இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: "மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்"என்றார். ( லுூக்கா 10: 41, 42)
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்த்தாள், மரியாள் எனும் சகோதரிகள் நமக்கு ஆவிக்குரிய வாழ்வைத்தொடர நல்ல படிப்பினைகளாக இருக்கின்றனர். பொதுவாகத் தங்களைப் பலரும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இன்றைய நாட்களில் நாம் மார்த்தாளைப்போன்ற கிறிஸ்தவர்களையே அதிகம் பார்க்கின்றோம்.
மார்த்தாள் வகைக் கிறிஸ்தவர்கள் ஆலயக் காரியங்களுக்காக ஓடிஓடிப் பல்வேறு காரியங்களைச் செய்கின்றார்கள். ஆலயத் திருவிழா, அசனம், பல்வேறு ஆலயப்பணிகளுக்கு நன்கொடை வசூலித்தல் என்று ஆலய வளாகத்தையே சுற்றிச்சுற்றி வருகின்றார்கள். மார்த்தாள் இயேசு கிறிஸ்துவுக்காகத்தான் உழைத்தாள். அதுபோல இவர்களும் தங்களைக் கிறிஸ்துவுக்காக உழைப்பதாகவே எண்ணிக்கொள்கின்றனர். இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல உணவளிக்கவேண்டும், அவரை நன்கு உபசரித்து வழியனுப்பவேண்டும் என்பதுதான் மார்த்தாளின் எண்ணம். இதுவே உலகமக்கள் விரும்பும் காரியமாகவும் இருக்கின்றது.
ஆனால் இதற்கு மாறாக மரியாளோ, அமைதியாக இயேசு கிறிஸ்துவின் பாதத்தருகில் அமர்ந்து அவரது உயிருள்ள வார்த்தைகளைக் கேட்பதிலேயே ஆர்வமுள்ளவளாக இருந்தாள். அவள் அவரோடுள்ள ஐக்கியத்தையே மேலானதாகக் கருதினாள். ஆனால் மார்த்தாளின் பார்வையில் மரியாள் வேலைசெய்ய மனதில்லாமல் வெட்டியாக இருப்பதாகவே தோன்றியது. எவ்வளவோ வீட்டுவேலைகள் இருக்கும்போது இவள் சும்மா இருக்கிறாளே என்று அவள் எண்ணினாள். எண்ணியது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவிடம் அவளைக்குறித்து குற்றம் சாட்டினாள்.
"ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்." (லுூக்கா 10: 40) "உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்பதன்மூலம் ஒருவிதத்தில் அவள் இயேசுவையும் குற்றப்படுத்துகின்றாள். இதுபோலவே இன்றும் பலர் இருக்கின்றனர். தங்களைப்போல எல்லோரும் ஆலயங்களுக்கென்று ஓடிஓடி உழைக்கவேண்டுமென்று எண்ணுகின்றனர். அப்படி உழைக்காதவர்களை குற்றப்படுத்துகின்றனர்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரியாளையே மேன்மையாக எண்ணினார். ஆம் அன்பானவர்களே, ஆலயங்களுக்காக உழைப்பதையல்ல, மாறாக நமது உடலாகிய ஆலயத்தை பரிசுத்தமாக காப்பாற்றவேண்டிய செயல்கள் நாம் செய்வதையே தேவன் விரும்புகின்றார். கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்முள் இறங்கிச் செயல்படவில்லையானால் நாம் பாவிகளாகவே இருப்போம். கிறிஸ்து நம்முள் இல்லையானால் நாம் பாவத்தை மேற்கொள்ள முடியாது.
உலகரீதியான உதாரணமாக ஒரு காரியத்தை நாம் எண்ணிப்பார்ப்போம், நாம் பணியாற்றும் அலுவலகத்தில் ஓடிஓடி உழைத்தாலும் நம்மிடம் உண்மையும் நல்ல ஒழுக்க குணமாகும் இல்லாதிருக்குமானால் உயரதிகாரிகள் நம்மை விரும்புவார்களா? அங்கு நாம் பணியில்தான் நிலைக்கமுடியுமா? இப்படியே தேவனும் நம்மிடம் உண்மை, தூய்மை, இவற்றையே மற்ற அனைத்தையும்விட மேலாக எதிர்பார்க்கின்றார்.
அன்பானவர்களே, தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அவரைவிட்டுப் பிரியாத உறவு. இதனையே அவர், "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்" என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, மரியாளைப்போல கிறிஸ்து எனும் நல்ல பங்கை நாம் தெரிந்துகொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அவரோடுள்ள ஐக்கியத்தில் வளரவேண்டியது அவசியம்.
பல்வேறு சரீர முயற்சியால் ஒருவேளை நாம் மக்களிடம் "ஊருக்காக உழைப்பவர்கள்" என்று பெயர்பெறலாம். ஆனால் தேவனது எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றாமல் இருந்து அவர் நம்மைக் கைவிட்டால் அதனால் பயன் என்ன? "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16: 26) என்று இயேசு கிறிஸ்து கேட்டாரே?
ஆம் அன்பானவர்களே, நாம் மார்த்தாளைப்போல அநேக காரியங்களைக்குறித்து நாமே தீர்மானம் எடுத்துக் கவலைப்பட்டு ஓடிஓடி உழைப்பதையல்ல மாறாக, மரியாளைப் போல தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து தேவ ஐக்கியத்துடன் வாழ்வதையே தேவன் விரும்புகிறார். அதுவே நாம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்லபங்கு என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் விரும்பும் நல்ல பங்கைத் தெரிந்துகொள்வோம்; இயேசு கிறிஸ்துக் கூறுவதுபோல அதுவே நம்மைவிட்டு எடுபடாததாக இருக்கும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation – No: 1,527
AATHAVAN 💚 April
12, 2025 💚
Saturday
"And Jesus answered and
said unto her, Martha, Martha, thou art careful and troubled about many things:
But one thing is needful: and Mary hath chosen that good part, which shall not
be taken away from her." – Luke 10:41–42 (KJV)
The sisters mentioned in the
Bible, Martha and Mary, offer us valuable lessons for living a spiritually
rooted life. Though many people today identify themselves as Christians, we
mostly come across Christians who resemble Martha more than Mary.
Martha-type Christians are
constantly busy with church activities—organizing festivals, preparing meals,
collecting donations for various church needs, and tirelessly running around
church premises. Like Martha, they believe they are labouring for Jesus Christ.
Martha's concern was to serve Jesus with the best meal and to care for Him
properly. This is also what the world typically admires—active, visible
service.
In contrast, Mary sat quietly
at Jesus’ feet, listening intently to His living words. She valued union with
Christ above all else. But to Martha, Mary appeared idle and indifferent to the
many pressing household tasks. Not only did Martha think this, but she even
complained about it to Jesus.
"Lord, dost thou not care
that my sister hath left me to serve alone? bid her therefore that she help
me." – Luke 10:40 (KJV)
By asking, "Dost thou not
care?" Martha was, in a way, accusing even Jesus. Similarly, today many
feel everyone must be as busy in church work as they are. Those who don’t are
often criticized and misunderstood.
Yet, Jesus Christ acknowledged
Mary as the one who made the better choice. Dear beloved, the Lord desires not
just our work for the church but rather that we keep our own bodies—our
personal temples—holy and pure. If Christ’s words do not take root and work
within us, we remain in sin. Without Christ dwelling in us, we cannot overcome
sin.
Consider a worldly example:
even if someone works tirelessly in an office, if they lack integrity and good
conduct, will their superiors truly value them? Can they remain in that
position long? In the same way, God looks not at our outward busyness but at
our inner truthfulness and holiness.
Beloved, God expects only one
thing from us—that we never be separated from Him. This is why He said, "One
thing is needful: and Mary hath chosen that good part, which shall not be taken
away from her."
Yes, dearly beloved, like
Mary, we must choose the good part—Christ Himself. It is essential that we grow
in our union with Him.
We may earn a reputation among
people as "those who work tirelessly for the community" through our
physical efforts. But if we fail to meet God's expectation and He turns away
from us, what is the use? Jesus Christ Himself asked:
"For what is a man profited, if he shall gain the whole world, and lose
his own soul? or what shall a man give in exchange for his soul?" – Matthew
16:26 (KJV)
So dear ones, instead of
exhausting ourselves like Martha over many self-decided tasks, God desires that
we, like Mary, give ear to His Word and dwell in oneness with Him. This is the
good part, the portion Jesus Christ said will never be taken away from us.
Divine Message by: Bro.
M. Geo Prakash