Friday, February 16, 2024

இயேசுவும் பரபாசும் / JESUS AND BARABBAS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,106    💚 பிப்ரவரி 19, 2024 💚 திங்கள்கிழமை 💚  


"அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." ( மாற்கு 15 : 15 )

பொதுவாக அன்று முதல் இன்றுவரை அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது பதவியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களாக இருக்கின்றார்களேத்  தவிர நீதி, நேர்மை எதனையும் பார்ப்பதில்லை. எப்படி நடந்துகொண்டால் மக்கள் பிரியப்படுவார்களோ அதன்படியே நடக்கின்றனர்.  

இயேசு கிறிஸ்து குற்றமற்றவர் என்பதைப் பிலாத்து உணர்ந்திருந்தான். அவரை விடுதலை செய்யவேண்டும் என்றுதான் விரும்பினான். ஆனால் அவனது பதவி ஆசை அவனைத் துணிந்து செயல்பட அனுமதிக்கவில்லை.  எனவே, "ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." என்று வாசிக்கின்றோம். 

இன்று கிறிஸ்தவர்களாகிய நாமும்கூட பலவேளைகளில் இப்படியே இருக்கின்றோம். மனைவியைத் திருப்திப்படுத்த, குழந்தைகளைத் திருப்திப்படுத்த, மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த என்று பல்வேறு எண்ணங்களால் கிறிஸ்துவை புறம்பே தள்ளிவிடுகின்றோம். 

இந்த வசனம் இன்னுமொரு காரியத்தையும் நமக்கு விளக்குகின்றது. பிலாத்து விடுதலை செய்தது யாரை? பரபாஸ் எனும் அநீதிக்காரனை. "கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்." ( மாற்கு 15 : 7 ) அதாவது அவன் கலவரம், கொலை, போன்ற அநீதி செயல்களில் ஈடுபட்டவன். கிறிஸ்துவுக்காக அவனை விடுதலை செய்கின்றான் பிலாத்து. நீதிமானுக்காக ஒரு அநீதிக்காரனை அவன் தேர்வுசெய்கின்றான்.

இன்றைய அரசியல்வாதிகளைப் பார்த்தாலும் இதுதான் நிலை. அவர்களுக்கு அமைதியான நீதிமான்கள் தேவையில்லை. அவர்களைக்கொண்டு அரசியல் செய்யமுடியாது; உலக அதிகாரத்தைத் தக்கவைக்க முடியாது.  அரசியல்வாதிகளுக்குத் தேவை அடிதடியில் ஈடுபடும்  துன்மார்க்கர்கள்தான். தேர்தல் நேரங்களில் அவர்கள்தான் அரசியல்வாதிகளுக்கு உதவுவார்கள். 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் ஆட்சிக்கு இத்தகைய மனிதர்கள்தான் தேவை. ஆனால் கிறிஸ்துவின் ஆட்சியில் நாம் பங்குபெறவேண்டுமானால் அவரைப்போன்ற தாழ்மை குணமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். அன்று விடுதலையான பரபாஸ் என்ன ஆனான் என்று தெரியாது. ஆனால் அன்று அநியாயமாய் குற்றம்ச்சாட்டப்பட்டு மரித்த கிறிஸ்துதான் ஜெய கிறிஸ்துவாக இன்றும் மக்களை வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். 

மக்களைப் பிரியப்படுபவர்களாக நாம் வாழவேண்டியதில்லை. என்ன வந்தாலும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே பிரியப்படுத்துபவர்களாக வாழ முயலவேண்டும். ஆம் அன்பானவர்களே அதுதான் கிறிஸ்துவுக்குள் நம்மை வெற்றி சிறந்தவர்களாக வாழச்செய்யும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

                                   JESUS AND BARABBAS 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,106 💚 February 19, 2024 💚 Monday 💚

"And so Pilate, willing to content the people, released Barabbas unto them, and delivered Jesus, when he had scourged him, to be crucified." (Mark 15:15)

Generally, people who have been in power from that day to this day are the ones who want to somehow retain their position but do not see anything about justice and fairness. They act according to the wishes of the people, even if it is an injustice, only desiring to keep up their position.

Pilate knew that Jesus Christ was innocent. He just wanted to free him. But his desire for office did not allow him to act boldly. Therefore, desiring to please the people, he let Barabbas go and handed Jesus to be crucified.

Even we Christians today are like this many times. To please the wife, to please the children, and to please the superiors, we push Christ away.

This verse also explains another thing to us. Who made Pilate free? The unrighteous Barabbas. "And there was one named Barabbas, which lay bound with them that had made insurrection with him, who had committed murder in the insurrection." (Mark 15:7) That is, he was involved in riots, murders, etc. Pilate releases him for Christ. He chooses the unrighteous over the righteous.

This is the case with today's politicians. They don't need peaceful, righteous people. They cannot do politics with them; world power cannot be sustained if they select the righteous. Politicians want grassroots villains. They are the ones who help politicians during election times.

Yes, dear ones, such men are needed for the rule of this world. But if we want to participate in the reign of Christ, it is necessary to live as humble people like him. It is not known what happened to Barabas, who was freed that day. But Christ, who was unjustly accused and died on that day, is still leading the people as the victorious Christ.

We don't have to live as people-pleasers. No matter what happens, we should try to live as those who please only the Lord Jesus Christ. Yes, beloved, that is what makes us victorious in Christ.

God's Message :- Bro. M. Geo Prakash

No comments: