Sunday, February 18, 2024

கிறிஸ்துவின்மேல் கண்களைப் பதியவைப்போம் / FIX OUR EYES ON JESUS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,108      💚 பிப்ரவரி 21, 2024 💚 புதன்கிழமை 💚  

"ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்." ( 1 தீமோத்தேயு 4 : 1 )

பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலராகிய பவுலுக்கு வெளிப்படுத்திய ஒரு தீர்க்கத்தரிசன வசனமே இன்றைய தியானம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அப்போஸ்தலரான பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்டத் தீர்க்கத்தரிசன  வெளிப்பாடு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீர்க்கத்தரிசன வெளிப்பாடு நிறைவேறும் விதமாக இன்று விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் கிறிஸ்துவைவிட குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு அடிமைகளாகிவிட்டனர். எனவே அந்த ஊழியர்கள் கூறுவது வேத அடிப்படையிலானதா இல்லையா என்பதை அவர்கள் நிதானித்துப் பார்ப்பதில்லை. 

மேலும் தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொண்டதாலும் பலருக்கு ஆவியானவரின் உதவியோடு வேதாகமத்தை வாசிக்கத் தெரிவதில்லை. ஆவிக்குரிய சபைகளுக்குச் செல்வதாகக் கூறிக்கொள்ளும் விசுவாசிகள் பலரும், "எங்க பாஸ்டர் இப்படிச்  சொன்னார்" என்று வேதாகம வசனங்களுக்குத் தங்கள் சபை  பாஸ்டர்கள் கூறிய விளக்கத்தையே கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆவியானவரின் வெளிப்படுத்தல் பெரும்பாலான இந்த மக்களுக்கு இருப்பதில்லை. இதுவே இன்றைய தாறுமாறான கிறிஸ்தவ  ஊழியங்கள் நடைபெறக் காரணம். ஆம், மக்களில் பலரும் தாங்கள்   விசுவாசிக்கும் ஊழியர்கள் சொல்வதையே உண்மை என நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் நாம் தப்பவேண்டுமானால் முதலில் இயேசு கிறிஸ்து தரும் மீட்பு அனுபவத்தை நாம் பெறவேண்டியது அவசியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகப்  பாடுபட்டு மரித்து உயிர்த்தார் என்பதே கிறிஸ்தவ விசுவாசம். இதனை ஏற்றுக்கொண்டு நமது பாவங்களை நாம் அவரிடம் அறிக்கையிட்டு நம்மை அவருக்கு ஒப்புவித்தால் நம்மை இரட்சித்துத் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவார்; தொடர்ந்து தனது ஆவியானவரால் வழிநடத்துவார். 

"பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்" என்பதே பவுல் அப்போஸ்தலர் கூறிய அந்தத் தீர்க்கத்தரிசனம். அதற்கேற்பக்   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் இவை நமக்கு ஏற்படுத்தித் தந்த மேலான இரட்சிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தி மக்களை அந்த வழியில் நடத்தாமல் இருப்பதே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயம். 

இன்று நாம் பல்வேறு அரசியல்வாதிகள் பணம் சேர்பதற்காகத் துணிந்து மனச்சாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதைப்  பார்க்கின்றோம். அதுபோலவே தேவனுடைய சுவிசேஷ சத்தியங்களை அறிந்திருந்தும் பணம் சம்பாதிக்கவேண்டும் எனும் நோக்கத்தில் தங்களது மனச்சாட்சிக்கு விரோதமாக சில கிறிஸ்தவ ஊழியர்கள் செயல்படுகின்றனர். அத்தகைய கிறிஸ்தவ ஊழியர்களே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யர்கள். அதாவது மனச்சாட்சியைக் கொன்றவர்கள். 

அப்போஸ்தலரான பவுல் மூலம் ஆவியானவர் மேலும் வெளிப்படுத்திக் கூறுகின்றார், அத்தகைய "பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்." ஆம் அன்பானவர்களே, இன்று இதுவே கிறிஸ்தவர்களிடையே நடைபெறும் போதக வஞ்சனையின் விளைவு.  அதாவது மனச் சாட்சியில் சூடுண்ட பொய்யர்களின் உபதேசத்தினால் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசின் உபதேசத்துக்கும் மக்கள் அடிமையாகி மேலான கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகிப் போகின்றனர். 

எனவே அன்பானவர்களே, மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே வஞ்சிக்கப்படாமல், வஞ்சிக்கிற  ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் தப்பி விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவேண்டியதே இற்றைய கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது. அதற்கு, ஊழியர்களையல்ல; கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும்.  ஊழியர்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கவேண்டும். 

அதிகமான மக்கள் ஒருவரை நம்பி ஓடுவதால் அவர் சத்தியத்தைப் போதிக்கின்றார் என்று பொருளல்ல; அவர் மக்களைத் திருப்திப்படுத்தப் போதிக்கின்றார் என்பதே உண்மை. வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுக்காமல் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

        FIX OUR EYES ON THE LORD GOD


'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,108 💚 February 21, 2024 💚 Wednesday 💚

"Now the Spirit speaketh expressly that in the latter times some shall depart from the faith, giving heed to seducing spirits and doctrines of devils." (1 Timothy 4:1).

Today's meditation is a prophetic verse revealed by the Holy Spirit to the Apostle Paul.

The prophetic revelation revealed to the apostle Paul two thousand years ago is taking place today. In fulfilment of this prophetic revelation, many who claim to be believers today have become slaves to certain ministers rather than Christ. So, they do not judge whether what the preachers are saying is scriptural or not.

And many professed believers do not know how to read the Bible with the help of the Spirit. Many so-called Christian believers who attend spiritual churches often say, "Our pastor said this." Most of these people do not have the revelation of the Spirit. This is the reason for today's paradoxical Christian ministries. Yes, many people believe what their trusted ministers tell them to be true.

If we want to escape from deceiving spirits and the teachings of devils, we must first experience the salvation that Jesus Christ gives. The Christian faith holds that the Lord Jesus Christ suffered, died, and rose again for our sins. If we accept this, confess our sins to Him, and entrust ourselves to Him, He will save us and reveal Himself to us; He will continue to lead us by his Spirit.

“In the latter times some shall depart from the faith, giving heed to seducing spirits and doctrines of devils," says the apostle Paul's prophecy. Accordingly, the trick of the conscience-stricken liar is to ignore the salvation that the death of the Lord Jesus Christ has brought to us and not to treat people in that way.

Today, we see various politicians daring to engage in unscrupulous activities to collect money. Likewise, some Christian workers work against their consciences in order to earn money despite preaching the gospel truths of God. Such Christian ministers are conscientious-stricken liars. That is, conscience killers.

The Spirit further reveals through the apostle Paul that "through the deception of liars, some will fall away from the faith, giving heed to seducing spirits and doctrines of devils." Yes, beloved, this is the result of the doctrinal deception that is taking place among Christians today. That is, people fall away from the higher Christian faith by becoming addicted to the deceiving spirits and the devil's teaching through the preaching of liars who have seducing spirits.

Therefore, dear ones, what Christians should do is not be deceived by the illusion of a liar who has no conscience, but to flee from such deceiving spirits and the teachings of devils and keep their faith. For that, we should not fix our faith on the ministers but on Christ. We must surrender ourselves completely to the Lord Jesus Christ without surrendering ourselves to the so-called servants.

Just because a lot of people run after someone doesn't mean he's teaching the truth; it reveals that he teaches to please people. Let us guard our faith by not listening to deceiving spirits and the doctrines of devils.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

  வேதாகமத் தியானம் - எண்:- 1,434 'ஆதவன்' 💚ஜனவரி 11 , 2025. 💚சனிக்கிழமை "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பத...