ஆதவன் 🔥 904🌻 ஜூலை 20, 2023 வியாழக்கிழமை
"என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்." ( மத்தேயு 12 : 30 )
தனக்கு யார் விரோதி என்பதனை கிறிஸ்து இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். பொதுவாக நாம் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களையே கிறிஸ்துவுக்கு விரோதி என்று கருத்திக்கொள்கின்றோம். எனவே ஆங்காங்கே கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் செயல்பாடுகளைக்கண்டு உள்ளம் கொதிக்கின்றோம். இது சாதாரண மத வெறியுடன்கூடிய உள்ளக்கொதிப்பு.
ஆனால் தேவன் இத்தகைய எதிர்ச்செயல்களைவிட கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள் கிறிஸ்துவோடு சேர்ந்து ஐக்கியமாயிருக்காமல் வாழ்வதனையே பெரிய கேடாகக் கருதுகின்றார். கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஒருவேளை பிற்பாடு மனம்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு கிறிஸ்து இல்லாமல் வாழ்பவர்கள் அவருக்கு விரோதிகள். அவர்கள் கிறிஸ்துவை வாழ்வில் அறிந்துகொள்வது கூடாத காரியம்.
மேலும், இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், இப்படி கிறிஸ்துவோடு சேராதவன் சிதறடிக்கின்றான் என்கின்றார் கிறிஸ்து.
நாம் கிறிஸ்து இல்லாமல் வாழும்போது மற்றவர்களை சேர்பதற்குப் பதில் சிதறடிக்கிறவர்களாக மாறிவிடுகின்றோம். காரணம், கிறிஸ்து இல்லாத வாழ்வில் சாத்தான் எளிதாக நுழைந்துவிடுகின்றான். ஒன்று சேர்கின்றவர் கிறிஸ்து என்றால் சிதறடிக்கிறவன் சாத்தான்தான். எனவேதான், "சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து." ( நாகூம் 2 : 1 ) என்கின்றார் நாகூம் தீர்க்கத்தரிசி.
அரண் என்பது வேலியைக் குறிக்கிறது. சிதறடிக்கிற சாத்தான் நம்முள் நுழைந்து நம்மையும் அவனைப்போல சிதறடிக்கிற மக்களாக மாற்றாமலிருக்க நாம் நமது வேலியை காத்துக்கொள்ளவேண்டும்.
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தது நமது நினைவில் எப்போதும் இருக்கவேண்டும். இன்று கிறிஸ்துவோடு ஐக்கியமில்லாத சபைகளில் சிதறடித்தல் அதிகமாக உள்ளதை நாம் காண்கின்றோம். அரசியல் தேர்தலைவிட இந்தச் சபைகளில் தேர்தல் சந்தி சிரிக்கும் வகையில் இருக்கின்றது. காவல்நிலையம், நீதிமன்றம் என சபைத் தலைவர்கள் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். காரணம் சிதறடித்தல்.
பிரதான மேய்ப்பனாகிய அவரே நமக்குள் நுழைய அனுமதித்திடவேண்டும். வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிற கள்ளனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் எச்சரிக்கையாய் இருப்போம். ஆம், கிறிஸ்துவோடு இணைந்திருக்கவில்லையானால் நாம் கிறிஸ்துவுக்கு விரோதிகளாகவும், ஒருமைப்பாட்டுடன் சேர்க்கிறவர்களாக இல்லாமல் சாத்தானின் குணத்துடன் சிதறடிக்கிறவர்களாக மாறிவிடுவோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
SCATTERER
AATHAVAN 🔥 904🌻
Thursday, July 20, 2023
"He
that is not with me is against me; and he that gathereth not with me scattereth
abroad." ( Matthew 12 : 30 )
Christ
Jesus is referring here to who is his enemy. Usually, we think of those who act
against Christians as the enemies. So, we are heartbroken to see activities
against Christians here and there. It is fervor with ordinary religious
fanaticism.
But
God considers the people who claim to be Christians who do not live in union
with Christ to be a greater evil than people doing anti actions against
Christians. Those who work against Christ may later repent and accept Christ.
But those who claim to be Christians and live without Christ are his enemies
and it is impossible for them to know Christ in life.
Also,
in today's verse for meditation, Christ says that whoever does not join with Christ
is scattered.
When we
live without Christ, we become scatterers instead of gatherers. The reason is
that Satan easily enters a life without Christ. Christ is the one who unites,
Satan is the one who scatters. Hence, “He that dasheth in pieces is
come up before thy face: keep the munition, watch the way, make thy loins
strong, fortify thy power mightily.” (Nahum 2: 1) Nahum the prophet said.
Munition
means the fence. We should keep our fence strong and safe so that Satan, the
scatterer could not enter in us and spoil our life.
He
that is not with me is against me; Jesus Christ's warning that he who does not gather
with me scatters should always be in our memory. Today we see a lot of
scattering in churches that are not in union with Christ. The council election in
these churches is more laughable than a political election. Leaders of the
council are wandering towards the police station and the court. Scattered mind
is the reason.
We
should allow He, the Chief Shepherd, to let in of us. Let us beware of the
thief and the robber who does not enter through the door, but climbs in by
another way. Yes, if we are not united with Christ, we will become anti-Christ
and disintegrating with Satan's character instead of unity.
God’s
Message:- ✍️
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment