may grant us the strength and reward for enduring them.

God’s Message: Bro. M. Geo Prakash          

No comments: