Friday, February 23, 2024

ஆவியோடும் உண்மையோடும் / SPIRIT AND IN TRUTH

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,111      💚 பிப்ரவரி 24, 2024 💚 சனிக்கிழமை 💚  

"கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்". (2 சாமுவேல் 6:16)

கர்த்தருடைய பெட்டியைத் தாவீது தனது நகரத்துக்குக் கொண்டுவர முயன்றார். கிபியாவிலுள்ள அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டப்  பெட்டி மூன்று மாதங்கள் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் இருந்தது. பின்பு அங்கிருந்து அதனைத் தாவீதின் நகரத்துக்குள் கொண்டுவந்தான். (2 சாமுவேல் 6 ஆம் அதிகாரம்) அப்போது தாவீது ராஜா மகிழ்ச்சியாக ஆவியில் நிறைந்து பெட்டியின் முன்னே ஆடிப்பாடினார்.  தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, சவுலின் மகள் மீகாள் தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.

இன்றும் இத்தகைய அவமதிப்பு நடைபெறுவதை நாம் காணலாம். ஆவிக்குரிய ஆராதனை என்பது ஆடலும் பாடலுமல்ல என்பது உண்மையாயினும் உண்மையான உள்ளத்தோடு ஆவியில் நிறைந்து ஆராதனை செய்யும் மக்கள் உண்டு. அவர்களைச் சில பாரம்பரியச்  சபையினர் கேலியும்கிண்டலும்  செய்வதுண்டு. அன்பானவர்களே, அத்தகைய மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்கவே இந்த வசனம் இன்றைய தியானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஆவிக்குரிய அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம். சிலர் தேவனது உடனிருப்பையும் கிருபையையும்  அவர் தங்களுக்குச் செய்த நன்மைகளையும் உணர்ந்து ஆவியில் நிறைந்து துதிக்கலாம். இதனையே தாவீது தன்னைப் பார்த்து நகைத்த மீகாளுக்குப் பதிலாகக் கூறுகின்றார். 

"உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய  கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத்தெரிந்துகொண்ட கர்த்தருடைய    சமூகத்தின் முன்பாக ஆடிப்பாடினேன்.  இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்". (2 சாமுவேல் 6: 21,22) என்கின்றார் தாவீது. அதாவது, நான் ராஜாதான்; ஆனால் , கர்த்தர் எனக்குச் செய்த நன்மைகளுக்காக நான் ஆடிப் பாடுவதுமட்டுமல்ல கர்த்தருக்காக இன்னும் என்னை எவ்வளவுத் தாழ்த்த முடியுமோ அவ்வளவு என்னைத் தாழ்த்தி அற்பனும் நீசனுமாக இருக்கவும் நான் தயார்தான் என்கிறார் தாவீது. 

மெய்யான ஆவிக்குரிய வாழ்வு பெருமை கொள்வது கிடையாது. பல்வேறு விதமான நகைகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டு விதவிதமாக பட்டாடைகள் அணிந்து ஆலயங்களுக்குச் செல்பவர்களுக்கு ஆவிக்குரிய இத்தகைய தாழ்ச்சி புரியாது; ஆவிக்குரிய மேலான அனுபவங்கள் தெரியாது. அவர்கள் மீகாளைபோல மற்றவர்களை அற்பமாக மதிப்பிட்டுக்கொன்டுதான் இருப்பார்கள். 

தாவீதின் உண்மையான இருதயத்தையும் அவர்  நடனமாடித் தன்னைத் துதிப்பதையும் கர்த்தர் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார். அதற்கு மாறாகத் தாவீதை அற்பமாக எண்ணிக் கேலிசெய்த மீகாளைத் தேவன் தண்டித்தார். ஆம், "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." (2 சாமுவேல் 6: 23)

எனவே அன்பானவர்களே, நாம் தேவனைத் துதிப்பதைப்போலவும் ஆராதிப்பதைப்போலவும் தான் எல்லோரும் செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்த்து மற்றவர்களைக்  கேலி செய்வது சாபத்தையே கொண்டுவரும்.  தேவனை எப்படி ஆராதிக்கவேண்டும் என்பதற்கு ஒவ்வொரு சபைப் பிரிவும் வெல்வேறு முறைகளை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு முறைதான் சரி என்று நாம் கூற முடியாது. "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ( யோவான் 4 : 24 ) என்பதே இயேசு கிறிஸ்து கூறியது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

                SPIRIT AND IN TRUTH 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,111 💚 February 24, 2024 💚 Saturday 💚

“And as the ark of the LORD came into the city of David, Michal Saul's daughter looked through a window, and saw king David leaping and dancing before the LORD; and she despised him in her heart.” (2 Samuel 6: 16)

David tried to bring the ark of the Lord to his city. The ark brought from Abinadab's house in Gibeah remained in the house of Obed-edom the Gittite for three months. Then he brought it from there into the city of David. (2 Samuel Chapter 6) Then King David with full of joy and sang and danced in front of the ark. When Saul's daughter Michal saw King David leaping and dancing before the Lord, she despised him in her heart.

We can still see such mocking taking place today. It is true that spiritual worship is not dancing and singing alone, but there are people who worship such a way in spirit with a true heart. They are mocked by some traditionalists. Beloved, this verse is given as today's meditation so that such people may be warned.

God may have given each of us different spiritual experiences. Some may feel the presence and grace of God and the good things He has done for them and be filled with praise in the spirit. This is what David says to Michal who laughed at him.

“It was before the LORD, which chose me before thy father, and before all his house, to appoint me ruler over the people of the LORD, over Israel: therefore, will I play before the LORD. And I will yet be viler than thus, and will be base in mine own sight” (2 Samuel 6: 21, 22) says David. That is, I am the king; But, David says, I am ready to humble myself as much as I can for the sake of the Lord, not only do I sing for the good things the Lord has done for me.

True spiritual life is not boasting. Those who adorn themselves with costly dresses, jewels and wear various kinds of golden bangles and go to the temples do not understand such lowliness of spirit; No higher spiritual experiences are known to them. They tend to underestimate others like Michal.

The Lord recognized and accepted David's true heart and his dancing and praising Him. On the contrary, God punished Michal for mocking David. Yes, “Therefore Michal the daughter of Saul had no child unto the day of her death.” (2 Samuel 6: 23)

So beloved, if we expect everyone else to do the same as we praise and worship God, and mocking others will bring curses. Each denomination may have different ways of worshiping God. But we cannot say that only one method is correct. “God is a Spirit: and they that worship him must worship him in spirit and in truth.” (John 4: 24)

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: