Sunday, February 11, 2024

ஜெபமா வாழ்க்கையா ? / PRAYER OR LIFE ?

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,100     💚 பிப்ரவரி 13, 2024 💚செவ்வாய்க்கிழமை 💚  

"துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்." ( நீதிமொழிகள் 15 : 8 )

மனிதர்கள் பொதுவாக தேவனையும் தங்களைப்போன்ற மனமுள்ள ஒருவராகவே எண்ணிக்கொள்கின்றனர். ஒரு அரசியல் தலைவனுக்குமுன் அவனை வாழ்த்திக் கூக்குரலிடுவது, மலர் மாலைகளை அணிவது, பால் அபிஷேகம் செய்வது இவை போன்ற செயல்கள் அவனை மகிழ்ச்சிப்படுத்தும். மனிதர்கள் தேவனையும் இப்படி மகிழும் அரசியல் தலைவனாகவே எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் தேவனோ உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கின்றவர். அவர் தூய்மையான ஒரு மனநிலையினை மனிதர்களிடம் எதிர்பார்க்கின்றார் என்பதனை பெரும்பாலும் மறந்துவிடுகின்றனர்.

மிகப் பிரமாண்டமாக பலி செலுத்துவதாலோ ஆலயங்களுக்கு விழா எடுப்பதாலோ தேவன் மகிழ்ச்சியடைந்துவிடமாட்டார்.  இத்தகைய மனிதர்களைப் பார்த்து அவர் பரிதாபப்படுவார்.  இன்றல்ல, கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன்னரே ஏசாயா தீர்க்கதரிசி மூலம் இதனை மக்களுக்குத் தேவன் தெளிவுபடுத்தினார். "உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை." ( ஏசாயா 1 : 11 )

துன்மார்க்கருடைய பலி தேவனுக்கு அருவருப்பானது என்று இன்றைய வசனம் சொல்கின்றது. கொலையும், கொள்ளையும், லஞ்சமும் வாங்கி பணத்தையும் இதர சொத்துக்களையும் சேர்த்துவிட்டு ஆலயங்களில் வந்து நின்று பலிசெலுத்துவது மனித கழிவை பரிமாறுவதுபோல அருவருப்பானது என்கின்றார் தேவனாகிய கர்த்தர். ஆனால் பலரும் ஆலயங்களில் சென்று காணிக்கைச் செலுத்துவதிலும் வணங்குவதிலும்தான் ஆர்வம்  செலுத்துகின்றார்.  

நாம் மணிக்கணக்காக ஜெபிக்கலாம், உபவாசித்து ஜெபிக்கலாம், பல்வேறு காணிக்கைகளை நேர்ச்சையாக தேவனுக்குக் கொடுத்து ஜெபிக்கலாம் ஆனால் நமது வாழ்க்கை தகுதியில்லாத வாழ்க்கையாக  இருக்குமானால் தேவன் நமது ஜெபத்தைக் கேட்கமாட்டார். "நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )

ஜெபக் குறைவுதான் உங்கள் ஆசீர்வாதத்துக்குக் காரணம், வேதம் வாசிக்காததுதான் உங்கள் இந்த கீழான நிலைமைக்குக் காரணம் என்று பல பிரசங்கங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அன்பானவர்களே, அதனைவிட முதலில் நமது வாழ்க்கைத் தூய்மையானதாக இருக்கவேண்டியது அவசியம். நமது வாழ்க்கை தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்க்கையாக இருப்பதுதான் நமது ஆசீர்வாதக் குறைவுக்குக் காரணம். 

யார் வேண்டுமானாலும், எந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் ஜெபிக்கலாம். ஆனால் எல்லா ஜெபத்தையும் தேவன் கேட்பதில்லை. மனம் வருந்தும் மன்னிப்பின் ஜெபத்தைக்கே தேவன் முன்னுரிமை கொடுப்பார். எனவே, முதலில் நமது பாவங்களை உணர்ந்து மனம்திரும்பும் ஜெபத்தை நாம் ஏறெடுத்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அது இல்லாத ஜெபம் வெற்றுக்   கூச்சல் போன்றதே.  

முதலில் "உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;" ( ஏசாயா 1 : 16 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நம்மைத் தேவனுக்குமுன் செம்மையானவர்களாக மாற்றுவோம். பலிகளும் காணிக்கைகளும் இரண்டாவது பட்சமே. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


                   PRAYER OR LIFE ?

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,100 💚 February 13, 2024 💚Tuesday 💚

"The sacrifice of the wicked is an abomination unto the Lord: but the prayer of the righteous is his delight." (Proverbs 15:8)

Humans generally think of God as having a mind like themselves. Shouting praise greetings before a political leader, wearing flower garlands, anointing the leader’ photos with milk will make him feel happy. Humans think of God as a similar political leader. God is the seer of what is. It is often forgotten that He expects from men a pure state of mind.

God will not be pleased with the grandiose sacrifices or feasts in the temples. He would feel pity for such people. Not today, God made this clear to the people through the prophet Isaiah about 750 years before the birth of Christ. 'To what purpose is the multitude of your sacrifices unto me? saith the LORD: I am full of the burnt offerings of rams, and the fat of fed beasts; and I delight not in the blood of bullocks, or of lambs, or of the goats." (Isaiah 1: 11)

Today's verse says that the sacrifice of the wicked is an abomination to God. It is abominable, says the Lord God, to take murder, robbery, and bribery and gather money and other assets and then stand and offer sacrifices in temples. But many are interested only in visiting temples and paying offerings and worshiping.

We can pray for hours, we can fast and pray, we can offer various offerings to God and pray but if our life is unworthy God will not hear our prayer. "And when ye spread forth your hands, I will hide mine eyes from you: yea, when ye make many prayers, I will not hear: your hands are full of blood." (Isaiah 1: 15)

You may have heard in many sermons that your lack of prayer is the reason for your blessing, and that not reading the scriptures is the reason for your unblessed life. But dear ones, first of all our lives must be pure. Our lack of blessings is because our lives are not pleasing to God.

Anyone can pray, no matter what life they are living. But God does not hear all prayers. God will give priority to the prayer of repentance and forgiveness. Therefore, first of all we should realize our sins and pray for repentance and get the certainty of forgiveness. Prayer without it is like empty shouting.

First "Wash you, make you clean; put away the evil of your doings from before mine eyes; cease to do evil;" (Isaiah 1: 16) says the Holy Lord. Today's verse says that the prayer of the pure is pleasing to Him. Let us make ourselves pure before God. Sacrifices and offerings are secondary.

God’s  Message :- Bro. M. Geo Prakash

No comments: