Thursday, February 15, 2024

கிருபையைப் போக்கடித்தல் / FORSAKING MERCY

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,105     💚 பிப்ரவரி 18, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚  

"வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்." ( சங்கீதம் 31 : 6 )

இந்த உலகத்தில் மனிதர்கள் பல மாயமான காரியங்களை உண்மை என நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய மனிதர்களுக்கு நாம் உண்மையினை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, பணம், பதவி, புகழ், அழகு என இவைகளை நம்பி வாழ்வது வீண் மாயையை பற்றிக்கொள்வதுதான். 

மேற்குறிப்பிட்ட நிரந்தரமற்றவை அனைத்தும் அழிந்துவிடும். இவைகளால் நமக்கு நிரந்தர உதவியோ நன்மையோ கிடைப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு இவை உதவுலாமேதவிர இவைகளை நம்பி வாழ்வது வீண். உதாரணமாக, நம்மிடம் எவ்வளவோ பணமிருந்தாலும் செல்வாக்கு இருந்தாலும் ஆள் பலமிருந்தாலும் ஒரு மிகக் கொடியநோய் நமக்கு வந்துவிட்டது விட்டது என்றால் இவை எதுவுமே நமக்குத் துணைவரப்போவதில்லை. அந்த வேளைகளில் நாம் கர்த்தரைத் தேடி ஓடுவோம். 

தாவீது ராஜாவாக இருந்தாலும் இந்த சத்தியத்தை நன்கு உணர்ந்திருந்தார். எனவேதான் தான் இப்படி மாயையைப் பற்றிகொள்ளவில்லை என்பதைவிட அப்படி வீண் மாயைகளைப் பற்றிக்கொள்பவர்களையும் வெறுத்து கர்த்தரையே நம்பியிருக்கிறேன் என்று கூறுகின்றார். மாயையான ராஜ பதவியோ, செல்வமோ அல்ல; மாறாக, கர்த்தரே எனது நம்பிக்கை என்று கூறுகின்றார். 

இந்தச் சத்தியத்தை யோனா தீர்க்கதரிசி நூலிலும் நாம் வாசிக்கலாம். யோனா கூறுகின்றார், "என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." ( யோனா 2 : 7, 8 )

ஆம், யோனா தீர்க்கதரிசி கூறுவதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு விதத்தில் இப்படி மாயையை நம்பி இருந்திருக்கின்றார் என்பது புரியும். அது என்ன? அவருக்குத் தான் தீர்க்கதரிசனம் கூறியது நடைபெறாமல்போனால் தனது புகழுக்கு இழுக்கு வந்துவிடும் எனும் ஒரு எண்ணம் இருந்தது. ஆம், அவர் அப்படி ஒரு மாய எண்ணத்தில் இருந்தார். இப்போது மீன் வயிற்றிலிருந்து வேண்டும்போது அதனை உணர்ந்து அறிக்கையிடுகின்றார். "என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்" என்கின்றார். 

இதனை உணர்ந்தபின்னர், "பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." எனும் உண்மை அவரால் கூறப்படுகின்றது.  கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் நம்மையே நாம் நிதானித்துப் பார்த்து நம்மிடம் கிருபையைப் போக்கடிக்கும் செயல்பாடுகள் ஏதாவது இருக்குமானால் திருத்திக்கொள்வோம். 

உலகக் கவர்ச்சி நாட்டங்கள், வீண் பெருமைதரும் எண்ணங்கள், நமக்கு தேவன் தந்துள்ள கொடைகளின்மேல் பெருமை போன்ற எண்ணங்கள் தேவ கிருபையினைப் போக்கடித்துவிடும்.  எனவே கர்த்தரையே மேலான கொடையாகப் பற்றிக்கொள்வோம். "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 17 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

                FORSAKING MERCY

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,105 💚 February 18, 2024 💚 Sunday 💚

"I have hated them that regard lying vanities, but I trust in the LORD." (Psalms 31:6)

 In this world, people are living believing many mystical things to be true. Even if we tell such people the truth, they will not accept it. For example, having faith in money, position, fame, or beauty is clinging to vanity.

All the above impermanent things perish. These do not bring us any permanent help or benefit. It is futile to rely on them unless they help for a certain period of time. For example, no matter how much money, influence, or manpower we have, if a very deadly disease has come upon us, none of these will help us. In those times, we run to the Lord.

David was well aware of this truth, even as a king. That is why he says that he hates those who cling to such vain illusions and believes in God rather than not clinging to such illusions. Not illusory kingship or wealth; instead, he says that God is my hope.

We can also read this truth in the book of Jonah, the prophet. Jonah says, "When my soul fainted within me, I remembered the Lord, and my prayer came in unto thee, into thine holy temple; they that observe lying vanities forsake their own mercy" (Jonah 2:7–8).

Yes, if we look at what the prophet Jonah says, it is clear that he was, in some way, believing in this illusion. What is that? He had a feeling that his fame would suffer if his prophecy did not come true. Yes, he had such a mystical idea. Now he feels and reports when he prays from the fish’s belly. He says, "I thought of the Lord when my soul fainted within me."

Realising this, he says, "Those who cling to false delusions lose the grace that comes to them." We who claim to live in Christ should look at ourselves and correct ourselves if we have any activities that destroy grace.

Worldly pursuits, thoughts of vain pride, and pride in the gifts God has given us will destroy God's grace. So let us cling to the Lord as the supreme gift. “But he that glorieth, let him glory in the Lord.” (2 Corinthians 10:17)

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: