"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1813
🔆 ஆதவன் 24.01.2026 சனி
"ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 3)
வேதாகமத்தில் நாம் பல்வேறு பரிசுத்தவான்கள் எழுதிய நிரூபங்களை வாசிக்கின்றோம். இந்த நிரூபங்கள் அவர்கள் கிறிஸ்துவோடு வாழ்ந்ததால் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு என்று கூறலாம். கிறிஸ்து அனுபவம் அவர்களது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் இவற்றை அவர்கள் எழுதிவைத்துள்ளனர். மேலும், இவை எழுதப்பட மேலான நோக்கமுண்டு. அதாவது, இவற்றை வாசிக்கும் மக்கள் அவர்கள் பெற்ற அதே கிறிஸ்து அனுபவங்களைப் பெற்று கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவேண்டும் என்பதே அந்த நோக்கமாகும்.
அப்போஸ்தலரான பவுல், யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா இவர்கள் எழுதிய நிரூபங்கள் வேதாகமத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்போது நமது ஆவிக்குரிய வாழ்வில் மேலான மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணரலாம். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்திகள் மூலம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த புதுமைகள், அவரது போதனைகளை நாம் அறிந்துகொள்கின்றோம். ஆனால், நிரூபங்கள் அந்தப் போதனைகளை வாழ்வாக்கிய மக்களின் அனுபவமாகும். எனவே, அவை நமக்கு மிகவும் தேவையாக இருக்கின்றன.
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கொரிந்து சபை மக்களை தனது ஊழியத்தினால் உருவாகிய நிரூபங்கள் என்கின்றார். ஏற்கெனவே பவுல் அப்போஸ்தலர் பல்வேறு நிரூபங்கள் எழுதியபோதிலும் அவரது போதனை மற்றும் வாழ்க்கையால் கொரிந்து சபை மக்களை உயிருள்ள நிரூபங்களாக மாற்றியுள்ளார். அதனையே அவர், "நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது" என்கின்றார்.
எல்லோரும் எப்போதும் எழுதப்பட்டிருக்கும் நிரூபங்களை வசித்துக் கொண்டிருக்கமுடியாது. ஆனால் உயிருள்ள சாட்சியுள்ள விசுவாச மக்களை எல்லோரும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க முடியும். அப்படி சந்திக்கும்போது அவர்களது சாட்சியுள்ள வாழ்க்கையே கிறிஸ்துவை எடுத்துப் போதிக்கும்.
ஆம் அன்பானவர்களே, நாமும் இப்படி நிரூபங்களாக வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்று கிறிஸ்தவத்தில் போதனைகள் அதிகம். ஆனால் பவுல் கூறுவதுபோல தேவனுடைய ஆவியினால் இருதயங்களாகிய சதையான பலகைகளில் எழுதப்பட்ட உயிருள்ள சாட்சிகள் குறைவு. கிறிஸ்துவை அறியாத மக்கள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள நிரூபங்களை வாசிப்பது கிடையாது. ஆனால் அவர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளை உலகினில் சந்திக்கின்றனர். எனவே, நமது இருதயத்தில் கிறிஸ்துவின் நிரூபங்கள் எழுதப்பட்டிருக்குமானால் நமது வாழ்க்கை நாம் போதிக்காமலேயே அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள உதவும்.
நாம் வேதாகமத்தையும் அப்போஸ்தலர்களின் நிரூபங்களையும் வாசிக்கும்போது இந்த எண்ணத்துடன் விண்ணப்பத்துடன் வாசிப்போம். "ஆண்டவரே, உமது வார்த்தைகளும் உமது பரிசுத்தவான்களது எழுத்துக்களும் என்னை மாற்றட்டும். அவை எனது இருதயமாகிய சதையான பலகையிலே எழுதப்படவும் நான் வாழ்க்கை மாற்றமடைந்து போதிக்காமல் உம்மைப் போதிக்கவும் அருள்தாரும்" என்று வேண்டுதல் செய்வோம். அப்போது நாமே கிறிஸ்துவின் நிருபமாய் மாறிடுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Within the Seeds” 🌳
📖 Bible Meditation
No. 1813
🔆 AATHAVAN –
Saturday, 24.01.2026
“You are our letter, written
in our hearts, known and read by all men; being manifested that you are a
letter of Christ, cared for by us, written not with ink but with the Spirit of
the living God, not on tablets of stone but on tablets of human hearts.” (2 Corinthians 3:2–3)
In the Bible, we read many
epistles written by holy men of God. These letters can be understood as a
collection of their experiences gained through living in close fellowship with
Christ. They recorded the impact Christ had on their lives—the transformations
and changes He brought about in them. Moreover, these epistles were written
with a higher purpose: that those who read them might receive the same
experience of Christ, come to know Him personally, and grow in their spiritual
life.
The epistles written by the
apostles Paul, James, Peter, John, and Jude are compiled in the Bible. When we
read them, we can sense profound changes taking place in our spiritual lives.
Through the Gospels of Matthew, Mark, Luke, and John, we learn about the life
history of Jesus Christ, His miracles, and His teachings. However, the epistles
present the lived experience of people who put those teachings into practice.
Therefore, they are extremely essential for us.
In today’s meditation verse,
the apostle Paul calls the believers of the Corinthian church letters produced
by his ministry. Although Paul himself wrote many epistles, through his
teaching and his life he transformed the Corinthian believers into living
epistles. That is why he says:
“You are a letter of Christ,
delivered by us, written not with ink but with the Spirit of the living God,
not on tablets of stone but on tablets of human hearts.” (2 Corinthians 3:3)
Not everyone, at all times,
can read written epistles. But everyone can encounter living, witnessing
believers in their daily lives. When such encounters happen, the believers’
testimony-filled lives themselves proclaim Christ.
Yes, beloved, we too are
called to live as such epistles. Today, Christianity abounds with teachings.
Yet, as Paul says, there is a scarcity of living witnesses—those written by the
Spirit of God on tablets of human hearts. People who do not know Christ may not
read the epistles written in the Bible, but they do encounter Christian
believers in the world. Therefore, if the epistle of Christ is written in our
hearts, our lives—without us even preaching—will help them come to know Christ.
As we read the Bible and the
epistles of the apostles, let us read them with this desire and prayer:
“Lord, let Your Word and the
writings of Your saints transform me. Let them be written on the tablet of my
heart, and grant that my life may be changed, so that without preaching, my
life itself may proclaim You.”
Then, we ourselves will
become the epistle of Christ.
God’s Message – Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment