ஆதவன் 🔥 903🌻 ஜூலை 19, 2023 புதன்கிழமை
"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ( ஏசாயா 26 : 3 )
இன்று பல மனிதர்களிடம் இல்லாத ஒன்று மன சமாதானம். பெரிய பதவிகளிலும் புகழின் உச்சத்திலும் இருக்கும் பலர் சமாதானமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். இதனை நாம் பார்க்கும்போது மனசமாதானத்துக்கும் பதவி, புகழ், செல்வம் இவற்றுக்கும் சம்பந்தமில்லை; இவை மனிதர்களுக்கு மன சமாதானத்தைக் கொடுப்பதில்லை என்பது தெளிவாகின்றது.
நல்ல பதவியோ, செல்வமோ, புகழோ இல்லாத கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளனர். எல்லோரும் தற்கொலை செய்வதில்லை. ஆனால் ஏதோ நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் பூரண சமாதானத்துடன் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியாது. தற்கொலை எனும் முடிவினை எடுக்காவிட்டாலும் பலரது வாழ்க்கை சமாதானமில்லாமலேயே இருக்கின்றது.
ஒரு மனிதனுக்குப் பூரண சமாதானம் கார்த்தரைப் பற்றிக்கொள்வதாலேயே கிடைக்கின்றது. பூரண சமாதானம் என்பது உலகம் கொடுக்க இயலாத சமாதானம். இதனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பின்வருமாறு வாக்களித்தார்:- "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." (யோவான் 14:27)
இன்று பலரும் உலகம் கொடுக்கும் சமாதானத்தைத் தேடி மது, திரைப்படம், காளியாட்டுகளில் ஆர்வம்கொண்டு அலைந்து சமாதானம் பெற முயல்கின்றனர். இத்தகைய சிற்றின்ப காரியங்கள் முதலில் சமாதானம் தருவதுபோலத் தெரிந்தாலும் இறுதியில் பல்வேறு உடல் நோய்களையும் பிரச்சனைகளையுமே வாழ்வில் கொண்டுவந்து மேலும் அதிக சமாதானக் குறைவினை ஏற்படுத்தும்.
ஆனால் பூரண சமாதானம் கர்த்தரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கிறது. இதனையே இன்றைய வசனத்தில் நாம் "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" என வாசிக்கின்றோம். ஆம், நமது தேவன் நம்பிக்கைத் துரோகம் செய்பவரல்ல. நாம் அவரையே நம்பியிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியுமாதலால் நம்மை அவர் கைவிடமாட்டார்; பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்.
அன்பானவர்களே, சமாதானத்தின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு நாம் யாரைத்தேடி ஓடினாலும் நமக்குப் பூரண சமாதானம் கிடைக்காது. இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் கர்த்தரை மட்டுமே உறுதியாக நம்பியிருந்தால் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். எனவே, அவரையே பற்றிக்கொள்வோம்; உலகம் கொடுக்கமுடியாத சமாதானத்தைப் பெற்று மகிழ்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
PERFECT PEACE
AATHAVAN 🔥 903🌻
Wednesday, July 19, 2023
" Thou
wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he
trusteth in thee.” (Isaiah 26:3)
One thing many people lack
today is peace of mind. Many who are in great positions and at the height of
fame kill themselves by suicide. When we see this, peace of mind has nothing to
do with position, fame, and wealth; These do not give people peace of mind.
There are millions of people
in the world who have no good position, wealth, or fame. Not everyone commits
suicide. But they are living with some hope. But it cannot be said that all of
them are living in complete peace. Even if they do not take the decision to
commit suicide, many people's lives are without peace.
A man attains complete peace
only by attaching him with Jesus. Perfect peace is the peace that the world
cannot give. This is what the Lord Jesus Christ also promised as follows: -
" Peace
I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I
unto you. Let not your heart be troubled, neither let it be afraid.” ( John 14
: 27 )
Today many people are
looking for the peace offered by the world in alcohol, movies and lustful
things and try to find peace. Such sensual pursuits may seem peaceful at first
but eventually bring various physical ailments and problems into the life and
cause further loss of peace.
But perfect peace comes when
we hold fast to the Lord. This is what we read in today's verse as ""
Thou
wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he
trusteth in thee.” Yes, our God is not unfaithful. He will not forsake us
because He knows that we trust in Him; He will guard with perfect peace.
Beloved, no matter who we
run to, apart from the Lord, the source of peace, we will not find complete
peace. As today's verse says, if we only firmly believe in the Lord, He will
protect us with complete peace. Let us, therefore, cling to him; Let us enjoy
the peace that the world cannot give.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment