ஆதவன் 🔥 909🌻 ஜூலை 25, 2023 செவ்வாய்க்கிழமை
"மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். " ( சங்கீதம் 115 : 17, 18 )
துதித்தல் என்பது கார்த்தரைப் புகழ்தல் என்று பொருள். இப்படிக் கூறுவதால் சாதாரண உலகத் தலைவர்களைப்போல தன்னைப் புகழ்வதை கர்த்தர் விரும்புகின்றார் என்று பொருளல்ல. மனிதர்கள் தன்மேலுள்ள அன்பினால் தன்னைப் பெருமைப்படுத்துவதை தேவன் விரும்புகின்றார். கர்த்தரது அன்பை உணர்ந்த ஒருவர் தன்னை அறியாமலேயே நன்றியுணர்வுடன் கார்த்தரைப் புகழுவார். இன்றைய வசனம், "மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்." என்று கூறுகின்றது. அதாவது ஆவியில் உணர்வும் உயிரும் இல்லாமல் மரித்துப்போயிருப்பவர்கள் மட்டுமே கர்த்தரைத் துதிக்கமாட்டார்கள் என்று கூறுகின்றது.
அப்படியில்லாமல் ஜீவனுள்ளவர்களாய் வாழும் "நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். " என்கின்றது இன்றைய வசனம். "கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 1 ) என்று ஆரம்பிக்கும் சங்கீதம் ஒரு துதியின் சங்கீதம். இந்த சங்கீதத்தில் கர்த்தர் செய்த அரும்பெரும் செயல்களை ஒவ்வொன்றாகச் சொல்லி துதிக்கின்றார் சங்கீதக்காரர்.
"கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) ஏன் கர்த்தரைப் புகழுவது ஏற்றதாய் இருக்கின்றது? அன்பானவர்களே, துதிக்கும்போது நமது கட்டுகள், வியாதிகள் நீங்குகின்றன. துதிக்கும் மனிதனைச் சாத்தான் நெருங்க அஞ்சுவான். துதியினால் விடுதலை உண்டு.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் "நடுராத்திரியிலே ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25,26 ) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, சிலவேளைகளில் அதிக துன்பங்கள், பிரச்சனைகள் நம்மை நெருங்கும்போது நம்மால் ஊக்கமுடன் ஜெபிக்கமுடியாது. அந்த நேரங்களில் நாம் அமைதியாக தேவனைத் துதித்துக்கொண்டிருந்தாலே விடுதலை கிடைக்கும். "ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்." ( எபிரெயர் 13 : 15 )
மேலும், அப்போஸ்தலராகிய பவுல் அடிகள், ஸ்தோத்திரம் செய்வது நம்மைக்குறித்த தேவ சித்தம் என்று கூறுகின்றார். "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 ) தேவ சித்தம் செய்து ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
PRAISE
AAHAVAN 🔥 909🌻 Tuesday, July 25, 2023
"The
dead praise not the LORD, neither any that go down into silence. But we will
bless the LORD from this time forth and for evermore. " (Psalms 115 : 17,
18 )
To praise
means to glorify the Lord. By saying this, it does not mean that the Lord likes
people to praise Him like ordinary world leaders. God wants men to glorify Him
by their love for Him. A person who feels God's love will unconsciously praise
the Lord with gratitude. Today's verse says, "The
dead praise not the LORD, neither any that go down into silence.” It means,
only people in spiritual death alone will not praise the Lord; all others who
have life will praise the Lord.
"Let give
thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.” (
Psalms 136 : 1 ) starts the Psalm which is known as Psalm of Praise. In this
psalm, the psalmist praises the great deeds done by the Lord one by one.
"Praise
ye the LORD: for it is good to sing praises unto our God; for it is pleasant;
and praise is comely." ( Psalms 147 : 1 ) Why is it good to praise
the Lord? Beloved, when we chant, our fetters and ailments are removed. Satan
is afraid to approach a man who praises. There is liberation through praise.
Paul and
Silas, who were locked up in prison, “And at midnight Paul and Silas prayed,
and sang praises unto God: and the prisoners heard them. And suddenly there was
a great earthquake, so that the foundations of the prison were shaken: and
immediately all the doors were opened, and every one's bands were loosed.” (
Acts 16 : 25, 26 ) we read.
Beloved,
sometimes we cannot pray with fervency when more sufferings and problems
approach us. At those times, if we are quietly praise God, we will get
liberation. “By him therefore let us offer the sacrifice of praise to God
continually, that is, the fruit of our lips giving thanks to his name.” (Hebrews
13 : 15 )
Also, the
Apostle Paul says that it is God's will for us to praise. “In everything give
thanks: for this is the will of God in Christ Jesus concerning you.” ( 1
Thessalonians 5 : 18 ) Let us do God's will and inherit the blessings.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment