எனக்காக அழவேண்டாம் / WEEP NOT FOR ME

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,116       💚 பிப்ரவரி 29, 2024 💚 வியாழக்கிழமை 💚  

"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற  ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்இயேசு அவர்கள்  முகமாய்த்திரும்பிஎருசலேமின் குமாரத்திகளேநீங்கள்  எனக்காக  அழாமல்உங்களுக்காகவும்   உங்கள்  பிள்ளைகளுக்காகவும்        அழுங்கள்." ( லுூக்கா 23 : 27, 28 ) என்றார்.

பெரிய வியாழன் மற்றும் துக்கவெள்ளி நாட்களில் நடைபெறும் ஆராதனைச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பலருக்கு  இயேசுவின் பாடுகளும் மரணமும் மனதில் ஒரு உணர்ச்சியைத் தூண்டி கண்களில் கண்ணீர் வரவைக்கலாம்இது மன உணர்ச்சியினால் ஏற்படும் ஒரு தூண்டுதல்ஒரு சோகமான  திரைப்படத்தைப் பார்க்கும்போது பலர் அழுவதுண்டுசிலருக்கு புத்தகங்களில்  படிக்கும்   கதைகள்    இப்படி   உணர்ச்சியினைத்  தூண்டலாம்.   ஆனால்   அடுத்தச் சில   நாட்களில்  எல்லாவற்றையும்      மறந்துவிடுவார்கள்.

அன்பானவர்களேஇயேசு கிறிஸ்துவின் சித்திரவதைகளும் மரணமும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுது மறந்துபோவதற்கல்லஇப்படிப் பரிதாபப்பட்டுத் தனக்காக மக்கள் அழுவதை இயேசு விரும்பவுமில்லைஅதனையே தன்னைப் பார்த்து அழுத பெண்களுக்கு அவர் கூறுகின்றார், "நீங்கள் எனக்காக அழாமல்உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்".

பாவமும் மரணமும் எவ்வளவு கொடூரனானவை என்பதை இயேசு அறிந்திருந்தார்ஆனால் மக்களுக்கு அதனைப்பற்றி அக்கறையில்லாமலிருந்ததுஅவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் அவர்மேல் பரிதாபம்கொண்டும் அழுதனர்எனவே தங்களது பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பாமல்தங்களது குழந்தைகளது மனம்திரும்புதலைகுறித்து கவலைகொள்ளாமல் வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுவதில் பிரயோஜனமில்லை என்பதையே இயேசு கிறிஸ்து இங்குக் குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் அந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்." ( லுூக்கா 23 : 31 )  நமது வாழ்க்கைப் பட்ட மரம்போல இருக்கையில் அதனைக்குறித்துக் கவலையற்று வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து கண்ணீர்விடுவதில் அர்த்தமில்லை.

அன்பானவர்களே,இதுவரை வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானது போதும்இத்தகைய உணர்ச்சி வசப்படுவது ஒன்றுக்கும் உதவாதுநாம் மனம்திரும்பாமல்போனால் இறுதியில் அது நம்மை நரகத்துக்கு நேராகக் கொண்டு சென்றுவிடும்."ஆண்டவரேஆண்டவரே உமக்காக துக்கவெள்ளிக்கிழமைதோறும் அழுதேனல்லவா?" என்று நாம் கூறி தப்பிட          முடியாதுஏனெனில்மனம் திரும்பாமல் இருந்துகொண்டு வெறுமனே பிரசங்கங்களைக் கேட்பதோ தேவனுடைய ஆலயத்தில் நற்கருணை உட்கொள்வதோ கூட நம்மை பரலோகத்துக்கு உரிமையாளராக்காது என்று இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:-

"அப்பொழுது நீங்கள்உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமேநீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்ஆனாலும் அவர்நீங்கள் எவ்விடத்தாரோஉங்களை அறியேன்அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13 : 26 , 27 )

அன்பானவர்களேஇந்த நாட்களில் நாம் அழுவது வெறும் உணர்ச்சிவசப்பட்டுஇயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல்பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும்அதனையே இயேசு கிறிஸ்து விரும்புவார்


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

                WEEP NOT FOR ME

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,116 💚 February 29, 2024 💚 Thursday 💚

"And there followed him a great company of people and of women, which also bewailed and lamented him. But Jesus, turning unto them, said, Daughters of Jerusalem, weep not for me, but weep for yourselves and for your children." (Luke 23:27–28)

For many who attend the liturgies on Maundy Thursday and Good Friday, the suffering and death of Jesus can evoke an emotion in the heart and bring tears to the eyes. It is an emotional stimulus. Many people cry when watching a sad movie. For some people, the stories they read in books can trigger such emotions. But in the next few days, they will forget everything.

Beloved, the tortured death of Jesus Christ is not to be forgotten after a day or two of emotional weeping. Jesus did not want people to cry for him in such pity. He says the same thing to the women who wept for him: "Weep not for me, but for yourselves and your children.".

Jesus knew how horrible sin and death are. But people didn't care about it. They wept with emotion and pity for him. So, Jesus Christ is indicating here that it is useless to cry for just one or two days without repenting of your sinful life and not worrying about the repentance of your children.

And he looked at the crowd and said, "For if they do these things in a green tree, what shall be done in the dry?" (Luke 23:31) When our lives are like a dead tree, it makes no sense to live without worrying about them and weeping over the sufferings of Christ.

Beloved, enough is the addiction to mere emotions. Such sentimentality does not help anything. If we don't repent, it will eventually lead us straight to hell. "Lord, Lord, have I not wept for you every Good Friday?" We cannot get away with saying that. Because Jesus Christ has already made it clear that simply listening to sermons or partaking of the Eucharist in God's temple without repentance will not entitle us to heaven,

"Then shall ye begin to say, We have eaten and drunk in thy presence, and thou hast taught in our streets. But he shall say, I tell you, I know you not whence ye are; depart from me, all ye workers of iniquity." (Luke 13:26–27)

Beloved, may our weeping these days not be mere tears of passion and pity for Jesus Christ, but tears of repentance for sin. That is what Jesus Christ wants.

God’s Message :- Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்