இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, February 23, 2024

நமது சுய யோசனையில் சார்ந்து / RELYING ON OUR OWN IDEAS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,113       💚 பிப்ரவரி 26, 2024 💚 திங்கள்கிழமை 💚  

"அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." ( சங்கீதம் 106 : 43 )

நமது சுய யோசனையில் சார்ந்துகொண்டு தேவனுக்கு எதிராக நாம் செயல்பட்டு வாழ்வோமானால் தேவனது பார்வையில் அது அக்கிரமமாக இருக்கும். அத்தகைய அக்கிரமம் நம்மைச் சிறுமைப்படுத்திவிடும் என எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம்.

இஸ்ரவேல் மக்களது வாழ்கையினைப் பார்த்தால்  அவர்கள் எப்போதும் தேவனுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே இருந்தனர்.  எகிப்திலிருந்து விடுதலையாகி கானான் தேசத்தை அவர்கள் சுதந்தரித்தபின் தேவன் அவர்களைப் பல்வேறு நியாயாதிபதிகள் மூலம் நடத்தினார். இறுதியில் அவர்கள் சாமுவேலிடம் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று முறையிட்டு  அவர் அவர்களுக்கு சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார். 

இஸ்ரவேல் மக்கள் தங்களை மீட்டு  இரட்சித்து வழிநடத்திய  தேவனைவிட்டு அவ்வப்போது விலகி அந்நிய தேவர்களை வழிபடத்துவங்கினர்.  எப்போதெல்லாம் அவர்கள் தடம் மாறினார்களோ அப்போதெல்லாம் தேவன் அவர்களை எதிரி ராஜாக்களுக்கு  அடிமைகளாக்கி அவர்களைச் சிறுமைப்படுத்தினார். பின்னர் தேவனிடம் மன்னிப்புக்  கேட்டு முறையிடும்போது விடுவித்தார். ஆனாலும் அவர்கள் சிறிதுகாலத்தில் மீண்டும் வழி தவறினர்.

இப்படி, "அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." 

அன்பானவர்களே, இன்று நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் தேறியவர்களாக இருக்கலாம். ஆனால் நமது வாழ்வு சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்வாக இருக்குமானால் நாம் நம்மையே சோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம். அநேகந்தரம் தேவன் நமது பாவங்களையும் தவறுகளையும் மன்னித்து விடுவித்தும் நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். நம்மை ஆய்வுசெய்து பார்ப்போம்.

இன்றும் நமக்கு ஏற்படும் பல்வேறு துன்பங்கள் பிரச்சனைகளுக்கு நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்படுவது காரணமாக இருக்கலாம்.  எனவே "என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே." ( எபிரெயர் 12 : 5 ) என்று அறிவுறுத்துகின்றது வேதம். மட்டுமல்ல இப்படி தேவன் நம்மைக் கடிந்துகொள்ளும்போது நாம் உணர்வடைந்து மனம் திரும்பவேண்டியது அவசியம்.

தேவன் இஸ்ரவேலர் தன்னைவிட்டு விலகி பாவம் செய்தபோது அவர்களை விடுவித்தாலும்  எல்லோரும் அந்த விடுதலையின் பலனை அனுபவிக்கவில்லை. பலர் அழிக்கப்பட்டனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். இஸ்ரவேலரைப்போல வணங்கா கழுத்துள்ளவர்களாக வாழ்வோமானால் எப்போதும் தேவ துணை நமக்குக் கிடைக்காது. 

எனவேதான் நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கின்றது, "அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்." ( நீதிமொழிகள் 29 : 1 )


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

          RELYING ON OUR OWN IDEAS

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,113 💚 February 26, 2024 💚 Monday 💚

"Many times did he deliver them, but they provoked him with their counsel and were brought low for their iniquity." (Psalms 106:43)

If we act and live against God, relying on our own ideas, it will be iniquity in God's eyes. Today's meditation verse warns us that such iniquity will make us low.

If you look at the lives of the people of Israel, they were always working against God. After their liberation from Egypt and their possession of the land of Canaan, God guided them through various judges. Eventually they appealed to Samuel to make them kings, and he made Saul their king.

The people of Israel often turned away from the God who saved them and led them and worshipped other gods. Whenever they deviated, God made them slaves to enemy kings and humiliated them. When they appealed to God for forgiveness, He liberated them. But they soon lost their way again.

Thus, “Many times did he deliver them, but they provoked him with their counsel and were brought low for their iniquity."

Beloved, today we may know the Lord Jesus Christ. May be well versed in spiritual life. But if our lives are belittled, we need to examine ourselves. Often, God forgives our sins and mistakes, but we may be working against Him because of our own thinking. Let us examine ourselves.

The various sufferings and problems we face today may be due to our self-conceived actions against Him. So "My son, despise not thou the chastening of the Lord, nor faint when thou art rebuked of him" (Hebrews 12:5), the scriptures advise. Not only that, when God reprimands us like this, it is necessary that we realise and repent.

God freed the Israelites when they turned away from Him and sinned, but not everyone enjoyed the fruits of that deliverance. Many were destroyed. So, it is necessary that we be careful and commit ourselves to living a life that is suitable for God. If we live like the Israelites, we will not always get God's help.

This is why Proverbs warns us: "He, that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and that without remedy." (Proverbs 29:1)

God’s Message: - Bro. M. Geo Prakash

No comments: