"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1583 ஆதவன், 08.06.2025 ஞாயிறு
"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29 : 13 )
தேவனைத் தேடுவதற்கும் அவரை ஆராதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அவரை அறியாமலேயே ஆராதிக்கமுடியும். ஆனால் அதனால் என்ன பயன்? இன்று கடவுளை ஆராதிக்கும் அனைவரும் அவரை வாழ்வில் அறிந்தவர்களல்ல. இதனையே இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம்கூறினார், "நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்" (யோவான் 4:22) என்று.
தேவனை அறியவேண்டுமானால் முதலில் நாம் அவரை உண்மையான மனதுடன் தேடுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 )என்று இயேசு கூறவில்லையா? இன்று தேவனைத் தேடுபவர்களைவிட தேவனிடமிருந்து ஏதாவது நன்மையைப் பெறவேண்டுமெனும் ஆர்வத்தில் அவரை வழிபடுபவர்களே அதிகம்பேர். இத்தகைய மனிதர்கள் தேவனை வாழ்வில் ஒருபோதும் அறியமுடியாது.
இன்று நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித ஊழியர்களும் தங்களைத் தேடிவரும் மக்களுக்கு உலகத் தேவையை அடைந்திட ஜெபிக்கவே கற்றுக்கொடுக்கின்றனர். பல்வேறு தியானக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றபோதும் தேவனை அறிய அவை மெய்யான வழியைக் காட்டுவதில்லை. ஆம் அன்பானவர்களே, இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார், "குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?" (லூக்கா 6:39) ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரும் குருடர்களாக இருப்பதால் மக்களைப் பள்ளத்தில் தள்ளுகின்றனர்.
தேவனை அறியவேண்டுமென்றால் முதலில் அவரை வாழ்வில் அறியவேண்டும் எனும் ஆர்வம் வேண்டும். பல்வேறு தெய்வங்களை உலக மக்கள் வழிபடுகின்றனரே, இவற்றில் எது உண்மையான தேவனாக இருக்கமுடியும்? என்றாவது எண்ணிப்பார்க்கவேண்டும். ஆனால் இப்படி எண்ணிப்பார்க்கும் மனநிலையில் மக்கள் இல்லை. எந்த தெய்வத்திடம் வேண்டினால் நமது தேவைகள் சந்திக்கப்படும் என்றே பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர். எனவேதான் பலரும் தேவனை வாழ்வில் அறியமுடியாமல் இருக்கின்றனர்.
தேவனை நாம் அறிய முடியாமல் தடையாக இருப்பது நமது பாவங்களே என்று வேதம் நமக்குக் கூறுகின்றது. "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." (ஏசாயா 59:2)
எனவே, நாம் தேவனை அறியவேண்டுமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எல்லா மதங்களும் பாவங்களைப்பற்றியும் பாவ மன்னிப்பைப்பற்றியும் கூறினாலும் அவை கூறும் வழிமுறைகள் வெவ்வேறு. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நதியில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் போகும் என்று சிலர் எண்ணிக்கொண்டு அவ்வாறு நதிநீரில் குளித்து எழுகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் அவர்கள் பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் காண்பதில்லை.
ஆனால் வேதம் கூறுகின்றது, "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை." (எபிரெயர் 9:22) என்று. ஆம் அன்பானவர்களே, நமக்காக தனது சுய இரத்தத்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சிப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டும்போது நாம் தேவனை அறியமுடியும்; அவரது பிள்ளைகளாக மாறி அவரது மகத்துவத்தை வாழ்வில் உணரமுடியும். காரணம், "குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்". ( 1 யோவான் 1 : 7 )
மேலும், "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." ( எபிரெயர் 10 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. முழு இருதயத்தோடு தேவனை அறியும் ஆர்வத்துடன் நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டும்போது அவரைக் கண்டுகொள்ளலாம். அவரிடமிருந்து எதனையாவது பெறவேண்டுமென்று அவரைத் தேடாமல் அவரே நமக்கு வேண்டுமென்று நாடுவோம். ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳
Scripture Meditation No. 1583
Aathavan – Sunday, 08.06.2025
"And ye shall seek me,
and find me, when ye shall search for me with all your heart." (Jeremiah
29:13)
There is a difference
between seeking God and worshipping Him. One can worship without truly knowing
Him — but what profit is there in that? Today, not everyone who worships God
truly knows Him in their life. Jesus Christ Himself told the Samaritan woman: "Ye
worship ye know not what: we know what we worship." (John 4:22)
If we truly want to know
God, it is essential that we seek Him with a sincere heart. Did not Jesus say, "For
everyone that asketh receiveth; and he that seeketh findeth; and to him that
knocketh it shall be opened" (Matthew 7:8)? Today, more people are
interested in worshipping God with the desire to receive some benefit from Him,
rather than truly seeking Him. Such individuals will never be able to truly
know God in their lives.
Even among ministers of God,
ninety out of a hundred are merely teaching people to pray for worldly needs.
Though many devotional meetings are conducted here and there, they do not lead
people on the true path to knowing God. Dear beloved, this is what Jesus
likened when He said: "Can the blind lead the blind? shall they not both
fall into the ditch?" (Luke 6:39) Many who claim to be in ministry
are spiritually blind and are leading others into spiritual ruin.
If we truly desire to know
God, it begins with a deep longing to know Him personally in our lives. The
people of the world worship many gods — but have they ever truly pondered which
of these is the living and true God? Unfortunately, most people are not even in
a mental state to think that way. They simply go after whichever deity they
believe can fulfil their needs. That is why they fail to truly know the one
true God.
The Bible clearly says that
it is our sins that hinder us from knowing God:
"But your iniquities have separated between you and your God, and your
sins have hid his face from you, that he will not hear." (Isaiah 59:2)
Therefore, for us to know
God, our sins must first be forgiven. While all religions speak about sin and
forgiveness, each provides a different method. Some believe that immersing in a
river on a specific day will wash away their sins. But even after doing so,
they do not experience the assurance, joy, or transformation that comes from
true forgiveness.
However, the Bible declares:
"Without shedding of blood is no remission." (Hebrews 9:22) Yes,
beloved, Jesus Christ the Lord has obtained salvation for us through His own
blood. When we believe this, confess our sins to Him, and seek His forgiveness,
we can truly come to know God. We are then transformed into His children and
experience His glory in our lives.
For, "The blood of
Jesus Christ his Son cleanseth us from all sin." (1 John 1:7) And, "By
the which will we are sanctified through the offering of the body of Jesus
Christ once for all." (Hebrews 10:10)
When we confess our sins
with a sincere heart and seek Him with a longing to know Him — not to gain
something from Him, but to have Him alone — we will surely find Him. Yes, the
Lord God says: "And ye shall seek me, and find me, when ye shall search
for me with all your heart." (Jeremiah 29:13)
Gospel Message: Bro. M. Geo
Prakash