ஆதவன் 🔥 961🌻 செப்டம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை
"குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 42 : 16 )
தேவனை அறியும் அறிவில் நாமெல்லோரும் குறையுள்ளவர்கள். ஆவிக்குரிய சரியான பாதையினைச் சரியாக அறியாதக் குருடர்கள். ஆனால் நாம் அவரை அறியவேண்டும், ஆவிக்குரிய வாழ்வில் வளரவேண்டும் என்று விரும்பினால் இன்றைய வசனம் கூறுவதுபோல நம்மை அவர் நாம் அறியாத வழியிலே நடத்தி, நமக்குத் தெரியாத பாதைகளில் அழைத்துக்கொண்டுவந்து, நமக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவார். இப்படிச் செய்து, நம்மைக் கைவிடாதிருப்பார்.
இதனையே அடுத்த மூன்று வசனங்களுக்குப் பின்னர் நாம் வாசிக்கின்றோம், "என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?" ( ஏசாயா 42 : 19 )
அவருக்குத் தாசனாக வாழ முயலுவோர்தான் குருடர்கள், அவரது தூதராக பணி செய்ய விரும்புவோர் குருடர்கள் , உத்தமமான வாழ்க்கை வாழ்வோர் குருடர்கள், கர்த்தருக்கு ஊழியம் செய்வோர் எல்லோருமே சரியான பாதை தெரியாத குருடர்கள்தான். ஆனால் அவர்களது ஆர்வத்தையும் முயற்சிகளையும் தேவன் பார்க்கின்றார். எனவேதான் அவர்களுக்கு இருளான பாதையில் ஒளியாகவும், கோணலான பாதையினை நேராகவும் மாற்றி உதவுவேன் என்கின்றார் கர்த்தர்.
சரியான பாதை தெரியாத குருடர்களான நாம் அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் போதும், அவர் நம்மை நோக்கி ஓடிவர ஆர்வமாக இருக்கின்றார். ஆனால் இன்று பொதுவாகப் பலரும் அவரை நோக்கிப் பார்ப்பதுபோலத் தெரிந்தாலும் அது தங்களது உலகத் தேவைக்கேத்தவிர அவருக்காக அல்ல. எனவே அவர் அமைதியாக இருக்கின்றார்.
ஒரு பெண்ணை உண்மையாகக் காதலிப்பவன் அந்தப் பெண் என்னென்ன வரதட்சணையாகக் கொண்டு வருவாள் என்று எதிர்பார்க்க மாட்டான். அதுபோல பெண்ணும் உயர்ந்த பதவி, பணம் தான் காதலிக்கும் மணமகனிடம் இருக்கின்றதா என்று கணக்குப் பார்க்க மாட்டாள். அதாவது, காதலர்களுக்கு தங்கள் காதலிக்கும் நபரோடு சேர்ந்து வாழவேண்டும் எனும் ஒரே எண்ணம்தான் இருக்கும். இதே எண்ணமும் ஆர்வமும் தேவனை அடைவதில் நம்மிடம் இருக்குமானால் இன்றைய வசனம் கூறுவதுபோல தேவன் நம்மை நடத்துவார்.
ஐயோ, என் பிள்ளை என்னிடம் வர முயலுகின்றானே / முயலுகின்றாளே என்று அவர் எண்ணுவார். தடையாக இருக்கும் பொருட்களைக் கடந்து சிறு குழந்தை தன்னிடம் வர முயலுவதைத் தாய் காணும்போது அக்குழந்தையின் குறுக்கே இருக்கும் தடைகளை அகற்றி உதவுவதுபோல தேவன் நமக்கு உதவுவார். நமது பாதைக்கு ஒளியாகவும் தடையாக இருக்கும் கோணலான வழியை நேராகவும் மாற்றி உதவிடுவார்.
அவருக்குத் தாசனாக, தூதனாக, உத்தமனாக, ஊழியக்காரனாக வாழ்வோமானால் நாம் நடக்கவேண்டிய சரியான பாதையில் அவர் நம்மை நடத்துவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
SPIRITUAL BLINDNESS
AATHAVAN 🔥 961🌻
Friday, September 15, 2023
"And I will bring the blind by a way
that they knew not; I will lead them in paths that they have not known: I will
make darkness light before them, and crooked things straight. These things will
I do unto them, and not forsake them." (Isaiah 42: 16)
We are all deficient in the
knowledge of God; blind people who do not know the correct spiritual path. But
if we have the inner desire to know Him and grow up in spiritual life, as
today's verse says, He will lead us in a way that we do not know, bring us
along paths that we do not know, and He will turn the darkness into light
before us. By doing this, he will not abandon us.
And after the next three
verses we read, "Who is blind, but my servant?
or deaf, as my messenger that I sent? who is blind as he that is perfect, and
blind as the LORD's servant?" (Isaiah 42: 19)
Those who seek to live as
his servants are blind, those who want to work as his messengers are blind,
those who lead a righteous life are blind, and those who serve God are all
blind who do not know the right path. But God sees their passion and efforts.
That is why the Lord says that He will help them to turn the dark path into
light and the crooked path into a straight one.
As blind people who do not
know the right path, it is enough for us to take a step towards Him, and He is
eager to run towards us. But today it seems that many people look towards him,
but not for their worldly needs. So, he is silent.
A man who truly loves a woman does not expect what dowry she will bring. Likewise, a woman does not consider whether the groom she loves has a high position or money. That is, lovers have only one intention to live together with their loved one. If we have the same intention and interest in reaching God, God will help us just as a mother sees a little child trying to overcome obstacles and reach her. He lightens our path and turns the crooked path into a straight one.
If we live as His servants,
messengers, perfect and upright and God’s servants, He will guide us in the
right path that we should walk.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash