ஆதவன் 🔥 905🌻 ஜூலை 21, 2023 வெள்ளிக்கிழமை
"பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்." ( யோவான் 3 : 27 )
இந்த உலக அரசாங்கத்திடமிருந்து ஏதாவது ஒன்றினை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. சில ஆதாரங்களை நாம் அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கவேண்டும். அவற்றின் அடிப்படையில் நமது விண்ணப்பத்தைச் சரிபார்த்து அரசாங்கம் நமக்கு உதவி செய்யும்.
ஆனால் நமது நாட்டில் இப்படி உதவி பெறுவது பலவேளைகளில் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கின்றது. இதனால் தகுதியுள்ளவர்கள் உதவி பெறாமலும் தகுதியற்றவர்கள் உதவிகளைப் பெற்று அனுபவிப்பதும் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.
ஆனால், பரலோக ராஜ்யத்தில் நமது நீதியுள்ள வாழ்க்கையின்படியும் தனது சித்தத்தின்படியும் தேவன் நமக்கு அனைத்தையும் அருளுகின்றார். "பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்." ஆம், பூலோக அரசாங்கத்தைப்போல ஏமாற்றோ தவறுகளோ கைக்கூலிகளோ இல்லாததால் நீதியுள்ள ராஜ்யமாக இருக்கின்றது. நமது தேவைகள், விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலித்து முடிவெடுப்பது தேவனது கரத்திலேயே உள்ளது.
இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று குறிப்பிடுகின்றார். வேற்றுமையின் நிழல் அங்கு கிடையாது. ஆள் பார்த்து உதவுபவரல்ல தேவன்.
அன்பானவர்களே, எனவேதான் நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. பரலோக சித்தம் செய்யாமல், தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு நாம் பரலோக ஆசீர்வாதங்களைப் பெறமுடியாது. உலகத்திலுள்ள துன்மார்க்கர்களது செழிப்பைப் பார்த்து நாம் தேவனை தவறாக எண்ணிவிடக்கூடாது. உலக ஆசீர்வாதம் வேறு; பரலோக ஆசீர்வாதம் என்பது வேறு. உலகத்துக்குரிய வாழ்க்கை வாழ்பவன் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே பெறுவான்.
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம், தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை நாம் தேடும்போது இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களை தேவன் நமக்குத் தந்தருள்வார். ஆம் அன்பானவர்களே, பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். எனவே நாம் நமது வாழ்க்கையில் பரலோக தேவனைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு வாழவேண்டும். அப்படி வாழும்போது நன்மையான ஈவுகளும் பூரணமான வரங்களும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவரும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
PERFECT GIFTS
AATHAVAN
🔥 905🌻
Friday, July 21, 2023
"A man can receive nothing,
except it be given him from heaven." (John 3: 27)
If
we are to receive anything from this worldly government, there are certain
conditions. We have to submit - some evidence to the government. Based on them
the government will help us by checking our application.
Getting
such help from Government in our country is often difficult. Government
officers and officials are corrupted and demand bribe. This results in
deserving people not getting help and ineligible people getting the help.
But
in the kingdom of heaven God bestows all things on us according to our
righteous life and according to His will. "A man can receive nothing, except it be given
him from heaven." Yes, it is a righteous kingdom because
there is no deception, mistakes, or bribes like the earthly government. It is
in God's hands to consider and decide all our needs and requests.
This
is what the apostle James also said, "Every good gift and every perfect gift is
from above, and cometh down from the Father of lights, with whom is no
variableness, neither shadow of turning." (James 1: 17) Yes, there
is no shadow of difference. God has no partiality among men.
Beloved,
that is why it is necessary for us to live a godly life. Without doing the will
of heaven, we cannot receive the blessings of heaven by living a perverse life.
We must not misunderstand God by seeing the prosperity of the wicked in the
world. Worldly blessings are different; Heavenly blessings are different. He
who lives a worldly life gets only worldly blessings.
"But seek ye first the
kingdom of God, and his righteousness; and all these things shall be added unto
you." (Matthew 6 : 33 ) said Jesus Christ. Yes, God will give us the blessings of this
world when we seek the things of God's kingdom. Yes, beloved, a man receives
nothing unless it is given him from heaven. So, we should live with the aim of
satisfying the heavenly God in our life. When you live like that, perfect gift from above, cometh down from the Father
of lights, with whom is no variableness, neither shadow of turning.
God’s
Message:- ✍️
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment